செஞ்சிட்டாளே என் காதல

தலைப்பு சற்று வித்தியாசமாக இருந்தாலும் பெண்களை அவதூறு செய்கிற கதையல்ல . காதல்தோல்வியடைந்த கதாநாயகன் தன் வாழ்வில் சந்திக்கின்ற பிரச்சனைகளும் இறுதியில் அவனுக்குக் கிடைக்கின்ற தீர்வும் சமீப காலங்களில் காதல் மலினப்பட்டுவருகின்றதா என்பதற்கான விடையும் படத்தின் கதைக்கருவாகும். காதல் குறித்த மற்றதமிழ்த்திரைப்படங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்ட கதையம்சம் கொண்டது.

இத்திரைப்படத்தின் இயக்குனரும் கதாநாயகனுமான எழில் ஐம்பதிற்கும் மேற்பட்ட குறும்படங்களில் நடித்தும் சில திரைப்படங்களில் உதவி இயக்குனராகவும் பணியாற்றியவர்; மேலும் இவரது திரைக்கதை தமிழ் சினிமாவில் கட்டுடைப்புகளை நிகழ்த்தக்கூடியதாக அமைந்திருக்கும். மேலும் தயாரிப்பாளர் திரு. பாலசுப்ரமணியன் அவர்களின் பெருமுயற்சியும் பங்களிப்பும் இத்திரைப்படத்திற்கு வலுவான அடித்தளமாக அமைந்துள்ளது
கதாநாயகியாக விஜய் டிவி ஆஃபிஸ் சீரியலில் நடித்த மதுமிளாவும் அவரது அம்மாவாக மெட்ராஸ் மற்றும் கத்தியில் நடித்த ரமாவும் அப்பாவாக மெட்ராஸ், மாரி மற்றும் கபாலியில் நடித்த மைம் கோபியும் நடிக்கின்றனர். கதாநாயகனின் அப்பாவாக அஜய் ரத்னம் மற்றும் நாடோடிகள் அபிநயா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்கள் தவிர கயல் வின்சென்ட், அர்ஜுனன்  போன்றோர் துணைக் கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். ஒளிப்பதிவு மணீஷ் மூர்த்தி, இசை ராஜ் பரத், படத்தொகுப்பு லாரன்ஸ் கிஷோர், சண்டைப்பயிற்சி ஹரி தினேஷ் ஆகியோர் பணியாற்ற பாலசுப்ரமணியன் தயாரிக்கின்றார். படப்பிடிப்பு சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் நடந்து முடிந்துள்ளது. ஆண் பெண் இருபாலருக்கும் இயல்பாக கருத்து சொல்லும் விதத்தில் இந்த ‘செஞ்சிட்டாளே என் காதல’ அமையும்.