பெல்ஜியம் நாட்டின் பிரசித்தி பெற்ற ‘கிங்ஸ் டே’ விழா, சென்னையில் கொண்டாடப்பட்டது

சாக்லேட், வைரம் மற்றும் பல வகை கண்ணாடிகளுக்கு பெயர் போன நாடு பெல்ஜியம்.  1947 ஆம் ஆண்டு, இந்தியாவுடன் இணைந்து வர்த்தகம் செய்வதற்கு முதல் முதலாக தூதுவரை அனுப்பிய நாடு பெல்ஜியம். அந்த நிகழ்வின் 70 ஆம் ஆண்டு கொண்டாட்டம் அடுத்த ஆண்டு நடைபெறுகிறது. அதுமட்டுமின்றி, பெல்ஜியம் நாட்டில் படமாக்கப்பட்ட முதல் இந்திய திரைப்படம், அமீர் கான் நடித்த ‘பி கே’.
பெல்ஜியம் நாட்டின் அரசரை கௌரவிக்கும் விதத்தில், ஒவ்வொரு ஆண்டும் ‘கிங்ஸ் டே’ திருவிழா கொண்டாடப்படுகிறது. சென்னையில் உள்ள பெல்ஜியம் தூதரகம் சார்பில் இந்த விழா கடந்த நவம்பர் 18 ஆம் தேதி – வெள்ளிக்கிழமை  அன்று சென்னையில் மிக விமர்சையாக கொண்டாடப்பட்டது….பிரம்மாண்டமான இந்த விழாவில் டாக்டர் பார்ட் க்ரூப் மற்றும் சீமைன் தாகூர் – பெல்ஜியம் தூதரகம் – சென்னை, மார்கோட் ப்ரி, கேத்லிஜின் புரூத்ஆப், சுவாதி பாலசுப்ரமணியம், நடிகர் – நடன இயக்குநர் சதீஷ் (அச்சம் என்பது மடமையடா), ஆற்காடு நவாப், நரேஷ் மேத்தா மற்றும் குடும்பத்தினர் – நிறுவனர் – மேத்தா ஜெவெல்லர்ஸ், செய்ஜி பாபா – ஜப்பான் தூதரகம், சுஹாசினி மணிரத்னம் – லூக்சம்பெர்க் தூதரகம் – சென்னை, சதீஷ் – ஜூபிட்டர் மற்றும் நாட்டின் முக்கிய பிரமுகர்கள் இந்த கிங்ஸ் டே விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.