Vetrivel Movie Review By jackiesekar | M.Sasikumar | Mia George | D.Imman | Vasanthamani

வெற்றிவேல்.. திரை விமர்சனம்.

தென்மாவட்ட காதலுக்கு துணை நிற்பவரும், நண்பர்களின் காதலை ஒன்று   சேர்த்து வைத்து தியாக இன்றளவும் செயல்பட்டு வரும்.. அண்ணன் சசிக்குமார் நடிப்பில்  இந்த வாரம் வெளிவந்து இருக்கும் திரைப்படம். வெற்றிவேல்.

இந்த திரைப்படத்தில் கேரளத்து பைங்கிளி மியாஜார்ஜோடு  ஜோடி சேர்ந்து அதே  ஆக்மார்க் தாடியுடன் காதல் செய்கின்றார்.. இந்த வெற்றி வேல்  திரைப்படத்தில் சசிக்குமார் யார் காதலுக்கு துணை நிற்கின்றார் என்பதை இந்த விமர்சனத்தில் பார்த்து விடுவோம்.

======

வெற்றிவேல் திரைப்படத்தின் கதை என்ன?

இளவரசு ரேணுகா தம்பதிகளுக்கு  இரண்டு பிள்ளைகள் மூத்தவன்  சசிக்குமார் (வெற்றிவேல்)… தஞ்சாவுர் பல்கலைகழகத்தில் ஆராச்சி செய்யும் மியாஜார்ஜை உயிருக்கு உயிராக  காதலிக்கின்றார்……ஆனால் சந்தர்ப்ப வசத்தால் அவர் ஊர்பேர் தெரியாத பெண்ணை திடும் என மனம் முடிக்கும் சூழல் ஏற்படுகின்றது.. அதற்கான காரணம் என்ன என்பதை வெண்திரையில் பார்த்து மகிழுங்கள்.

=====

படத்தின் சுவாரஸ்யங்கள்..

சசிக்குமார் திரைப்படங்களான நாடோடி, சுந்தரபாண்டியன் குட்டி புலி வரிசையில் இதுவும் சசிக்குமாருக்கு  ஒரு திரைப்படம்… அவ்வளவே.. அதே போல   வித்தியாசமான கதைக்களம். வித்தியாசமான கெட்டப் எல்லாம் ஒன்றும் இல்லை… ஆனாலும் அவருடைய பாத்திரத்தை மிக சிறப்பாக செய்துள்ளார்.

மியாஜார்ஜ் செம கியூட்டாக இருக்கார்.. அவருடைகாஸ்ட்யூம் செலக்ஷன் கலர்ஸ் எல்லாம்  அற்புதம்.  சசிக்குமாரை கட்டிப்பிடிப்பதில் கூட கவனத்தோடு இருப்பது பிரேமிங்கில் தெரிகின்றது…

பிச்சைக்காரன் திரைப்பட நாயகி சான்டா டைட்டஸ் அவருடைய  பாத்திரத்தை நிறைவாக செய்துள்ளார்…  அதே போல சசிக்குமாருக்கு மனைவியாக நடித்து இருப்பவர் சான்சே இல்லை.. அவரும் மிக சிறப்பாக நடித்ததோடு சின்ன சின்ன கியூட் எக்ஸ்பிரஷன் அருமை ரகம். உன்னை போல பாடலில் அவரின் கண்கள்  கவிதை  பேசுகின்றன.

தம்பி ராமைய்யா… ஓகே தான் பெரியதாய் சோபிக்கவில்லை.. நாடோடி குழுவை வைத்து பெண்ணை கடத்தும் சீனை செய்துள்ளார்கள்.. அவர்கள் சசிக்குமார் ரிசப்பஷனில் தலையை தொங்க போட்டுக்கொண்டு நிற்கும் காட்சி அருமை.

இளவரசு ரேணுகா தென்மாவட்டத்து தம்பதிகளாக வாழ்த்து இருக்கின்றார்கள்… ரேணுகா செட் ஆவரா? என்று நினைக்கும் போது மூன்று சீனுக்கு மேல் வெற்றிவேல் அம்மாவாக அசத்த ஆரம்பித்து விட்டார்..

 

விஜி சந்திரசேகர் தன் கோபத்தை கண்களில்  தெறிக்க விட்டுள்ளார்.  நிறைய காட்சிகளில் அருமையாக நடித்துள்ளார். முக்கியமாக  கிளைமாக்சில் அவனை  கொல்லுடா என்று கம்பி எடுத்து கொடுக்கும் காட்சிகள்.

பிரபுவுக்கு இன்னும் கொஞ்சம் பில்டம் விஷயத்தை கிளைமாக்சில்  வைத்து இருக்கலாம்.

இந்த திரைப்படத்துக்கான ஒளிப்பதிவு கதிர், இமான் இசையில்  உன்னை போல பாடல் இனி தென்மாவட்டத்து திருமண வீடியோக்களில் மணமகளை காட்டும் போது  நிச்சயம் இடம் பெரும் பாடலாக இருக்கும்

=========

படக்குழுவினர்  விபரம்.

Directed by Vasantha Mani
Produced by R.Ravindran
Written by Vasantha Mani
Starring M. Sasikumar
Miya George
Music by D. Imman
Cinematography S. R. Kathir
Edited by A.L.RAMESH
Production
company
Trident arts
Distributed by Lyca Productions
Country India
Language Tamil

========

வெற்றிவேல் வீடா என்று கொரியர்காரர்கள் கேட்கும் காட்சியும்….அப்பன் செத்து  ஒரு மாசம் கூட ஆவலை அதுக்குள்ள சாந்தி முகூர்தம் ஏற்பாடு பண்றிங்களே… அது என்ன பொம்பளையா பொம்மையா? என்று சசிக்குமார் சொல்லும் காட்சிகள் நெகிழ்ச்சியின் உச்சம்.

ஓவர் ஆளாக பார்த்தால் படம்  தேவர்மகன்  மற்றும் சசிக்குமார் டெம்பிளேட் கதையில் அங்காங்கே  செண்டிமென்ட் காதல், காமடி என்று கலந்து இயக்குனர் வசந்தமணி   கொடுத்து இருக்கின்றார்…  இரண்டாம் பாதியில் இருக்கும் பரபரப்புமுதல் பாதியில் கொஞ்சம் இருந்து இருக்க வேண்டும்…

மற்றபடி  வெற்றிவேலுக்கு ஜாக்கி சினிமாஸ் மதிப்பு 3/5

சசிக்குமார் பார்முலா தெரியாதவர்கள் ஒரு தடவை கண்டிப்பாக பார்க்கலாம்…

 

ஜாக்கிசேகர்

22/04/2016.

 

 

வீடியோ விமர்சனம்.

https://youtu.be/kq6B_bHxsSc