Theri Movie Trailer Review | தெறி டிரைலர் ரிவியூவ்

மூன்று விஜய் என்றார்கள்..

 

மூன்று விஜய் இல்லை என்று  டிரைலர் சொன்னாலும்.. சரி மூன்று  விஜய் என்றே நாமும் படம் வெளிவரும் வரை சொல்லுவோம்…

ஜோசப்குருவில்லா மகளோடு வாழ்கின்றார்.. அவருக்கு காதலியாக எமிஜாக்சன்,  அவள் மகள் படிக்கும் பள்ளி ஆசிரியை.

அடுத்த  கெட்டப்  விஜய்….  விஜயகுமார் எனும் போலிஸ் ஆபிசர். அம்மா ராதிகா  அவருக்கு காதலியாக  சமந்தா..

மூன்றாவதாக ஒரு விஜய் தர்மேஷ்வர்  மில்ட்ரி கெட்டப்பில் பைக்கில் பயணிக்கின்றார்…

 

ஓவரைலாக டிரைலர் பார்க்கையில் செமையாக ஸ்டைலிஷ் மேக்கிங்கில் அசத்துகின்றது என்று சொல்லாம்…ஜிவி பிரகாஷின் 50 வது திரைப்படம்  முதல் முறை கேட்கும் போது இம்பர்சிவ்வாக இல்லை  ஆனால் கேட்க  கேட்க பிடித்து விடுகின்றது.

 

உதிரிபூக்கள் மகேந்திரன் இந்த படத்தில் வில்லன் கேரக்டரில்  நடித்துள்ளார்…  இத்தனை நாள்  சினிமாவில் ஒதுங்கி இருந்தமைக்கு   இது போன்ற குணச்சித்திர கேரக்டர்களை அவர் செய்து இருக்கலாம்.

கேமராமேன் ஜார்ஜிவில்லியம்ஸ் ஒளிப்பதிவில்  காட்சிகள் அசத்தல் ரகம்…

 

பாரிஸ் கார்னரில்  தட்டு வண்டியில் கரும்பு கழியை எடுத்து ரவுடிகளை வெளுத்து வாங்கும் காட்சி அருமை.

முதன் முறையாக குடும்ப தலைவன் என்ற  மைதானத்தில் விளையாட   வருகின்றார் விஜய்…

மூன்று   கெட்டப் விஜய்யும்  வெவ்வெறாகவோ..  அல்லது ஒரே ஆளாகவோ இருக்கலாம்…

மூன்று கெட்டப்பா.. சிங்கிளா என்பது படம் வெளியாகும் தமிழ் புத்தாண்டு அன்று தெரிந்து விடும்.

 

நம்ம டிரைலர் ரிவுயூவ்.

 

 

Related posts