happy birthday maniratnam sir

ஆறு வருடங்களுக்கு முன் என் வலைதளத்தில் நான் எழுதிய மவுனராகம் திரைப்படத்தின் விமர்சனம்.

இன்று மணிரத்னத்திற்கு பிறந்தநாள்… தமிழ் திரையுலகில் ரசனை மாற்றத்துக்கு வித்திட்ட மணி சாருக்கு வாழ்த்துகள்
Thursday, May 27, 2010
மணிரத்னம்..மௌனராகம்.. கணவன் மனைவி அழகியல்
ஒரு சமுகம் நன்கு வளர்ச்சி பெற, குடும்பம் என்ற அமைப்பு ரொம்பவும் முக்கியமாகின்றது.. அதிலும் கணவன் மனைவி என்ற குடும்ப தேரின் அச்சானி மிக முக்கியமான ஒன்று…கணவன் மனைவி உறவு சிதைந்தால் அது ஒரு சமுகத்தின் சிதைவுக்கே வழி வகுக்கும்….

இந்தியாவில் 50 விழுக்காடுக்குமேல் நடக்கும் திருமணங்களில் விருப்பம் இல்லாமல் சொத்துக்கும், ஜாதிக்கும், கௌரவத்துக்கும் நடக்கும் திருமணங்கள்தான் அதிகம்…இந்தியாவில் நடக்கும் பல திருமணங்கள் பெற்றோரின் வற்புறுத்தலுக்காக நடக்கும் திருமணங்கள் அதிகம்….

என் நண்பி்யின் நண்பிக்கு 5 வருடங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது…பெண் பார்க்க வந்த போதே அந்த மாப்பிள்ளை பையனின் கண்களில் தப்பு இருப்பதாக சொல்லி, இந்த திருமணம் தனக்கு வேண்டாம் என்று எவ்வளவோ அந்த பெண் எடுத்து சொல்லி இருக்கின்றாள்… ஆனால் நல்ல வேலையில் இருப்பதாலும் சிவப்பு தோலாக அழகாக சுருள் முடியுடன்… கைநிறைய சம்பளம் வாங்கும் மாப்பிள்ளை என்று பெற்றோர் அந்த பெண்ணை தாரை வார்த்து கொடுத்துவிட்டனர்…..

திருமணத்துக்கு வந்த மணப்பெண்ணின் நண்பிகளிடம் கை குலுக்கி ஜொள்ளு வழிந்து கொண்டு இருக்கும் போதே அந்த பெண் தன்னை ஏதோ ஒரு விபரீதத்துக்கு தன்னை தயார் செய்து கொள்ள… முதலிரவில் அந்த சிவப்புதோல் அவள் ரசனைக்கு சற்றும் செவி சாய்ககாமல் உடைகளை கிழித்து…..

அந்த கைநிறைய சம்பளம்…கத்தாமல் இருக்கு அவள்வாயில் துணி வைத்து அன்று இரவு முழுவதும் 3 முறை உறவு வைத்துக்கொண்டு மன்னிக்கவும் இருவரும் மனம் ஒத்தால்தான் உறவு… அது கற்பழிப்பு….. மறுநாள் பெண் நானிகோனிவருவாள் என்று பார்த்தாள்…வண்டலூர் மிருகாட்சி சாலை சிங்கம் இருந்த கூண்டில் இருந்து வந்தவள் போல் கல்யாண பெண்இருக்க… என் நண்பியும் பெற்றோரும் கலங்கி நின்றனர்…
நன்றாக யோசி்த்து பாருங்கள்…பத்து வயதுக்கு மேல் தன் அம்மாவிடம் கூட எந்த பெண்ணும் தன் அந்தரங்க உறுப்புகளை காட்ட வெட்கபடும் போது..தாலிகட்டிய அன்றே… நாள் நட்சத்திரம் எல்லாம் பார்த்து மணட்பத்திலேயே சாந்தி முகூர்த்தம்…கொடுமையிலும் கொடுமை இல்லையா?…காலையில தாலி கட்டிவுட்டு… நைட்டு எல்லாத்தையும் அவுத்துட்டு படுன்னு சொன்ன அது எவ்வளவு பெரிய கொடுமை…..

