பயத்தில் உறையவைக்கும் “சதுரஅடி 3500”

“RIGHTVIEW CINEMAS” நிறுவனத்தின் தயாரிப்பில், நடிகை இனியாவின் மிரட்டல் நடிப்பில், உருவாகி வரும் திகில் திரைப்படம் “சதுரஅடி 3500”.

இப்படத்தை இயக்கியுள்ள ஸ்டீபன், படம் குறித்த நம்மிடையே கூறியதாவது, “சென்னையில் உண்மையிலேயே நடைபெற்ற ஒரு திகில் சம்பவத்தை மையப்படுத்தி இப்படம் உருவாகியுள்ளதாகவும், படத்தின் கதையை கேட்ட உடனேயே நடிக்க சம்மதம் தெரிவித்த நடிகை இனியாவிற்கு இத்தருணத்தில் தான் மிகவும் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார். மேலும், இப்படத்தின் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்குமாறு நடிகர் ரகுமானை தான் அணுகியதாகவும், கதை கேட்ட நடிகர் ரகுமான், இதுவரை திரைக்கு வந்த பேய்த் திரைப்படங்களின் கதையமைப்பிலிருந்து இப்படம் மாறுபட்டு இருப்பதாக பாராட்டியதுடன், ரசிகர்களை பயத்தில் உறைய வைக்கும் இப்படத்தில் தான் கண்டிப்பாக நடிப்பேன் எனக்கூறி நடிக்க சம்மதம் தெரிவித்தாக உற்சாகமுடன் கூறுகிறார் ஸ்டீபன்.

படத்தின் மற்ற கலைஞர்கள் குறித்து கூறிய பேசிய இயக்குனர் ஸ்டீபன், இப்படத்தில் இனியா, ரகுமான் ஆகியோருடன், நடிகர்கள் பிரதாப்போத்தன், சரவணன் சுப்பைய்யா, எம்.எஸ்.பாஸ்கர், கோவை சரளா, மனோபாலா, தலைவாசல் விஜய், தயா பெலிக்ஸ், ஆகாஷ் ஆகியோர் நடித்திருப்பதாகவும், ஹீரோவாக புதுமுகம் நிகில் மோகனும், மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் தெலுங்கு திரையுலகில் இயக்குனர் ராம்கோபால் வர்மாவால் “ஐஸ்கிரீம்” படத்தின் மூலம் அறிமுகமான நடிகை ஸ்வாதி தீக்ஷித் நடித்திருப்பதாகவும் தெரிவித்தார்.

‘காதலுக்கு மரியாதை’, ‘கண்ணுக்குள் நிலவு’, ‘ப்ரெண்ட்ஸ்’ என தொடர்ந்து முன்னணி இயக்குனர் பாசிலின் இயக்கத்தில் வெளியான பெரும்பாலான படங்களில் பணியாற்றிய மறைந்த ஒளிப்பதிவாளர் ஆனந்த குட்டனின் ஒளிப்பதிவில் இயற்கை எழில் கொஞ்சும் கொடைக்கானல், ஊட்டி, பெங்களூர் மற்றும் சென்னையில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றதாகவும், ஒரு பாடல் காட்சி சிங்கப்பூரில் பிரம்மாண்டமான முறையில் படமாக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார் இயக்குனர் ஸ்டீபன்.

படத்திற்கு கணேஷ் ராகவேந்திரா இசையமைத்திருப்பதாகவும், கூடுதல் ஒளிப்பதிவினை ஐ.பிரான்சிஸ் செய்திருப்பதாக தெரிவித்துள்ள இயக்குனர் ஸ்டீபன், எத்தனை பேய்த்திரைப்படங்கள் வந்தாலும் அத்தனைக்கும் தமிழ் திரைப்பட ரசிகர்கள் தொடர்ந்து அளித்து வரும் அமோக ஆதரவே இப்படம் உருவாக காரணம் என்றும், இப்படத்தில் திகிலுடன் காதலையும் புதிய கோணத்தில் திரைக்கதையாக்கி இருப்பதாகவும், அனைத்து பாடல் காட்சிகளும் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்கிறார் இயக்குனர் ஸ்டீபன்.

தொழில்நுட்ப கலைஞர்கள்:

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – ஸ்டீபன்

ஒளிப்பதிவு – (அமரர்) ஆனந்த குட்டன் மற்றும் ஐ. பிரான்ஸிஸ்

இசை – கணேஷ் ராகவேந்திரா

பாடல்கள் – (அமரர்) நா.முத்துக்குமார்

பாடகர்கள் – நரேஷ் ஐயர், ஹரிச்சரண், ரீட்டா, சத்யன்

படத்தொகுப்பு – சுரேஷ் அர்ஸ்

கலை – ஜனார்தனன்

நடனம் – ஸ்ரீதர்

சண்டைக்காட்சிகள் – தளபதி தினேஷ்

மக்கள் தொடர்பு – PRO யுவராஜ்

டிசைன்ஸ் – சபீர்

தயாரிப்பு – ஜெய்சன் பழையாட்டு மற்றும் என்ஆர்எம்