பெரியார் சாக்ரடீஸ் நினைவு விருது

திராவிடர் கழக தூண்களில் ஒருவரான என்.ஆர் சாமி அவர்களின் பேரனும் சாமி திராவிட மணி மற்றும் ஜெயா அம்மையார் ஆகியோரின் மகனுமான பெரியார் சாக்ரடீஸ் அவர்கள் கடந்த 2014 ம் ஆண்டு மே 12ம் நாள் சாலை விபத்தின் காரணமாக 44ம் வயதில் உயிர் நீத்தார்.

பெரியார் திடல் மற்றும் விடுதலை நாளேட்டின் மக்கள் தொடர்பாளராகவும் பத்திரிக்கையாளராகவும் பணியாற்றிய தோழர் பெரியார் சாக்ரடீஸ் பிற்பாடு “தமிழக அரசு” இதழிலும் செய்தியாளராக அரசுப் பணி செய்து வந்தார். சீரியபண்பும் சிறந்த நுண்ணறிவும் பெரியார் கொள்கையை முன்னெடுத்துச் செல்வதில அளப்பரிய நேசமும், மனித நேயத்தின் பால் மாறாத பற்றும் கொண்ட சாக்ரடீஸ் அவர்கள் பெரியார் கொள்கையின் குணக் குன்றாகவே வாழ்ந்து காட்டியவர் .

2011ம் ஆண்டு செம்மொழி மாநாட்டையொட்டி 100 தமிழ் அறிஞர்களின் வாழ்க்கை வரலாற்றை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் முன்னாள் அமைச்சர் திரு.பரிதி இளம்வழுதி, ஆய்வாளர் டாக்டர் திரு,நாச்சிமுத்து எழுத்தாளர் திரு.அஜயன்பாலா ஆகியரோடு இதழாளர் திரு.பெரியார்சாக்ரடீஸ் அவர்களும் இணைந்து செம்மொழி சிற்பிகள் எனும் அரிய நூலை உருவாக்கி தந்து தமிழுக்கு தன் அரிய சேவையை செய்துள்ளார்.

இந்நூலை உருவாக்க அவர் மேற்கொண்ட முயற்சிகளும் காட்டிய தீவிரமும் பட்டியலை உருவாக்குவதில் அவர் காட்டிய முனைப்பும் அவரது தமிழ்த் தொண்டுக்கும் தமிழ் அறிவுக்கும் சிறந்த சான்று. பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பே மக்களுக்கு தமிழ் ஈழம் என பெயர் வைத்து அழகு பார்த்தவர்.

அப்படிப்பட்டவருடைய எண்ணங்கள் தொடர்ந்து நீடிக்கும் வகையில் அவரோடு நெருங்கி பழகிய டாக்டர் திரு.நாச்சிமுத்து, எழுத்தாளர் திரு. அஜயன் பாலா ஆகியோர் இணைந்து “பெரியார் சாக்ரடீஸ் நினைவு விருது” எனும் ஒரு அமைப்பு ஒன்றை உருவாக்கி அதன் மூலம் அவரது எண்ணமும் உணர்வும் தொடர்ந்து நம்மோடு இயக்கம் கொள்ள முடிவு செய்தோம்

அதன்படி வருடா வருடம் ஊடகம், இதழியல், இணையம், பண்பாடு சமூக சேவை மற்றும் கலாச்சார பணிகளில் அர்ப்பணிப்புடன் சீரிய தொண்டாற்றி வருபவர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது கடந்த இரண்டு ஆண்டுகளின் விழாக்கள் மற்றும் விருது பெற்றவர்களின் விவரங்களுக்கு www.periyarsocratesvirudhu.blogspot.com க்ளீக் செய்யவும்

இப்படிக்கு .

டாக்டர். நாச்சிமுத்து
எழுத்தாளர்அஜயன் பாலா
பெரியார் சாக்ரடீஸ் நினைவு விருதுக்குழு
தொடர்புக்கு : 9884060274

விருதாளர்கள் வாழ்க்கை வரலாறு

1. திவ்யா பாரதி (ஆவணப்பட இயக்குனர்) – சுய குறிப்பு :

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்தவர் வயது 24, .தாயார்.ஜெயபாரதி தந்தை கர்ணன் இருவரும் பஞ்சுமில் தொழிலாளர்கள் . சிறு வயது கம்யூனிஸ் இயக்கத்துடனான ஈடுபாடுகொண்டு மக்கள் கலை இலக்கியப் பண்பாட்டு கழகத்தின் மூலம் சமூக மாற்றத்திற்கான களப்பணிகளில் ஈடுபட்டு வருபவர். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் காட்சி ஊடக துறை மாணவி. தொடர்ந்து மதுரை சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்றவர். கல்லூரி காலங்களில் தொடர்ந்து சமூக மாற்றங்களுக்கான போராட்டங்களில் கலந்துகொண்டவர்.