நண்பி அவளை விளையாட்டாய் கலாய்க்க….அவள் விழியில் நீருடன் மதலிரவின் கதையை சொல்ல…அந்த ஓநாய்அந்த பெண்ணின் மார்பகம் எல்லாத்திலும் கடித்து வைத்து வெம்பிய கன்றி போன சுவடுகள் இருந்தனவாம்…மார்பு காம்பில் காயம்…சேகர் அதை பாத்துட்டு எனக்கு தலை அப்படியே சுத்திடுச்சி என்றாள் என் நண்பி…படிச்சவன் இப்படி கூட நடந்துக்குவானா? என்று என்னிடம் கேட்கபட்டது…. நான் சொன்னேன் மிருகதனத்துக்கு படிப்பு என்ன ?பாமரத்தனம் என்ன ? என்றேன்…..ஆனா இதெல்லாத்தையும் அவுங்க அம்மாகிட்ட சொன்ன போது… நிறைய செலவு பண்ணி கல்யாணம் பண்ணி இருக்கேன்…

ஒரு நாள்ல மாப்பிள்ளையை அப்படி எல்லாம் முடிவு செய்து விட கூடாது…சில பேர் அப்படி இப்படிதான் இருப்பார்கள் என்று அந்த விஷயத்துக்கு சப்பை கட்டு கட்டி அந்த பெண்ணை அதே சிங்கத்தின் கூட்டில் சமுதாய பேச்சுக்கும்…கௌவரவத்துக்கும் அந்த பெண்ணை இரையாக்கினார்கள்…

நம் நாட்டின் பெரும் சோகம் இதுதான்… நல்லவன் இல்லை என்று தெரிந்தாலும் சமுக நிர்ப்ந்தத்துக்கு அவனிடடே அட்ஜஸ்ட் செய்து கொள்ள போக சொல்லும் கொடுமை நம் நாட்டில் அதிகம்….

மூன்று மாதம் கழித்து பெண்ணை பார்க்க போக 50 பவுன் போட்டு கட்டி கொடுத்த பெண் ஒரு வேலைகாரி போல் இருப்பதையும்…வெறித்த விரீகளுடன் வரவேற்ற பெண்ணை பார்த்து பெற்ற வயிறு பற்றி எரிந்தது…

தினமும் சந்தேகத்தில் வீட்டில் சண்டையாம்…திருமணத்துக்கு வந்து அதிகம் பேசி சிரித்த கல்லூரி தோழனை சுட்டிக்காட்டி எத்தனை முறை அவனோடு மகாபலிபுரைம் போனே என்று சொல்லி சொல்லி டார்ச்சர் செய்வானாம்…நகத்தால் உடம்பில் கிள்ளி காயம்…

விவாகரத்து பெற்று அந்த பெண் இப்போது வேலைக்கு போய்கொண்டு இருக்கின்றாள்.. அவளிடம் மறு திருமணத்தை பற்றி பேசினால்… எல்லா ஆண்களையும் மிருகம் என்கின்றாள்… எந்த புத்தில் எந்த பாம்பு இருக்கும் என்று பயப்பட ஆரம்பித்து விட்டாள்…

ஆனால் இப்படி எல்லாம் இல்லாமல் அன்பாக அனுசரனையாக ஒரு கணவன் கிடைத்தால் எப்படி இருக்கும்….அதுவும் அதிர்ந்து பேசாமல்,முதலிரவில் முத்தம் கொடு்த்துக்கொண்டு இருக்கும் போது… பெண் தூக்கம் வருகின்றது என்று சொல்லும் போது, தூங்க முதலிரவில் எத்தனை கணவன் அனுமதி கொடுப்பான்…? மிக முக்கியமாக எனக்கு உன் முதல் காதல் பற்றி எனக்கு கவலையே இல்லை என்று சொன்னால் அந்த கணவன் தெய்வம் அல்லவா? அப்படி பட்ட ஒரு கணவனின் கதைதான் இந்த படம்….

மௌனராகம் படத்தின் கதை இதுதான்….

திவ்யா(ரேவதி) சுட்டிப்பெண்… வீட்டில் பெரிய பெண்… கல்லூரி படிக்கின்றாள்…அவளை பெண் பார்க்க டெல்லியில் மேனேஜராக வேலைபார்க்கும் சந்திரகுமார்(மோகன்) வருகின்றான்… திவ்யாவுக்கு திருமணத்தில் இஷ்டம் இல்லை என்று மாப்பிள்ளை சந்திரகுமாரிடம் சொல்ல போக.. இந்த ஓப்பன் டாக் தனக்கு பிடித்து இருப்பதால் இந்த கல்யயாணத்துக்கு சம்மதம் என்று பெற்றோரிடம் சொல்கின்றான்…..
திவ்யா தனக்கு திருமணம் வேண்டம் என்று மறுக்கின்றாள்… இந்த செய்தியால் திவ்யாவின் அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக்வருகின்றது….இதனால் திவ்யா திருமணத்துக்கு சம்மதம் சொல்ல….

