உண்மை சம்பவத்தை தழுவி ஒரு கற்பனை என்று தான் சொல்ல வேண்டும் – மரகத நாணயம்

”செய்தி தாள் ஒன்றில் நான் படித்த சம்பவம் என்னை மிகவும் கவர்ந்தது. அதுவே மரகத நாயாயத்தின் தொடக்க புள்ளியாகும் . பிறகு நான் அதில் சில சுவாரஸ்யமான சம்பவங்களை இணைத்தேன் . இப்படம் பெரியவர்களுக்கு மட்டும் இன்றி குழந்தைகளையும் கவரும் என்பதில் உறுதியாக உள்ளேன்.இப்படத்தில் ஆதி கதாநாயகனாக நடித்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி.அவரது அர்ப்பணிப்பும் உழைப்பும் என்னை ஆச்சிரியப்படுத்தியது.

.இப்படத்தின் தூணாக இருந்தது எங்களது தயாரிப்பாளர் திரு.டில்லி பாபு அவர்கள்.அவர் கொடுத்த ஊக்கமும் சுதந்திரமும் வார்த்தையில் அடங்காதவை.இக்கதையில் சில சுவாரஸ்யமான மர்ம முடிச்சுகள் உள்ளன . அதில் நீக்கி கல்ராணி மற்றும் அருண்ராஜ் காமராஜின் கதாபாத்திரங்களும் அடங்கும் என்பது கூடுதல் தகவல் ” என நம் எல்லோரின் ஸ்வாரஸ்யத்தையும் கூட்டினார் புது முக இயக்குனர் ARK சரவண் .

Related posts