Actor Ulaganayagan Kamal Hasan Introduce the “Click art Museum” Logo

பிரபல ஓவியரும்  தயாரிப்பாளர் மற்றும் நடிகருமான ஏ.பி. ஸ்ரீதர் சென்னை விஜிபி ஸ்னோ கிங்டம்  அரங்கின் மாடியில் , தான் அமைத்து இருக்கும் தந்திரக் கலை அருங்காட்சியகத்தில்  இடம்பெற்று  இருக்கும்  ஓவியங்களை  உலக  நாயகன் கமல் ஹாசனிடம் காட்டினார்.   ஒவியங்களைப் பார்த்து  பாராட்டிய  கமல் ஹாசன் ” இது உண்மையிலேயே  மிக  வித்தியாசமான முயற்சி  என்று தனது  மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்தார். அத்துடன் இந்த ஓவியக்கலை லோகோவை அறிமுகம் செய்துவைத்தார்.