திருமணம் நடந்து மணப்பெண் திவ்யா டெல்லியில் தனிகுடித்தனத்துக்கு போக… அங்கே தனக்கு இந்த கல்யாணத்தில் விருப்பம் இல்லை என்று சொல்லி கணவனிடம் விவாகரத்து கேட்கின்றாள்.. காரணம் கேட்கும் கணவனிடம் தனது முந்தைய காதலன் மனோகரை (கார்த்திக்) காதலித்து திருமணம் செய்து கொள்ள போகும் போது ஒரு விபத்தில் இறந்த கதையை சொல்ல…

கணவன் விவாகரத்து வாங்கி கொடுத்தானா…? இருவரும் மனம் ஒத்தார்களா? என்பதை தெலைகாட்சியில் சேனல் திருப்புகையில் ஏதாவது ஒரு சேனலில்… முக்கியமாக பொதிகையில் சேனலில் இந்த படத்தை பார்க்க வாய்ப்பு அதிகமாகவே இருக்கின்றது…

படத்தின் சுவாரஸ்யங்களில் சில…

இன்றைய நவீன சினிமாவின் ஜாம்பவான்கள் ஒன்றாக பணி புரிந்த படம்….

சினிமாவின் மொழியை அதிகம் யண்படுத்தும்தொழில்நுட்பவியலாலர்கள் நிறைந்தவர்கள் செய்த படம்….

ஒத்த அலைவரிசை உள்ள இயக்குனரும், ஒளிப்பதிவாளரும் இருவரும் இணைந்து செய்த படங்கள் ஏராளம்… இசைஞானியின் இசையோடு பயணித்த இவர்கள் படங்கள் 80க்கு பிறகு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தன….

எனக்கு சினிமா மீதான ஆசையை விதைத்த அக்னிநட்சத்திரம் படத்தை எடுத்த பிரம்மாக்களின் படம்…

இரண்டே பேரை வைத்துக்கொண்டு சுவரஸ்யமான திரைக்கதை அமைத்த படம்… அப்போது இந்த படத்தை பார்த்தவர்கள்…இரண்டு பேர் மட்டும் படம் முழுக்க பேசிக்கொண்டு இருக்கின்றார்கள்.. இந்த படம் ஓடாது என்று சொன்னார்களாம்….அப்படிய ஓடினாலும் ஏ சென்டரில் மட்டும்தான் என்று சப்பை கட்டு கட்டினார்களாம்….
செலவே இல்லாமல் எடுத்த படம்….. படத்தின் பெரும்பாலான காட்சிகள்… சென்னையின் மியூசியத்தில் எடுக்கபட்டது… கார்த்திக்கை விசாரிக்கும் போலிஸ்ஸ்டேசன், சாலை காட்சிகள்…அதே போல் இரவு நேரத்தில் டெல்லியில் ரவுடிகளிடம் இருந்து தப்பி மோகனை ரேவதி கட்டிபிடிக்கும் இடம் எல்லாம் சென்னையில் இரவு நேரத்தில் மியூசியம் எதி்ரில் உள்ள ரோட்டில் மேட்ச் பண்ணி எடுத்த காட்சிகள்தான்….இந்த படம் வந்த போது எனக்கு பதினோறு வயது… ஆனால் எனக்கு சென்னை பரிட்சயம் இல்லை… ஆனால் சென்னை வந்த போது பல இடங்களை பார்த்த போது நானே ஷுட் பண்ண இடங்களை கண்டுபிடித்தேன்… அதே போல் மௌனராகம் படக்குழுவினர் எவரோடும் நான் பேசியதில்லை….

என் அம்மா எதற்கு இந்த படத்தை அப்படி சிலாகித்து பார்த்தாள் என்பது இப்போது எனக்கு புரிகின்றது… ஆனால் அந்த வயதில் இந்த படம் என்னை பொறுத்தவரை செம போர்…. ஒரு சண்டை கூட இல்லை .. ரஜினிபடம் போல் ஒரு ஸ்டைல் இல்லை என்று வருத்தபட்டு நொந்த நூடுல்சாகி பார்த்த படம்….

