So Sad To See Chennai Autovala ?

கடந்த தீபாவளி தினத்தன்று மயிலையில் இருந்து கோயம்பேட்டிற்கு போக வேண்டும் அவசரத்துக்கு ஓலாவும் ஊபரும் இல்லை…. ஆட்டோ கேட்டேன்.. 350 இல் இருந்து 400 ரூபாய்க்கு அடி போட்டார்…
300 ரூபாய்க்கு பேரம் பேசி தலையால் தண்ணி குடித்து அவரை சம்மதிக்க வைத்து அவசரத்துக்கு ஆட்டோவில் ஏறி பயணித்தோம். நல்ல வேளை மழை பெய்யவில்லை.. ஒரே ஒரு தூறல் விழுந்தால் போதும் கோமனத்தை உருவி விடுவார்கள்…

காரணம் மழையில் ஆட்டோவுக்கு ஜலதோஷம் பிடித்து விட்டது என்றால் டாக்டர் பீஸ் யார் கொடுப்து…
நானும் இரண்டு வருடம் கடலூரில் ஆட்டோ ஓட்டி இருக்கின்றேன்.. எந்த ஸ்டேன்டிலும் போட்டு ஆட்டோ ஓட்டியது இல்லை. போகும் விழியில் கிடைக்கும் சவாரிதான்…

குடும்பதோடு வருபவர்களிடம் கட் அண்டு ரைட்டாக பேரம் பேசியதில்லை…

முன்பு எல்லாம் செங்கல்பட்டு பக்கம் வரும் போதே ஆசர்கானா நிறுத்த ஆட்டோவாலாவிடம் மல்லுக்கட்டி பேரம் பேசி வீடு செல்ல வேண்டும் என்று பயமே வயிற்றில் உருளும்… அந்த அளவுக்கு அடாவடியாக ரேட் கேட்பார்கள்…

இவர்களுக்கு பயந்தே நான் கார் விபத்துக்கு பிறகு கடலூருக்கு அம்மா தெவஷத்துக்கு நான் யாழினி யாழினி அம்மா மூவரும் பஜாஜ் டிஸ்கவரிலேயே கடலூர் சென்று வந்தோம்…170 கிலோ மீட்டர் நினைத்த இடத்தில் நிறுத்தி சாப்பிட்டு ஈசிஆரில் லாங் ரெய்டு போனது போல ஒரு பீல்.. மொத்தம் 350 கிலோ மீட்டர்…. செம ஜாலியான ரெய்டு…

ஆனா பெங்களுர் அப் அண்டு டவுன் 700 வேலைக்கு ஆகாது என்பதால்.. பேருத்தில் சென்றோம்.

நேற்று பெங்களூருவில் இருந்து வந்தேன்…சிலிப்பர் கோச்சில் சென்னை வந்தோம் மொத்தம் 35 பேர் ரோகினி தியேட்டர் எதிரே பேருந்து நின்றது– ஆட்டோ வேணுமா ஆட்டோ வேணுமா என்றார்கள்…

யாரும் ஏறவில்லை எல்லோரும் மொபைல் போன் எடுத்து ஓலா ஊபர் புக் பண்ண ஆரம்பித்தார்கள்… நான் பேச்சுக்கு ஒரு ஆட்டோகாரரிடம் மயிலை போக வேண்டும் என்றேன்.. 350 ரூபாய் என்றார்கள்..
ஊபார் புக் செய்தோம்…

205 ரூபாயில் டாடா இன்டிகாவில் ஏசியில் வீடு வந்து சேர்தோம் சென்னை ஆட்டோவாலாக்களை பார்க்க பாவமாகத்தான் இருந்தது..

ஆனால் அவர்கள் இன்னமும் மாறவில்லை.

#chennai #chennaiauto #chennaiautofare

https://www.youtube.com/watch?v=IdKYDbvLCsw