Vivegam Movie Review by Jackiesekar

விவேகம் அஜித்துக்கு 25 வது வருட கொண்டாட்ட திரைப்படம்… அப்படியான திரைப்படத்தை சிவாவிடம் ஒப்படைக்கும் போது… அதற்கு அவர் எந்த அளவுக்கு உழைத்து இருக்க வேண்டும்…??? அஜித்தை வைத்துக்கு கொண்டு கரன்ஜோகர் கதைகளை டிரை செய்ய முடியாது…
அஜித்துக்கு பெரும் புகழ் பெற்றுதந்தவை பில்லா மற்றும் மங்காத்தா… காரணம் இளைஞர்களை ஈர்க்கும் கிரைம் இவைகளில் பொதிந்து இருந்தது.. அஜித் ரசிகர்கள் அத்தனை பேரும் இளைஞர்கள் என்பதால் ஒரு கிரைம் சப்ஜெக்ட் செய்து தப்பித்துக்கொள்ளலாம் என்று சிவா முடிவு செய்து விட்டு எடுத்த படம்..
ஆனால் விவேகம் படத்துக்காக நிறைய சிவா உழைத்து இருக்கின்றார் என்பது பிரேம்களில் தெரிகின்றது..
இந்த படம் முழுக்க முழுக்க வெளிநாட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம் என்பதால் ஒரு ஆங்கில படம் பார்க்கும் பீலை கொடுக்கின்றது என்பதை மறுப்பதற்கு இல்லை
======.
சரி விவேகம் திரைப்படத்தின் கதை என்ன?
வெட்டிக்கொண்டு வா என்றால் கட்டிக்கொண்டு வரும்… ஒரு இன்டர்போல் டீம்… அஜித் விவேக் ஓபராய் இன்னும் சிலர் என ஐந்து பேர் கொண்ட குழு.. அவர்கள் தொட்ட கேஸ்கள் எல்லாம் வெற்றி.. அஜித்துக்கு திருமணம் ஆகி விடுகின்றது.. இருப்பினும் மனைவி காஜலோடு ரொமன்ஸ் செய்துக்கொண்டே டார்க்கெட்டை அச்சீவ் செய்யும் ஆள் அஜித்..
அப்படியானவர் நடஷா என்ற பெண்ணை கண்டுபிடிக்க போக.. அவர் வாழ்க்கை புரட்டி போடபடுகின்றது.. நடஷாவை கண்டு பிடித்தாரா? புரட்டி போட்டது எதை?- அதில் இருந்து அவர் வெளிவந்தாரா இல்லையா என்பதே கதை.
======
அஜித் செம ஸ்கீரின் பிரசன்ஸ்.. நிறைய மெனக்கெட்டு இருப்பது ஒவ்வோரு பிரேமிலும் தெரிகின்றது. முக்கியமாக கடைசி பைட்டில் அசத்தல்…
அக்ஷரா கொஞ்சம் சீன்தான் மனதில் நிற்கிறார்..
காஜல்… செம… அதுவும் காதலாட பாடல், பேக்ட்ராப், காஸ்ட்யூம் என்று அசத்தி இருக்கின்றார்கள்..
விவேக் ஒபராய் அஜித் புகழ்பாடுவதிலே இருக்கின்றார் தன் பெருமை பேசவேமாட்டேங்கிறார்…. அப்படி பேசினால்தான் தன்னம்பிக்கை வில்லன் என்று பொருள்..
அனிரூத்தின் பாடல்கள் துரத்திக்கொண்டு இருக்காமல் கதையின் ஓட்டத்தோடு பயணிக்கின்றன…
வெற்றியின் ஒவ்வோரு பிரேமும் ரசிக்க வைக்கின்றன… காதலாட சாங்க ஏ கிளாஸ் ரூபனின் எடிட்டிங் படத்தை பரபரப்பாக்குகின்றது.
ஜேம்ஸ்பான்ட் மற்றும் ரெய்டு ஆர்மர் ஆப் காட் திரைப்படங்களை இந்த திரைப்படம் நியாபகபடுத்த படுகின்றது..
25 வது வருடத்திய திரைப்படம்… ஒரு முறை கண்டிப்பாக பார்க்கலாம் எனும் அளவுக்கு ஆக்ஷன் கிரைம் திரில்லரில் தப்பித்து இருக்கின்றார் இயக்குனர் சிவா…

பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.

 

https://youtu.be/jdi3wGcB6Vw