ஒரு படத்தின் வெற்றி என்பது.. அந்த படத்தின் கதாநாயகியை சரியாக தேர்ந்து எடுத்தாலே பாதி வேலை முடிந்து விடும் என்று சொல்வார்கள்….முதல் காட்சியில் தூங்கி எழுந்து பல் தேய்காமல், காபி குடிக்க கருப்பு ஆப் சாரியில் வரும் ரேவதி… பக்கத்து விட்டு பெண் போல் இருப்பதும் சட்டென மனதில் ஒட்டிக்கொள்வதும் இந்த படத்தின் வெற்றி என்பேன்….

அதே போல் கல்யாணம் நடந்த காட்சி சிம்பிளான ஷாட்டுகளால் எடுத்து இருப்பார்கள்… ரேவதி மேல் மிட் ஷாட்டில் பாலோ செய்யும் கேமரா…அப்படியே ரேவதி சஜஷனில் மோகன் மாப்பிள்ளை உடையில்.. அப்படியயே தாலி கட்டி மாலை மாற்றி..

அடுத்த காட்சி அலங்கரிக்கபட்ட முதல் இரவு அறைக்குள் இருக்கும் பூச்சரத்தில் அடுத்த ஷாட் ஓப்பன் அகும்… செலவே இல்லாமல் கல்யாணம் நடத்தியதாக காட்டி இருப்பார்கள்… நிரம்ப கல்யாண கூட்டம், நேம் போர்டு, போட்டோ, வீடியோ, சப்பாடு என்று ஏதுவும் இருக்காது….

நெஞ்சை நெகிழவைத்த காட்சிகளும் வசனங்களும்…..(மணிரத்னம்)

முதலிரவுக்கு போகாமல் வேண்டாம் என்று அடம்பிடிக்கும் ரேவதியிடம் அம்மா சமாதானம் சொல்லும் போது…

உள்ளமாப்பிளை உனக்காக காத்துகிட்டு இருக்காரு…
அம்மா எனக்கு இது பிடிக்கலை… இது வேண்டாம்..
அவரை எனக்கு முன்ன பின்ன கூட தெரியாது…
அவரு உன்னை தொட்டு தாலிக்டடினவரு…
தொட்டு தாலிகட்டிட்டா? எல்லாம் முடிஞ்சி போச்சா??? இரண்டு நாளைக்கு முன்னாடி என்னை இப்படி அனுப்பி இருப்பியா? என்று கேட்கும் வசனம் அரேஞ்சிடு மேரேஜில் முதலிரவு பயத்தோடு இருக்கும் பெண்ணுக்கான நியாயமான கோபம்….

===========
முதன் முதலாக வீட்டில் உள்ளே வரும் மனைவியிடம் எல்லாம் விளக்கி வரும் மோகன்…

இது எல்லாம் செங்கல் சிமென்டால கட்டனது.. இதை வீட மாத்த வேண்டியது நீதான் எனும் போது…அதற்கு ரேவதி எனக்கு செங்கல் சிமெண்ட் போதும் என்ற இடம் திருமணத்தின் வெறுப்பை சொல்லும் இடங்கள்…

================
முதன் முதலாக ஓட்டலில் சாப்பிடும் போது கல்யாணத்தில் இஷ்டம் இல்லை என்று சொல்லும் மனைவியை பார்த்து குழந்தை ஏங்ன அழுதுகிட்டே பொறக்குது தெரியுமா? பூமிக்கு வரும் பயம் இல்லை… ஆனால்புது சூழ்நிலையில் தன்னை எப்படி பழக்கபடுத்க்கொள்வது எப்படி என்று பயத்தில் அழுகின்றது.. அதுமாதிரிதான் நீயும்… என்று சொல்லும் அந்த வசனம்…
==============
ஒரு நல்ல காட்சி……

