Jackiecinemas

Spotlight ( 2015 ) Movie Review By Jackiesekar

Hollywood

 

#spotlight
investigative journalism ங்கறதுஒரு கலைன்னு வெளி நாட்டுல சொல்லலாம்… ஆனா நம்ம ஊர்ல உயிருக்கு உத்திரவாதம் இல்லாத விஷயம்… investigative journalism ங்கறது சாதாரண விஷயம் இல்லை… உயிரை பணயம் வைக்கிற விஷயம்… உடல் பொருள் ஆவி அத்தனையும் கொடுக்க தயாராக இருக்க வேண்டும்…
முதன் முதலில் தமிழகத்தில் ஒருவன் எழுத்தை பார்த்து பயந்து போனது யாருக்கு தெரியுமா? எனக்கு தெரிந்து முன்டாசுக்கவி பாரதிக்குதான்.. குறித்துக்கொள்ளுங்கள் எனக்கு தெரிந்தவரை……. பாரதியை கைது செய்ய ஸ்கெட்ச் போட்டார்கள்… ஆனாலும் சுந்திர தாகத்தை தனது கட்டுரை மற்றும் கவிதைகள் மூலம் தமிழக மக்களுக்கு சுதந்திர தாகத்தை ஊட்டிக்கொண்டு இருந்தான்…
விடுதலை போராட்ட வீரர் வஉசிக்கு இரட்டை ஆயுள் தண்டனை கொடுத்ததை , இந்தியா என்ற வார ஏட்டிலும், பாலபாரதம் என்ற ஆங்கில இதழிலும் தோலுரித்து தொங்க விட்டுக்கொண்டு இருக்க….. 1918 ஆம் ஆண்டில் பாண்டிச்சேரியில் இருந்து வெளியேறிய போது தமிழ் நாட்டு எல்லையில் பாரதி கைது செய்யப்பட்டார்… 34 நாட்கள் காவலில் வைக்கபட்டு விடுதலை செய்யப்பட்டார்…
இவைகள் investigative journalism த்தில் வருமா இல்லையா என்பது எனக்கு தெரியாது.. ஆனால் எழுத்தை பார்த்து பயந்து கைது வரை போன நபர் பாரதியார் என்பது மட்டும் தெரியும்… இன்னும் பலர் இருந்து இருக்கலாம்… எனக்கு தெரிந்தவரை நான் எழுதுகிறேன்.
அடுத்து investigative journalism த்தில் அதிகம் பங்கு வகித்தவர்.. லக்ஷ்மிகாந்தன்…1944 ஆம் அவர் நடத்திய சினி கூத்து பத்திரிக்கை மூலம்…. நிறைய உண்மைகளும் புனைவுகளும் எழுது எழுதி பிரபலங்களிடம் மிரட்டி காசு பார்க்க தொடங்கினார்.. ஆனால்.. சைக்கிள் ரிக்ஷாவில் போகும் போது கத்திக் குத்து வாங்கியதோடு…

மருத்துவமனைக்கு போகும் வழியில் தன் வக்கில் வீட்டுக்கு சென்று நடந்தவற்றை விளக்கியதோடு ,அதன் பின்  வக்கிலின் அறிவுரையின் பேரில் போலிஸ் ஸ்டேஷனில் வாக்கு மூலத்தையும் கொடுத்து விட்டு அதன் பின் மருத்துவமனையில் சேர்ந்து பரலோகம் லக்ஷ்மிகாந்தன் செல்ல..

