மீண்டும் சிம்புவின் தாறு மாறு

ஜெயம் ரவி, ஹன்சிகா நடித்து அமோக வெற்றிபெற்ற ரோமியோ ஜூலியட் படத்தை தயாரித்த மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ் நந்தகோபால் தற்போது விக்ரம்பிரபு, ஷாமிலி  நடிப்பில், கணேஷ் விநாயக் இயக்கத்தில்  “ வீரசிவாஜி “ படத்தை அதிக பொருட்செலவில் தயாரித்துக் கொண்டிருக்கிறார்.

இந்த படத்திற்கு இமான் இசையில்.. டங்கா மாரி ஊதாரி  மற்றும் எங்க தல எங்க தல  பாடல்களை எழுதிய ரோகேஷ் வரிகளில் வரும் “ தாறு மாறு தக்காளி சோறு “ என்று தொடங்கும் பாடலை சிம்பு நேற்று பாடினார்.