Shree Dayaa Foundation’s Bharat Yatra

கன்னியாகுமரியில் தொடங்கி புதுடில்லியில் முடியும் ஒரு விழிப்புணர்வு நடைபயணமாகும். இன்றைய காலக்கட்டத்தில் குழந்தைக்களுக்கு நடக்கும் சமூக குற்றங்களான பாலியல் வன்கொடுமை, குழந்தை தொழிலாளர் முறை போன்றவற்றிலிருந்து குழந்தைகளை காப்பாற்றும் விழிப்புணர்வு நடை பயணமாக பாரத் யாத்ரா நடைபெறுகிறது. செப்டமபர் 11 ஆம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கும் இப்பயணம் அக்டோபர் 15 புதுடில்லியில் முடிவைடகிறது. வரையறுக்கப்பட்ட பாதையில் பாரத் யாத்ரா ஏறத்தாழ 22 மாநிலங்களில் 11,000 கிமீ பயணமாக நடைபெற்று வருகிறது.

இன்று சென்னையில், ஸ்ரீ தயா பவுண்டேஷன் சார்பில் திருமதி. லதா ரஜினிகாந்த் அவர்கள் தலைமையில் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் கொடியிடப்பட்டு நடை பயணம் தொடங்கியது. இந்நிகழ்ச்சியில் தனுஷ், ஐஸ்வர்யா தனுஷ், சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் நோபல் பரிசு பெற்ற ஸ்ரீ கைலாஷ் சத்யார்திஜி ஆகியோரும் கலந்து கொண்டனர். மேலும் நிகழ்ச்சியில் மந்திரி மா.பா.பாண்டியராஜன் அவர்களும், டாக்டர். அன்புமனி ராமதாஸ் அவர்களும் கலந்து கொண்டனர்.