ஜெயிக்கிறகுதிர படத்திற்கு “ A “ சர்டிபிகேட்

சினிமா பாரடைஸ் மற்றும் சரண் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் படம் “ ஜெயிக்கிறகுதிர “
இந்த படத்தில் ஜீவன் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகிகளாக டிம்பிள் சோப்டே, சாக்ஷிஅகர்வால், அஸ்வினி ஆகியோர் நடிக்கிறார்கள். மற்றும் ஜெயப்பிரகாஷ், தலைவாசல் விஜய், கோவைசரளா, ரவிமரியா, சிங்கம் புலி, சித்ராலட்சுமணன், லிவிங்ஸ்டன், ரமேஷ்கண்ணா, மதன் பாப் யோகி பாபு, படவா கோபி, டி.பி.கஜேந்திரன், பாண்டு, ஏ.எல்.அழகப்பன், ரோபோசங்கர், இமான்அண்ணாச்சி, தீபா, ராமானுஜம், வையாபுரி, பவர்ஸ்டார், ஆதவன் ஆகியோர் நடிக்கிறார்கள்.

படம் பற்றி இயக்குனர் ஷக்தி N.சிதம்பரத்திடம் கேட்டோம்..

இந்த படம் சமீபத்தில் சென்சார் அதிகாரிகளால் பார்க்கப் பட்டு A சான்றிதழ் கொடுக்கப்பட்டது.
இன்று இளைய தலைமுறை ரசிகர்களுக்கு பிடித்த காமெடி, காதல், கொஞ்சம் கிளாமர் போன்ற அணைத்து அம்சங்களும் இருந்தால்தான் அவர்களிடம் படம் நல்ல வரவேற்பை பெரும்.அப்படி அனைத்து அம்சங்களும் உள்ள படம் தான் இந்த ஜெயிக்கிறகுதிர. படம் தொடக்கம் முதல் முடிவு வரை முழுக்க முழுக்க காமெடி கலாட்டாவாக இருக்கம். படம் விரைவில் வெளியாக உள்ளது என்றார் இயக்குனர் ஷக்தி N சிதம்பரம்.

Related posts