ஒளிப்பதிவாளர் PG முத்தையா தற்போது ‘ராஜா மந்திரி’ திரைப்படத்தின் தயாரிப்பாளர்

“தட்டான் தட்டான் தண்ணிக்குள்ள, தவள ரெண்டும் பொந்துக்குள்ள, சூ சூ மாரி!” என்ற ‘பூ’ திரைப்பட பாடலைதெரியாதவர்கள் தமிழ்நாட்டில் இருக்க முடியாது. பாடல் மட்டுமின்றி அந்த திரைப்படத்தின் அழகிய காட்சிகளுக்கும் சொந்தக்காரரான ஒளிப்பதிவாளர் PG முத்தையா தற்போது ராஜா மந்திரி திரைப்படம் மூலம்தயாரிப்பாளராக அடி எடுத்து வைத்திருக்கிறார். “என் பெற்றோர் மற்றும் என் மனைவி எனக்கு பக்கபலமாக இருந்தனர்.அப்பா பள்ளிகூட வாத்தியார்; நடுத்தர குடும்பத்தில் பிறந்திருந்தாலும், என் எண்ணத்திற்கு குறுக்கே அவர்கள்ஒருபோதும் நின்றதில்லை. அவர்களின் துணை இல்லை என்றால் சினிமா துறையில் சாதிக்க வேண்டும் என்ற என்கனவு வெறும் கனவாகவே மறைந்திருக்கும்!” என்று நெஞ்சம் நெகிழ்கிறார் ஒளிப்பதிவாளர் PGமுத்தையா. எஸ்.ஆர்.எம் பல்கலைகழகத்தில் தனது விஸ்காம் படிப்பை முடித்த இவர், ஐந்து வருடமாக ஒளிப்பதிவாளர் ராஜரத்தினம், ரவிவர்மன், மற்றும் SR கதிர் ஆகியோரிடம் உதவியாளராக பணி புரிந்தது குறிப்பிடத்தக்கது. தன் ஐந்துவருட கடின உழைப்பின் பலனாய் கிடைத்த ஒரு நற்கனி தான் ‘பூ’ திரைப்படம். தன்னுடைய தனித்துவமான ஒளிப்பதிவால் தனக்கென ஒரு அங்கீகாரத்தை பெற்ற முத்தையா, அதனை தொடர்ந்து கண்டேன் காதலை, அவள்பெயர் தமிழரசி, சகுனி, சேட்டை மற்றும் சண்டி வீரன் போன்ற திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணி ஆற்றியதுகுறிப்பிடத்தக்கது. இவர் தற்போது உஷா கிருஷ்ணன் இயக்கும் ராஜா மந்திரி திரைப்படம் மூலம் தயாரிப்பாளராக உருவெடுத்துள்ளார்.

“எனது கல்லூரி நாட்களில் இருந்தே எனக்கும் எனது நண்பர்களுக்கும் ஒரு படம் தயாரிக்கும் கனவு இருந்து வந்தது.அதற்கு நாங்கள் எடுத்த முயற்சி தோல்வியை தழுவியது. அதன் பிறகு நான் முழுக்க முழுக்க ஒளிப்பதிவில் கவனம்செலுத்தி வந்தேன். இப்போது மீண்டும் ஓர் புதிய முத்தையாவாக தயாரிப்பில் அடியெடுத்து வைத்ததற்கு மிக முக்கியகாரணம் இயக்குனர் உஷா கிருஷ்ணன் எனக்கு அளித்த நம்பிக்கைதான். ராஜா மந்திரி கண்டிப்பாக அனைவரையும் கவரகூடிய ஓர் திரைப்படமாக அமையும். ஏனென்றால் மற்ற கிராமத்து கதைகளில் இருந்து ராஜா மந்திரி முற்றிலும்மாறுபட்ட கதை அம்சத்தை கொண்டது. திரைப்படத்தை காண வரும் ஒவ்வொருவரும் தங்களின் கதாப்பாதிரங்களைதிரையில் உணருவர்” என்றார் PG முத்தையா.