மாறுவோம்! மாற்றுவோம்! – நடிகர் ஆரி

இந்தியாவை திரும்பிப் பார்க்க வைத்த தமிழகம்!!!

மாறுவோம்!
மாற்றுவோம்! விழிப்புணர்வு அறப்போராட்டம்!!.

நாடு முழுவதும் நடக்கும் வங்கிகளின் கட்டணக் கொள்கையை எதிர்த்து “அஞ்சல் துறைக்கு மாறுவோம் வங்கிக்கொள்ளையை மாற்றுவோம்”
திரைப்பட நடிகர் ஆரியின் தலைமையில் மாணவர்களின் விழிப்புணர்வு அறப்போராட்டம் (15.3.17) மத்தியம் 2 மணி அளவில் அண்ணா சாலை உள்ள அணணா தலைமை தபால் நிலையத்தில் நடைபெற்றது. பெரிய அளவில் வெற்றி பெற்ற இப்போரட்டத்தினை தொடர்ந்து இப்போது தமிழ் மாநிலம் தாண்டி கேரளாவில் நடிகர் ஆரி தலைமையில் வரும் மார்ச் 25ம் தேதி எர்ணாகுலத்தில் விழிப்புணர்வு ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கிறது.

தலைமை தபால் நிலையம்
மருத்துவமனை சாலை
மரைன் டிரைவ்
எர்ணாகுளத்தில் காலை 10 மணி அளவில் கல்லூரி மாணவர்கள் பெருமளவில் கல்ந்துகொள்ள நடிகர் ஆரி தலைமையில் விழிப்புணர்வு ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கிறது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் டெல்லியில் போராடிக்கொண்டிருக்கும் விவசாயிகளுக்கு ஆதரவாக விவசாயக்கடனை ரத்து செய்யும் கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

சாமானியர்களுக்கு பெரும் அச்சுறுத்தலாய் மாறிவிட்டது இந்தியாவில் உள்ள வங்கிகள்.

குறிப்பாக வங்கிக்கணக்கில குறைந்தபட்சம் ரூபாய்.5000 வைப்புத்தொகை வைத்திறுக்க
வேண்டும், நகரத்தில்இருப்பவரகள் ரூபா.3000 வைப்புத்தொகை வைத்திறுக்க வேண்டும், அதேசமயம் கிராமத்தில் இருப்பவர்கள் ரூபா.1000 வைத்திருக்க வேண்டும்.

குறிப்பாக ஏ.டி.எம் மிஷினில் பணம் வைப்பு செய்தாலும் ,எடுத்தாலும் வங்கிக்கணக்கின் இருப்பில் பணம் இல்லாவிட்டாலும் பணத்தை பிடித்தம் செய்வோம் என்று வங்கிகள் அறிவித்துள்ள அதிரடிச் சட்டத்தினால் சாமானிய மக்கள் கலங்கிப் போய் உள்ளார்கள்.

இதற்கு ஒரு தீர்வு வேண்டாமா?
இதை நாம் தீர்க்கவும் வேண்டாமா?
50000 விவசாயக் கடன் வாங்கிய விவசாயியை அடியாட்கள் வைத்து கடன் வசூலிக்கும் வங்கிகள்தான் ரூபா.9000 கோடிகளை அள்ளிச்சென்ற மல்லையாவை தப்பிச்செல்ல வழிவகுத்துக்கொடுத்தது வங்கிகள் மாதம் ரூபா.5000 தவிக்கின்ற சாமானியர்களின் தலையில் இத்தகையை சுமையை சுமத்துவது எந்தவகையில் நியாயம்?

இந்த தார்மீக கேள்வியை நிலைநிறுத்தி ,வெறும் ரூபா.50 இல் இந்தியன் அஞ்சல் வங்கியில் கணக்கைத் தொடங்கி ஏ.டி.எம். இல் கட்டணம் ஏதுமின்றி பணம் பெற்றுக்கொள்வதுடன், அபராதம் இன்றி பணப்பரிமாற்றம் செய்ய பரிந்துரைத்தும் கடந்த (15.3.17) மத்தியம் 2 மணி அளவில் அண்ணா சாலை உள்ள அணணா தலைமை தபால் நிலையத்தில் விழிப்புணர்வு அறப்போராட்டம் நடைபெற்றது.

இப்போரட்டத்தின் வெற்றி நாடு முழுதும் பரவியது. இதனைத்தொடர்ந்து இப்போது கேரளா மாநிலம் எர்ணாவூரில் ஆரி தலைமையில் விழிப்புணர்வு ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது.

அஞ்சலக கணக்கில் ஒரு நாளைக்கு ரூபாய்.40000 வரையில் பணத்தினை எடுக்கலாம்.அதேவேளை ஒரு நாளைக்கு ஒரே நேரத்தில் 10 பேர்களுக்கு தலா ஒரு இலட்சம் வீதம் 10 இலட்சம் வரை அனுப்பலாம்.அத்தோடு ஏப்பிரல் மாதம் முதல் ஆன்லைன் பணப்பரிமாற்ற சேவையும் தொடங்கவுள்ளது.மேலும் 500 ரூபாய் இருப்பு இருந்தால் காசோலை பெற்றுக் கொள்ளலாம்.

அஞ்சலக கணக்கிலிருக்கும் இத்தனை வசதிகளை இந்தியாவிலிருக்கும் அத்தனை சாமானியர்களுக்கும் கொண்டு சேர்க்கும் வகையில் திரைப்பட நடிகர் ஆரி உடன் இனைந்து மாணவர்கள் இந்திய அஞ்சல் வங்கிக் கணக்கை தொடக்கிவைக்கின்றார்கள்.

இந்தியாவில் உள்ள ஏழை, எளிய மக்கள் அனைவரும் இத்திட்டத்தால் பயன்பெற வேண்டும். இத்திட்டத்தினை பற்றிய விழிப்புணர்வுக்கு குரல் கொடுத்த முதல் இந்தியன், தமிழன் ஆரி. ஆரியின் வேண்டுகோளில் நடிகர் சங்கத் தலைவர் நாசர். நடிகை மற்றும் இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணன் ஆகியோர் இத்திட்டத்தில் இணைந்துள்ளனர்.

இதிட்டத்தில் இணைந்து இந்தியர் அனைவரும் பயன்பெற வேண்டும் என்பதே எங்களது நோக்கம் என்கிறார் ஆரி.

மேலும் விவசாயிகளுக்கு ஆதரவு தரும் வகையில் விவசாயிகள் கோரிக்கையை நிறைவேற்ற கோரியும் அவர்களது கடனை ரத்து செய்யக் கோரி வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடை பெறவிருக்கிறது.
நாளை முதல் இந்தியாவிலுள்ள மக்கள் அனைவரும் அஞ்சல் வங்கிக் கணக்குனை தொடங்குமாறு வலியுறுத்தி ஒட்டு மொத்த சாமானிய மக்களின் நலனுக்காக நாம் நடத்தும் அறவழி விழிப்புணர்வு போராட்டம்……………..

“அஞ்சல் வங்கிக் கணக்கிற்கு மாறுவோம்;வங்கிக்கொள்ளையை மாற்றுவோம்”​