Expecting More In Independence day 2 Movie

 

ஒரு வெற்றி பெற்ற  திரைப்படத்தின் சீக்வல் அதாவது அதன் தொடர்ச்சியை எடுக்க  வேண்டும் என்றால்  நிறைய  யோசிக்க வேண்டும்…

 

பொதுவாக ஹாலிவுட் திரைப்படங்களில் முதல் பாகத்தை  எடுத்த அதே இயக்குனர்   இரண்டாம் பாகத்தையும்  இயக்குவார்.. அதன் பிறகு   போர் அடித்து விடும் என்பதால் வேறு இயக்குனர்கள் இதே மையக்கதையில் இருந்து அவர்கள் இன்னிங்ஸ்சை  ஆரம்பிப்பார்கள் .,.. அப்படி  வேறு இயக்குனர்கள்   கதையை கையாளும் போது சிலது ஜெயித்தும் சிலது படு மோசமாக மண்ணை கவ்வியதும்  ஹாலிவுட்  வரலாறு.,

 

1996  ஆம் ஆண்டு வெளியான இண்டிபென்டன்ட்ஸ் டே … திரைப்படத்தின்  வெற்றியை இயக்குனர்  ரோலன் எம்ரிச்சே எதிர்பார்த்து இருக்க மாட்டார்.. காரணம்..எழுபத்திஐந்து  மில்லியன் பொருட் செலவில் தயாரித்து 817 மில்லியன் சம்பாதித்த படம் என்றால்   அது  சாதாரண வெற்றியா.?   இன்டிபென்டன்ஸ்  டே திரைப்படம்தான்  பெரிய அளவில் வெற்றி பெற்ற இரண்டாவது திரைப்படம் என்ற  பெயரை பெற்றது…

இயக்குனர் ரோலன்ட் எம்ரிச்சே சும்மா இருந்தாலும் தயாரிப்பு நிறுவனங்கள் சும்மா இருக்குமா..? சட்டென  ஆக்ஷன்  கட் சொல்லி   இன்டிபென்டன்ஸ் டே இரண்டாவது பாகத்தை எடுத்து முடித்து விட்டார்கள்.. ரோலன் எம்ரிச் 2012  திரைப்படத்தை இயக்கும் போதே இந்த திரைப்படத்தை இயக்க வேண்டும் என்று மனதில் குறித்துக்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்டிபென்டன்ஸ்டே இரண்டாம் பாகத்துக்கு  இதுவரை  200 மில்லியன் டாலர் செலவு  செய்து இருக்கின்றார்கள்….

 

எந்த அளவுக்கு கல்லா கட்டும் என்பது இந்த மாத இறுதியில் தெரிந்து விடும்…

 

முதல் பாகத்தில் பூமியை விட்டு   ஓட ஓட விரட்டிய  ஏலியன்ஸ்கள் வரிந்து கட்டிக்கொண்டு 20 வருடங்களுக்கு பிறகு திரும்பவும் பூமியை அசுர பலத்துடன் திருப்பி தாக்க தயாராகிவிட்டன.. எப்படி தாக்க போகின்றன என்பதை இந்த  ஜூன்  மாதம் 24 ஆம் தேதி திரையில் முத்தமிட இருக்கும் இன்டிபன்டன்ஸ் டே 2 திரைப்படத்தினை   பார்த்து  பரபரப்போடு விரல் நகம் கடித்து அறிந்துக்கொள்ளுங்கள்.

 

ஜாக்கிசேகர்

13/06/2016