Oru Kidayin Karunai Manu Review By Jackiesekar

சுண்டக்கா கா பணம் சுமக்கூலி முக்கா பணம் என்று ஒரு கிராமத்து பழ மொழி ஒன்று உண்டு… இதுதான் இந்த படத்தின் ஒன்லைன்.

ஆட்டுக்கார அலமேலுவுக்கு பிறகு ஆட்டை வைத்து பின்னப்பட்ட கதை… தேவருக்கு பிறகு இங்கே யாரும் விலங்குளை மையப்படுத்தி எடுக்கும் கதைகள் மிகமிக குறைவு.
காரணம் ஜீவகாருண்ய பிரச்சனைகள் சரி அதை விடுங்கள் அப்புறம் டாபிக் மாட்டுக்கறி கோமியம் என்று எங்கு எங்கோ சென்று விடும்.. ஹூம் எந்த இடத்துல விட்டேன்..
ஆடு.. எஸ் முழுக்க முழுக்க இந்த திரைப்படம் ஆட்டின் பார்வையில் கதை சொல்ல படுகின்றது..

சரி கதைய பார்த்துடுவோம்.

விதார்த் ரவீனா புதுமண ஜோடி.. 32 வயதில் திருமணம்.. முதல் இரவு இன்னும் நடக்கவில்லை.. திருமணம் ஆனால் முனீஸ்வரனுக்கு கெடா வெட்ட வேண்டும் என்று விதார்த் பாட்டிக்கு வேண்டுதல்… அந்த வேண்டுதலை நிறைவேற்ற செல்லும் போது..ஏகப்பட்ட பிரச்சனைகள்.. வேண்டுதல் நிறைவேறியதா இல்லையா என்பதே இந்த திரைப்படத்தின் கதை.

படத்தின் சுவாரஸ்யங்கள்.

விதார்த் கேரியரில் சிறப்பான ஒரு திரைப்படம்.. புது மனைவிமேல் மோகத்தோடு பார்ப்பதாகட்டும்.. கிப்ட்பிரிக்கும் மனைவியை படுக்கைக்கு வா என்று அழைக்க முடியாமல் தவிப்பதாகட்டும். விதார்த் பின்னி இருக்கின்றார். ரவினா… புதுவரவு புடவையில் கெடா வெட்ட போறோம் என்று அக்கம் பக்கம் அழைக்கையில் அழகில் மிளீர்கின்றார்.

தன் புருசன் எதிலும் மாட்டிக்கொள்ள கூடாது என்று தவிக்கும் தவிப்பும் சான்சே இல்லை.. அதே போல முள்ளுகுத்திக்கொள்ளும் நபர்.. ரொம்ப இயல்பாக நடித்து இருக்கின்றார். அதே போல லாரி ஓனர், லாரி ஓட்டுனர், சமையல் காரர் என்று அசத்தி இருக்கின்றார்கள்.

படத்தின் பெரிய பலமே படம் பார்க்கும் எண்ணமே வராமல் நாமு கெடா கறி சாப்பிட அவர்களோடு லாரியில் பயணித்தால் எப்படி இருக்கும் அப்படித்தான் இந்த திரைப்படம் அப்படியான அனுபவத்தை வழங்குகின்றது.. அது மட்டுமல்ல.. மூன்று மணிக்கு அடிக்கும் லாரி ஹாரன்… பெரியவர்கள் தூங்காமை, எல்லோரும் லாரியில் ஏற ஒருவருக்கு ஒன்னுக்கு வந்ததும் லாரியில் எல்லோரும் ஒன்னுக்கு வந்து கீழே இறங்கி செல்வது என்று மிக மிக நுனுக்கமாக பார்த்து பார்த்து செதுக்கியிருக்கின்றார்கள்..

படத்தில் பெரிய மைனஸ் என்று பார்த்தால்… இரண்டு பேருக்கு தெரிந்த ரகசியமே எல்லோருக்கும் தெரிந்து விட சாத்திய கூறு உள்ள இடத்தில் 40 பேருக்கு தெரிந்த ரகசியம் என்றைக்காக இருந்தாலும் வெளியே வந்தே தீரும் என்பதை அறியா அப்பாவி கிராம மக்களா? அவர்கள். படத்தின் பெரிய ஓட்டையே அதுதான் ஆனால் இரண்டு மணி நேரத்தை அந்த பெரிய ஓட்டையை மறைத்து திரைக்கதையை எழுதி புதிய இயக்குனர் சுரேஷ் சங்கையா வெற்றி பெற்று இருக்கின்றார்..

ஆர் ரகுராமின் ஒரு பாடல் கேட்கும் ரகம்.. கதையை விட்டு கமர்ஷியல் பக்கம் போகாத படத்துக்கு ஆர் வி சரண் ஒளிப்பதிவை கவனித்ததோடு சரியான இடத்தில் கத்திரி வைத்து படத்தின் சுவாரஸ்யத்துக்கு உறுதுணையாகி இருக்கின்றார் எடிட்டர் பிரவின்
பைனல் கிக்..

இயல்பான ஒரு கிராமத்து திரைப்படத்தை எந்த கலப்படமும் இல்லாமல் பார்த்த திரைப்பட அனுபவத்தை இந்த திரைப்படம் கொடுத்து இருக்கின்றது..
முக்கியமாக இந்த திரைப்படம் பார்த்தே தீரவேண்டிய திரைப்படம் என்று ஜாக்கி சினிமாஸ் பரிந்துரைக்கின்றது.

இந்த திரைப்படத்துக்கு ஜாக்கி சினிமாஸ் அளிக்கும் மதிப்பெண்..

4/5

https://www.youtube.com/watch?v=RW53ZvPdrdk