கலைவாணர் மற்றும் தென்னிந்திய முதல் சூப்பர் ஸ்டார் தியாகராஜ பாகவதர் போன்றவர்கள் லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு வாழ்க்கையை இழந்தார்கள்… investigative journalism தமிழில் மஞ்சள் பத்திரிக்கையில் அதுவும் பிரபலங்களை மிரட்டி பணம் பறிக்கவே பயண்பட்டது எனலாம்…. அதில் கவணிக்கப்படவேண்டிய விஷயம்….. நிறைய  அவர் எழுதியதில்  நிறைய உண்மைகள் இருந்தும் உண்மை.
அதன் பின் 1988 களில்  தராசு பத்திரிக்கை தமிழ் பத்திரிக்கை சூழலில் investigative journalism க்கு புது ரத்தம் பாய்ச்சப்பட்டது எனலாம்… ஆனாலும் அலுவலகத்துக்கு உள்ளேயே போய் சூறையாடி இரண்டு உயிர்கள் பலியான காரணத்தால் investigative journalism என்றாலே தமிழ் பத்திரிக்கை சூழலில் கிலி பிடிக்க ஆரம்பித்தது அந்த சம்பவத்திற்கு பிறகுதான்.
தராசு பத்திரிக்கையில் பணியாற்றிய கோபால் பின்னாளில் நக்கீரன் கோபல் ஆனார்…இன்று சினிமா பத்திரிக்கையாளர் மற்றும் இயக்குனராக வலம் வரும் முத்துராமலிங்கம் அதிமுக அலுவலகத்தில் நடந்த கலாட்டாவை எதிரில் இருந்து அடுக்குமாடி குடியிறுப்பு வீட்டின் மொட்டை மாடியில் இருந்துக்கொண்டு இரண்டு நாட்களாக சோறு தண்ணியில்லாமல் புகைப்படம் எடுத்ததுதான் இன்றைக்கும் வரலாற்று ஆவணம்…
அதே போல வீரப்பன் எப்படி இருப்பான்? என்பது யாருக்கும் தெரியாது… மாயாவி வீரப்பன் என்று பத்திரிக்கைகள் தொடர்ந்து எழுதி வந்த வகையில் என்றைக்கோ கர்நாடக போலிசிடம் சிக்கிய போது எடுத்த புகைப்படத்தை வைத்து தமிழக பத்திரிக்கைகள் ஒப்பேத்தி கட்டுரை எழுதிக்கொண்டு இருந்த வேளையில்….. முதல் முறையாக வீரப்பன் என்பவன் இவன்தான் என்று சிவசுப்ரமணியம் என்ற பிரிலான்ஸ் ரிப்போர்ட்டர் முதன் முறையாக வீரப்பனின் பேட்டியை வெளியிட்டார்… பின்னாளில் நக்கீரன் பத்திரிக்கையில் பணிக்கு சேர்ந்தார். இந்திய அளவில் தெகல்கா பத்திரிக்கை மத்திய அரசின் வண்டவாளங்களை தண்டவாளத்தில் ஏற்றியது…அதன் பின் தமிழில் ஜுனியர் விகடன், நெற்றிக்கண், தமிழன் எக்ஸ்பிரஸ், ரிப்போர்ட்டர் என்று பத்திரிக்கைகள் இயங்கினாலும் பியூர் investigative journalism என்ற எந்த பத்திரிக்கையும் இல்லை.. ஏதாவது ஒரு கட்சி சார்பு தேவையாக இருக்கின்றது .. இல்லையென்றால் உயிருக்கு உத்திரவாதம் இல்லாமல் இருக்கும் போது உயிரா?investigative journalism மா ? என்றால் உயிர் என்ற பதில் தான் முதலில் நிற்கும்..
ஆனால் அமெரிக்காவில் இருக்கும் பாஸ்டன் குளோப் பத்திரிக்கை investigative journalism த்துக்கு சிறந்த எடுத்துக்காட்டாக இருந்ததோடு பல ஊழல்களையும் முடி மறைக்கப்பட்ட உண்மைகளையும் investigative journalism செய்து பிரித்து மேய்ந்துள்ளது… எல்லாவற்றையும் விட முக்கியம் 2003 ஆம் ஆண்டு மக்களுக்கான சேவையில் பங்கு எடுத்துக்கொண்டாதற்காக பாஸ்டன் குளோப் பத்திரிக்கைக்கு 2003 ஆம் ஆண்டின் புளிட்சர் விருது கொடுக்கப்பட்டது என்றால் அவர்களின் investigative journalism எந்த அளவுக்கு புகழ் பெற்றது என்பதை உங்களால் அறிந்துக்கொள்ள முடியும்….
பாஸ்டன் குளோப் பத்திரிக்கையில் வெளி வந்த அதிரடியான ஒரு முக்கிய கட்டுரைக்குதான் புளிட்சர் விருது கொடுக்கப்பட்டது… எதற்காக கொடுக்கப்பட்டதோ அந்த பிரச்சனையை மட்டும் மையமாக எடுத்துக்கொண்டு உருவான ஹாலிவுட் திரைப்படம்தான் ஸ்பாட் லைட். தமிழில் ஊமை விழிகள் திரைப்படத்தை குறிப்பிட்டு சொல்லலாம்…
=======
சரி ஸ்பாட்லைட் திரைப்படத்தின் கதை என்ன?