தலித் மற்றும் பெண்கள் மீதான வன்முறைகளுக்கு எதிரான, போராட்டம், கவுரவ கொலைக்கு எதிரான மாணவர் போராட்டம், தலித் மாணவர் அரசு விடுதிகளை மேம்படுத்தக் கோரி தொடர் போராட்டம், ஆகியவற்றுடன் வினோதா வித்யா ஆகிய இளம் பெண்கள் மீதான் ஆசிட் வீச்சுகளூக்கு எதிரான போராட்டம், என மதுரையின் மிக முக்கியமான அரசியல் போராட்டங்களில் இவரது பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது இதன் காரண்மாக ஆனந்த விகடன் பத்திரிக்கையின் 2013ஆம் ஆண்டின் Top 10 நம்பிக்கை மனிதர்கள் பட்டியலில் முதல் நபராக இடம் பெற்றார்..

தொடர்ந்து, கையால் மலம் அள்ளும் தொழிலாளர்கள் மற்றும் துப்புரவு தொழிலாளர்களின் அவலங்களை , வலிகளை , வாழ்வியலை பதிய வைக்கும் வகையில் கக்கூஸ் எனும் ஆவணப்படத்தை இயக்கி இந்த ஆண்டு வெளியிட்டு சமூகத்தில் பெரும் அதிர்வை உண்டாக்கியவர். தொடர்ந்து பல்வேறு தடைகளையும் ஒடுக்குமுறைகளையும் எதிர்கொண்டு வருவதே இந்த ஆவணப்படத்தின் முக்கியத்துவத்தை நமக்கு உணர்த்தக்கூடியது.

2. ஜெயராணி (எழுத்தாளர்) – சுய குறிப்பு

திண்டுக்கல் மாவட்டம் அழகன்பட்டி என்ற கிராமத்தில் மீனா – மயில்வாகனன் தம்பதியருக்கு இரண்டாவது மகளாக 28.04.1978 அன்று பிறந்தார். மதுரை மீனாட்சிக் கல்லூரியில் ஆங்கில இலக்கியம் இளங்கலையும், திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தொடர்பியல் முதுகலையும் பயின்றார். கடந்த 15 ஆண்டுகளாக அச்சு மற்றும் காட்சி ஊடகங்களில் பணியாற்றி வரும் ஜெயராணி தமிழின் முன்னணி வெகுஜன இதழ்களான ஆனந்தவிகடன், குமுதம், இந்தியா டுடே போன்ற பத்திரிக்கைகளில் பணிபுரிந்த போதும் இவரது எழுத்துகள் ஒடுக்கப்பட்ட அடித்தட்டு மக்களின் பாடுகளையே பதிவு செய்தன. சாதி எதிர்ப்பு, சிறுபான்மையினர் நலன், பாலின சமத்துவம்,குழந்தைகள் உரிமை சார்ந்து நூற்றுக்கணக்கான செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார்.

தலித் முரசு இதழில் எழுதிய கட்டுரைகளில் தேர்ந்தெடுக்கப்பட்டவை மட்டும் ’ஜாதியற்றவளின் குரல்’ என்ற தலைப்பில் தொகுப்பாக கடந்த ஜனவரி 2014 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. புகைப்படக் கலைஞர், கவிஞர், சிறுகதை எழுத்தாளர் என பல்வேறு தளங்களிலும் இயங்கி வருகிறார்.

இயக்குனர் ரஞ்சித் உருவாக்கத்தில் ஜெய்பீம் மன்றம் மூலம் மேடையேற்றப்பட்ட கையால் மலமள்ளும் தொழிலாளர்களின் அவலங்களைச் சொல்லும் மஞ்சள் நாடகத்தின் திரைக்கதை பிரதியை உருவாக்கியது சமூக மாற்றத்திற்கான இவரது சீரிய பங்களிப்பு

Periyar Socrates Virudhu (1) Periyar Socrates Virudhu (2) Periyar Socrates Virudhu (3) Periyar Socrates Virudhu (4)