தயவு செய்து கைய விடுங்க..
பயமா?
இல்லை பிச்சை…
நீங்க தொட்ட எனக்கு கம்பளி பூச்சி ஊறுவது போல் இருக்கின்றது…
என்று சொல்லும் காட்சியில் மோகனின் ரியாக்ஷன் ராஜாவின் பின்னனி இசை… அற்புதம்…
===========
ஐயோ அப்பா என்று ஓட்டலில் மறையும் ரேவதியிடம் வம்புக்கு இழுக்க மிஸ்டர் சத்திரமௌலி என்று அழைக்கும் அந்த காட்சி… இந்த படத்தின் மெயின் சீன் என்று சொல்லலாம்….
==============
லைப்ரேரியில் காதல் சொல்ல வந்த கார்த்திக்கிடம் ஊர் முழுக்க மைக் போட்டு சொல்லு என்று சொல்லு்ம் போது கார்த்திக் ஒரு சீரியஸ் ரியக்ஷன் கொடுத்து விட்டு பிரின்சிபல் ரூமில் இருந்து மைக்கில் சொல்லும் காட்சிகள் சுவாரஸ்யம் நிறைந்து ஒன்று…..
=============
வக்கிலிடம் விவாகரத்து பற்றி பேசும் போது.. வக்கில் உங்க ரெண்டு பேருக்கும் என்ன வேறுபாடு என்று கேட்க…..
வெறுபாடுன்னு ஏதும் இல்லை…பெரிசா ஈடுபாடு இல்லை என்று மோகன் சொல்லும் காட்சியின் வசனம் பலம்..
==============
விவாகரத்து கோர்ட்டில் அப்ளை செய்ததுமே…அதுவரை முன்பக்கத்தில் உட்கார வைத்து காரில் அழைத்து போன மனைவி ரேவதியை பின்பக்க கார் கதவை திறந்து விடுவது நல்ல பஞ்ச்…

அதன் பின் வரும் மனதை மயக்கும் பாடல்….
=============
விகாரத்து பைல் பண்ணி வீட்டுக்கு வந்து ஆபிஸ் நண்பர்கள் இருக்கும் போதே படுத்துக்கொள்ளும் ரேவதி அவர்கள் போன பிறகு சாரி கேட்டுவிட்டு என் மீது எந்த கோபமும் வருத்தமும் இல்லையா?என்று கேட்கும் போது.. குட் நைட் என்று ஒற்றை வார்த்தை சொல்லும் மோகனின் படித்த கேரக்டர் படு ஷார்ப்….
==========
இன்னைக்கு நீ இருக்கற காபி போட்டு தரே.. ஆனா ஒரு வருஷம் கழிச்சி என்று மோகன் முந்தைய காட்சிகளில் ரேவதி பேசும் எல்லா டயலாக்குக்கும் ஒரு பஞ்ச் வைப்பது விறு விறுப்பான காட்சிகள்..
=========
ஒரு நல்ல கணவன் மனைவி காட்சிக்கு ரேவதி முதன் முதலாக மோகனுக்கு காபி போட்டு கொடுக்கும் அந்த காட்சியை சொல்லலாம்…
=========
கையில் அடிப்ட்டு இருக்கும் மோகனுக்கு சாப்பாடு ஊட்ட முயற்ச்சி செய்யும் போது அதை தடுக்கும் போது.. ரேவதி நான் தொட்ட நீங்க ஒன்னும் கருகி போய் விட மாட்டிங்க என்று சொல்லும் போது… எனக்கு ஒன்னும் ஆகாது உனக்குதான் கம்பளிபூச்சி ஊர்வது போல் இருக்கும் என்று சொல்லும் இடம் ஆண்களின் கைதட்டல் வாங்கிய இடம்….
=========
இந்த படத்துக்கு பின் ஆண்கள் பெண்களை சற்று மரியாதையாக பார்த்தர்க்ள் என்று சொல்லலாம்…
==========
கணக்கு எல்லாம் போட்டு விட்டு ரேவதி நீங்க சொல்ல எதாவது இருக்கின்றதா? என்று கேட்க நாலு மணிக்கு டிரெயின் இரண்டுமணிக்கு வந்து அழைச்சிகிட்டு போறேன் என்று சொல்வது….
==========

ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம்….
கார்த்திக் மாலில் வேகமாக நடக்கும் போது லோ ஆங்கி்ளில் பாலோ செய்வது…
ராஷ்ட்ரபதி பவன் கோபுரத்தை லோ ஆங்கிலில் ரோட்டில் மீடியனி்ல் வைத்து சென்டரில் பியட் கார் வருவது போல் எடுத்த காட்சி அற்புதம்…

நிலவே பாடலில் பல ஷாட்டுகளில் நிலவு இருப்பது போல் லைட்டிங் செய்து எடுத்து இருப்பார்….

