தமிழக அரசு வழங்கும் விருது பெருமை அளிக்கிறது ! – நடிகர் ஜீவா !

தமிழக அரசு அறிவித்துள்ள விருதுகளில் 2012 க்கான சிறந்த நடிகருக்கான விருதுக்கு நடிகர் ஜீவா தேர்வாகியுள்ளார்.

2012ல் கெளதம் வாசுதேவ் மேனன் . இயக்கத்தில் ‘நீதானே என் பொன் வசந்தம்’ படத்தில் நடித்ததற்காக அவர் இவ்விருதைப் பெறுகிறார்.

இது பற்றி நடிகர் ஜீவா பேசும் போது ” ஒரு நடிகருக்கு படத்தில் நடித்ததற்கு வணிக ரீதியான வெற்றி முக்கியம் அது போல் விருதுகளும் முக்கியம் . கிடைக்கிற விருது அங்கீகாரம் கலை ஞர்களை உற்சாக மன நிலைக்கு இட்டுச் செல்லும். அது மட்டுமல்ல மேலும் உழைக்க ஊக்கம் தரும். அவ்வகையில் ‘நீதானே என் பொன் வசந்தம்’ படம் விமர்சன ரீதியில் பெரிதும் பாராட்டப்பட்ட படம் .இப்படி பேசப்படும் வகையில் அந்தப் படத்தை கெளதம் மேனன் சார் உருவாக்கியிருந்தார். அந்தப் படத்துக்காக என்னைச் சிறந்த நடிகராகத் தேர்வு செய்துள்ள தமிழக அரசுக்கு என் நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். உற்சாகமும் பெருமையும் அளிக்கும் வகையிலான இந்த விருதுக்கு என்னைத் தேர்வு செய்து பரிந்துரை செய்த விருதுக் குழுவினருக்கும் என் நன்றி.இந்த நேரத்தில் என்னுடன் அந்தப் படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் என் மகிழ்ச்சியையும் நன்றியையும் கூறிக் கொள்கிறேன். அது மட்டுமல்ல 2009 முதல் 2014 வரையிலான படங் களுக்கு விருதுகளுக்குத் தேர்வாகியுள்ள நடிகர் நடிகைகள் மற்றும் அனைத்து தொழில்நுட்பக் கலைஞரகளுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” இவ்வாறு நடிகர் ஜீவா கூறியுள்ளார்.

Related posts