download (4)
பாஸ்டன் நகரில் 1872 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட பத்திரிக்கை பாஸ்டன் குளோப் மிக பழமையான அதே வேளையில் investigative journalism க்கு புகழ் பெற்ற பத்திரிக்கை…
அந்த பத்திரிக்கையில் investigative journalism க்கு புகழ் பெற்ற குருப்.. ஸ்பாட் லைட்… வெட்டிக்கொண்டு வா என்றால் கட்டிக்கொண்டு வரும் ரிப்போர்டர்கள்…
பாஸ்டன் குளோப் பத்திரிக்கையில் புதிய பாஸாக பதவி ஏற்றவர் Marty Baron .. அவர் ஸ்பாட் லைட் குழுவிவினரை அழைத்து பாஸ்டனில் இருக்கும் கத்தோலிக்க தேவாலயங்களில் உள்ள பாதிரியார்கள் குழந்தைகளை செக்ஸ் டார்சர் செய்வதாக வந்த செய்திக்கு முக்கியத்துவம் கொடுத்து அதன் பின்னனியை அலச செய்ய சொல்ல…. அது அனுமார் வாலாக நீண்டு செல்ல… உண்மையை கண்டு பிடித்தார்களா இல்லையா என்பதுதான் கதை…
========
படத்தின் சுவாரஸ்யங்கள்
இது உண்மைகதை… ஆனால் அதை பரபரப்பான திரைப்டமாக இயக்கி சீட்டின் நுனிக்கே அழைத்து செல்கின்றார்… இந்த திரைப் படத்தின் இயக்குனர் Tom McCarthy
குழந்தைகளை செக்ஸ் டார்சர் செய்வது பலகாலமாக நடக்கும் எகாடுமை இது… அது மட்டுமல்ல…இறைவன் பெயரை முன்வைத்து நடக்கும் கொடுமை… உண்மையே தெரிந்தாலும் எந்த பத்திரிக்கையும் உண்மையை உரக்க சொல்ல ஆர்வம் காட்டவில்லை.. காரணம் மதத்தின் மானம் கப்பல் ஏறி விடும் அல்லவா? இதையே கேடயமாக்கி பாதிரியார்கள் அடித்த கூத்துக்களை வெட்ட வெளிச்சமாக்க ஸ்பாட் லைட் டீம் போராடுகின்றது.

 

மிக முக்கியமாக ஸ்பாட் லைட் டீமில் Sacha Pfeiffer கேரக்டரில் நடிக்க Rachel McAdams பின்னி இருக்கின்றார்… பாதிக்கப்பட்டவர்களை போல்டாக பேட்டி எடுப்பதும் முக்கியமாக காபி ஷாப்பி பாதிக்கப்பட்டவனை பேட்டி எடுக்க கேவாக உறுமாறிய அவலத்தோடு தன்னை புளோ ஜாப் செய்ய வைத்து தன்னை கடவுளின் பெயரால் மிரட்டி மிரட்டி செக்ஸ் வைத்துக்கொண்ட கொடுமையை அழுகையின் ஊடே விவரிக்கும் போது… படம் பார்க்கும் நமக்கு பகிர் என்கின்றது…
அவர் என்னை நாசம் செய்து விட்டார் எனும் போது.. இப்படி எல்லோரும் ஒரே வார்த்தையில் சொல்லி விடுகின்றார்கள்.. எந்த விதமாக செக்ஸ் டார்சர் செய்தார்கள் என்று விரிவாய் Sacha Pfeiffer கேரக்டர் பதியும் போது…. நம் மனதுக்குள் நுழைந்து கொள்கின்றார்..imagehandler
அதை விட
நடிகர் Mark Ruffalo சான்சே இல்லை…. Michael Rezendes கேரக்டரில் நடித்து பின்னி இருக்கின்றார்…. உண்மையை வெளியே சொல்ல வேண்டும் என்ற துடிப்பு என்ன… அது பற்றிய ஆதாரங்களை திரட்ட அவர் மேற்கொள்ளும் முயற்சிகள்…அவருக்கு ஏற்படும் தடைகள் எல்லாவற்றையும் விட அவரின் துறு துறுப்பு படம் பார்க்கும் நம்மிடமும் தொற்றிக்கொள்கின்றது..
Michael Keaton வழக்கம் போல நடிப்பில் பின்னி இருந்தாலும் Walter “Robby” Robinson கேரக்டரில் அலட்டிக்கொள்ளாத நடிப்பை வழங்கி இருக்கின்றார்… மிக முக்கியமாக கிளைமாக்சில் ஸ்பாட் லைட் என்று போனை எடுத்து காதில் வைக்கும் காட்சியில் மனம் நெகிழ செய்கின்றார்…. அசத்தல்…
Howard Shore இசை முக்கியமாக விக்டிம் களை பேட்டி எடுக்கும் போது வரும் பின்னனி இசையும் கிளைமாக்ஸ் பின்னனி இசையும் அருமை…
Masanobu Takayanagi ஒளிப்பதிவை மிக நேர்த்தியாக செய்து இருக்கின்றார்… அலுவலகம் தான் மெயின் சோர்ஸ் என்பதோடு பதினைந்து வருடத்துக்கு முன் நடக்கும் கதை என்பதால் இன்னும் கவனமாக லைட்டிங் செய்து படம்பிடித்துள்ளார்கள்..
Tom McArdle எடிட்டிங் கிளைமாக்ஸ் காட்சி ஒன்று போதும்.. காலையில் பேப்பர் அச்சாகி ஒரு பிராளயத்தை ஏற்படுத்த போகின்றது என்பதை சில காட்சிகள் மூலம் அழகாக பார்வையாளனுக்கு கிரிஸ்பாக உணர்த்தியுள்ளார்.
இந்த திரைப்படம் பல்வேறு உலக திரைப்படவிழாக்களில் கலந்துக்கொண்டு பல்வேறு விருதுகளை தட்டிச்சென்ற திரைப்படம் என்பது குறிப்பிடதக்கது.
========
படத்தின் டிரைலர்.


