‘சவுண்ட் அன்பௌண்ட்’

தேதி: மார்ச் 29, 2016
நேரம்: இரவு 7 மணி
இடம்: சார் முத்தா வெங்கடசுப்பாராவ் கச்சேரி மஹால்,லேடி ஆண்டாள்
அனுமதி இலவசம்: தொடர்பு கொள்க – 9840580525, 4443444786
நிகழ்ச்சி சுருக்கம்:

ஆஸ்கார் நாயகன், இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானும், கே.எம். இசை கூடமும் இணைந்து சென்னையில் முதல் முறையாக மூன்று வெவ்வேறு விதமான உலக இசை நிகழ்ச்சிகளை நடத்த உள்ளனர். உலக இசையை இந்தியாவிற்கு கொண்டு வரும் முயற்ச்சியில், இந்த பிரமாண்ட இசை திருவிழா நடைபெற உள்ளது. மூன்று வெவ்வேறு வித்தியாசமான நிகழ்வுகள் முழுக்க முழுக்க கே.எம். இசை கூடத்தின் மாணவர்களால் நிகழப்படுவது குறிப்பிடதக்கது.

மூன்று தனித்துவம் மிக்க இசை வகைகள்:

“நிகழ்ச்சி நிரல் மொத்தம் மூன்று பிரிவுகளாக வடிவமைக்கப்பட்டு உள்ளது.

முதலில் NAFS எனப்படும் ‘அ – கபெள்ளா’ குழுவனரின் நிகழ்வு. இக்குழுவினர் ஏற்கனவே ‘Tauba Tauba’ மற்றும் ‘ghanan ghanan’ என்ற காணொளி மூலமாக சமூகவலைதளங்களாகிய டுவிட்டர், யூடூப்பிலும் பெரும் பாராட்டை பெற்றவர்கள்.

இரண்டாவதாக ‘ஹான்ட்ஸ் ஆப் பயர்’ எனப்படும் ‘ரஷ்யன் பியானோ’, அதாவது பியானோ வாசிக்க பல முறைகள் இருந்தாலும் அவற்றில் ‘ரஷ்யன் பியானோ’ வகையை தேர்ந்தெடுத்து, அதில் மட்டும் முழு தேர்ச்சியை பெற்ற இளைஞர் குழுவால் வாசிக்கப்படும் ஓர் நிகழ்வு.

மூன்றாவதாக, ‘Sempre Libera’ என்கிற கே.எம். இசை கல்லூரியின் புத்தம் புதிய குழு, இக்குழுவினர், நமது கர்நாடக சங்கீதத்தையும் மேற்கத்திய இசையும் அழகே ஒன்று சேர்த்து இசை நாடகத்தின் வழியாக சிறப்பிக்க உள்ளனர்..

கே.எம். இசை கூடமும் அதன் வளர்ச்சியும்:

2008 ஆம் ஆண்டு சென்னையில் தொடங்கப்பட்ட கே.எம். இசை கூடம் உலகத்தர இசையை மாணவர்களுக்கு தோற்றுவிக்கும் கல்லூரியாக இன்று திகழ்ந்து வருகிறது. கர்நாடக சங்கீதத்தையும், உலக இசையையும் ஒன்றாக சேர்த்து இசைக்கு ஒரு புதிய பாதையை உருவாக்கிய பெருமையும் கே.எம். இசை கூடத்திற்கு தான் சேரும்.

———————————————————————————————————————-

கே.எம். இசை கல்லூரி, எண் 19 – விநாயகபுரம் 2வது தெரு, அரும்பாக்கம் – சென்னை 600106. தொலைப்பேசி: 044 – 43444786