அர்ஜுன் இயக்கத்தில் ஐஸ்வர்யா அர்ஜுன் நடிக்கும் “சொல்லிவிடவா”

நடிகர் இயக்குனர் தயாரிப்பாளர் எனப் பன்முகம் கொண்ட ஆக்ஷ்ன் கிங் அர்ஜுன் தனது மகள் ஐஸ்வர்யா அர்ஜுன் கதாநாயகியாக நடிக்கும் “சொல்லிவிடவா” படத்தைத் தனது ஸ்ரீ ராம் பிலிம் இண்டர்நெஷனல் சார்பாக கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குயுள்ளார்.

காதலின் பொன் வீதியில் எனத் தலைப்பிடப்பட்ட இப்படத்தின் பெயர் தற்போது “சொல்லிவிடவா” என மாற்றப்பட்டுள்ளது.

இளமை ததும்பும் காதல், கலர்புல் காமெடி, அனல்பரக்கும் ஆக்ஷ்ன், சுவாரஸ்யமான திருப்பங்கள் என அனைத்து ரசிகர்களையும் கவரக்கூடக் கலவைகளை உள்ளடக்கி உருவாகியுள்ள “சொல்லிவிடவா” திரைப்படத்தில் இளமை துடுக்கான வேடத்தில் ஜஸ்வர்யா அர்ஜுன் நடிக்கிறார். நடிகர் சந்தன் முதன்முறையாகத் தமிழில் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார்.

இயக்குனர் கே.விஸ்வநாத், சுஹாசினி, பிரகாஷ்ராஜ், “மொட்டை” ராஜேந்திரன், மனோ பாலா, சதிஷ், யோகி பாபு, ப்ளாக் பாண்டி, போண்டா மணி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

இறுதிக்கட்ட பணிகளை நெருங்கியுள்ள இப்படத்தின் இசை வெளியீடு மற்றும் பட வெளியீடு தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும் எனத் தயாரிப்புத் தரப்பு கூறியுள்ளது.

தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம்:

கதை, திரைக்கதை, வசனம், தயாரிப்பு, இயக்கம் – அர்ஜுன்
ஒளிப்பதிவு – H.C.வேணு கோபால்
இசை – ஜெஸ்ஸி கிப்ட்
படத்தொகுப்பு – கே கே
கலை இயக்கம் – சீனு
சண்டை பயிற்சி – “Kick Ass” காளி
மக்கள் தொடர்பு – நிகில்

Related posts