ரேவதி ஒயிட் காட்டன் சாரியில் தரையில் படுத்து இருப்பதையும்…அந்த பெண்ணின் வெறுமையை டாப் ஆங்கிளில் காட்டுவதும் நல்ல ஆங்கிள்…

இந்தியா கேட் அருகில் போய் ரேவதி ஆச்சர்யத்தோடு பார்க்கும் அந்த லோ அங்கில் ஷாட்….
எதெச்சையாக கார் நிறுத்தி புதர் பக்கம் ரேவதி நடக்கும் போது தாஜ்மகாலின் பின்புறத்தையும்….ரேவதி விழி விரிய பார்க்கும் தாஜ்மகால் லாங் ஷாட் எந்த படத்திலும் இந்த ஆங்கிலில் தாஜ்மகாலை நான் பார்த்து இல்லை…

இளையராஜா…

நல்ல சோறு போடுவாதாக சொல்லி, வீட்டுக்கு வேளையோடு மோகனை, ரேவதி வரச்சொல்லி விட்டு சிறுவர்களுடன் வீட்டை அழகுபடுத்தும் போது ஒலிக்கும் பின்னனி இசையின் சந்தோஷம் நமக்கும் ஒட்டிக்கொள்ளும்….

மஞ்சம் வந்த சாங்கில் புல்லாங்குழலில் இருந்து டிரம்பட்டுக்கு மாறும் அந்த பீட் சூப்பர்…

வாலியின் பாடல் வரிகள் அப்போதைய இப்போதைய இளைஞர்களின் தேசிய கீதம்….ராஜாவின் பின்னனி இசையை சுவைக்க…
படத்தின் வெற்றிக்கான உளவியல்காரணங்கள்…..

மோகனை போன்ற கணவன் தனக்கு வேண்டும் என எல்லா பெண்களும் ஆசைப்டடது…

கார்த்திக் போல ஒரு காதலன் தனக்கு வேண்டும் என வயது பெண்கள் நினைத்து….

ரேவதி போல தனக்கு ஒரு மனைவி குடும்ப பாங்காக இருக்க வேண்டும் என்று நினைத்த பல ஆண்கள்…ரேவதி போல் ஒரு காதலியை வேண்டி நின்ற ஆண்கள் இந்த படத்தின் வெற்றிக்கு வழி வகுத்தார்கள்…..

காட்டன் சாரியில் ரேவதி லட்சுமிகடாட்சம்….அதே போல் சிலி்வ் லெஸ் நைட்டியில் டெல்லி வீட்டில் சோ கியூட்…

ரேவதி, மோகன் வீட்டு மற்றும் ரேவதியின் பிறந்த வீட்டு பெட்ரூம் அற்புதமாக இருக்கும் இது போலான பெட்ரூம் இருக்க வேண்டும் என்று நான் ஆசைபபட்டு இருக்கின்றேன்…

தொப்புள்காட்டாத ரேவதி படத்தின் பலமும் மரியாதையும்….

கார்திக் உற்சாகம்…மோகனின் பெருந்தன்மை…ரேவதியின் குறுகுறுப்பு எல்லோரையும் வந்து ஒட்டிக்கொண்டது…..
எடிட்டிங்..
இரண்டு பேர் அதிகம் பேசுவதால் தேவையில்லா காட்சிகள் டிரிம் செய்யபட்டால்தான் உட்கார முடியும் அதற்க்கு லெனின் எடிட்டிங்ப டத்தின் ஜீவ நாடி…
படத்தில் கிளைமாக்சில் மோகன் ரயில் நிலையத்தில் உருண்டு ஓடி வருவது படத்தின் உச்சபட்ச காமெடி….படத்தில் காமெடி ஒன்றும் பெரிதாய் இல்லை…

அதை தவிர்த்து அதற்கு முன் நடக்கும் ரேவதி, மோகன் உரையாடல் நெஞ்சை நெகிழவைக்கும் கண்களை குளமாக்கும்…
இருப்பினும் காதலிப்பவரும்,திருமணமானவரும் இந்த படத்தை ஒரு முறை கண்டிப்பாக பார்க்க வேண்டும்…..

படக்குழுவினர் விபரம்…

Directed by Mani Ratnam
Produced by G. Venkateswaran
Written by Mani Ratnam
Starring Revathi
Mohan
Karthik Muthuraman
V. K. Ramasamy
Music by Ilaiyaraaja
Cinematography P. C. Sriram
Distributed by Sujatha Films
Release date(s) 1986
Running time 146 mins
Language Tamil
Gross revenue $1 million
குறிப்பு…
நான் எழுதும் விமர்சனத்தில் அதிக நேரம் ஐந்து மணி நேரம் எடுத்துக்கொண்டது இந்த படத்தின் விமர்சனம்தான்…

அன்புடன்
ஜாக்கிசேகர்