குறிப்பிட்ட கதாபாத்திரங்களில் மட்டுமின்றி, வில்லன் கதாபாத்திரங்களில் நடிக்கவும் எனக்கு ஆசை இருக்கிறது – என்கிறார் வைபவ்

வெங்கட் பிரபுவின் ‘சரோஜா’ திரைப்படத்தின் ராம் பாபு கதாபாத்திரம் மூலம் தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைத்த நடிகர் வைபவ், தற்போது தன்னுடைய ரசிக்க வைக்கும் நடிப்பால், தமிழக ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு அங்கீகாரத்தை பெற்று உள்ளார். தான் நடிக்கும் ஒவ்வொரு கதாபாத்திரங்களையும், கதைகளையும் மிக கவனமாக தேர்ந்தெடுத்து வருகிறார் வைபவ் என்பதை உறுதியாகவே சொல்லலாம். சரோஜா படத்தில் ஆரம்பித்து, கோவா, மங்காத்தா, கப்பல் மற்றும் சமீபத்தில் வெளியாகி அமோக வெற்றி பெற்ற சென்னை 28 II (மருதுபாண்டி) என எல்லா திரைப்படங்களின் கதாபாத்திரங்களிலும் ஒரு நகைச்சுவை சாயல் இருக்கும்…..அது தான் வைபவின் தனித்துவமான சிறப்பு.

“தமிழ் திரையுலகில் எனக்கென ஒரு அடையாளத்தை பெற்று தந்தவர், எங்கள் அணியின் கேப்டன் வெங்கட் பிரபு…. ஒருபுறம் அவர் படங்களில் நான் நடித்த ராமராஜன், சுமந்த், மற்றும் மருதுபாண்டி கதாபாத்திரங்கள் அனைத்தும் எனக்கு ரசிகர்களின் அமோக பாராட்டுகளை பெற்று தர, மறுபுறம் நான் கதாநாயகனாக நடித்த கப்பல் திரைப்படம் எனக்கு வர்த்தக உலகினர் மத்தியில் நிலையான ஒரு வெற்றியை தேடி தந்தது.

படப்பிடிப்பு தளத்தில் இயக்குநர்களின் எதிர்பார்ப்புகளை முழுமையாக பூர்த்தி செய்ய வேண்டும். எனவே படப்பிடிப்பு தளத்திற்கு வந்த பிறகு தான் என்னுடைய வசனங்களை நான் பேசி பழகி கொள்வேன்….