நகர்வலம் திரைவிமர்சனம்

பாலாஜி, தீக்க்ஷிதா, யோகிபாபு நடிப்பில் அறிமுக இயக்குனர் மார்க்ஸ் இயக்கி வெளிவந்திருக்கும் படம் நகர்வலம்.

சென்னை குடிநீர் வாரிய ஒப்பந்த தண்ணீர் லாரி ஓட்டுபவர் கதாநாயகன் பாலாஜி. இவருக்கு, இவர் தான் வழக்கமாக செல்லும் பகுதியை விட்டு, புதிய பகுதி ஒன்றுக்கு தண்ணீர் விநியோகம் செய்யச் செல்கிறார். அந்த பகுதியில் வசித்து வரும் பள்ளி மாணவி தீக்‌ஷிதா மீது காதல் வருகிறது. முதல் சந்திப்பு மோதலில் ஆரம்பித்தாலும் நாள்கள் செல்ல செல்ல இருவரும் ஒருவரை ஒருவர் விரும்ப ஆரம்பிக்கின்றனர். இவர்கள் காதல் ரவுடியான தீக்‌ஷிதாவின் அண்ணனுக்கும், அரசியல்வாதியாக இருக்கம் சாதி வெறி பிடித்த சித்தப்பாவிற்கும் தெரிய வருகிறது. இவர்கள் காதல் குடும்பத்தில் அனைவருக்கும் இடையை பிரச்சினையாக உருவெடுக்கிறது. அதையும் தாண்டி, பாலாஜி – தீக்‌ஷிதா இருவரும் சேர்ந்தார்களா இல்லையா என்பதை சொல்கிறது நகர்வலம்.

கதாநாயகனாக நடித்திருக்கிறார் பாலாஜி. நிறைவான நடிப்பை வழங்கியிருக்கிறார். கதாநாயகியாக நடித்திருக்கும் தீக்க்ஷிதா ரொம்பவே அழகாக இருக்கிறார், கேரக்டருக்கு ஏற்றார் போன்ற நடிப்பையும் சிறப்பாகவே நடித்திருக்கிறார். யோகி பாபு இப்படத்திலும் தனது தனித்துவமான நகைச்சுவையால் ரசிக்க வைக்கிறார். பால சரவணன் தனக்கே உரித்தான ஸ்டைலில் கலாய்த்து ரசிக்க வைக்கிறார். முத்துக்குமார் நாயகியின் அண்ணனாகவும், வில்லனாகவும் வந்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். ஆர். தமிழ் தென்றலின் ஒளிப்பதிவில் காட்சிகள் ரசிக்கும்படி இருக்கிறது.