========
படக்குழுவினர் விபரம்..

 

Directed by Tom McCarthy
Produced by
Blye Pagon Faust
Steve Golin
Nicole Rocklin
Michael Sugar
Written by
Tom McCarthy
Josh Singer
Starring
Mark Ruffalo
Michael Keaton
Rachel McAdams
Liev Schreiber
John Slattery
Stanley Tucci
Music by Howard Shore
Cinematography Masanobu Takayanagi
Edited by Tom McArdle
Production
companies
Anonymous Content
First Look Media
Participant Media
Rocklin/Faust
Distributed by Open Road Films
Release dates
September 3, 2015 (Venice)
November 6, 2015 (United States)
February 19, 2016 (Taiwan)
Running time
129 minutes[1]
Country United States
======
பைனல் கிக்….
investigative journalismத்திற்கு சிறந்த உதாரணம் இந்த படம்… அது மட்டுமல்ல… டீம் ஒர்க் என்றால் என்ன? டீம் ஒர்க் மட்டுமே இப்படியான உண்மைகளை சொதப்பாமல் வெளிக்கொண்டு வர உதவும் என்பதை அழுத்தம் திருத்தமாக பதிவு செய்கின்றது… உண்மையில் ஸ்பாட் லைட் டீம் இன்றும் இயங்கி வருகின்றது என்பதும் அந்த கதாபாத்திரங்கள் எடுத்த பிரச்சனையை கையில் எடுத்துக்கொண்டு விட்டார்கள் என்பதையும் மிக அழகாக விவரிக்கின்றது என்னதான் எலக்ட்ரினிக் மீடியா வளர்ந்து விட்டாலும்… பிரிண்ட் மீடியாவுக்கு இருக்க கூடிய மரியாதை என்பது பொது மக்களின் இது போன்ற அடிப்படை பிரச்சனைகளை கையில் எடுத்து போராட வேண்டும்… இல்லையென்றால்… விஜயகாந்த் பத்திரிக்கையாளர்களை பார்த்து தூ என்று துப்பியதை இன்றும் வலைதளங்களில் மீமிஸ் செய்து ஷேர் செய்து மகிழ்வார்கள்… investigative journalism போன்று பெரிய வேலைகள் கூட செய்ய வேண்டாம்… உண்மையை அப்படியே சொன்னாலே போதும்… ஆனால் அது இங்கு சாத்தியம் இல்லை என்பதுதான் உண்மை.

அவசியம் பார்த்தே தீரவேண்டிய திரைப்படம் இந்த ஸ்பாட்லைட்.. முக்கியமாக பத்திரிக்கை துறை நண்பர்கள் அவசியம் பார்க்கவேண்டுகிறேன்… நவம்பரில் வெளியான இந்த திரைப்படம் தற்போது சென்னை சத்தியம் வளாகத்தில் திரையிடப்படுகின்றது.
====
படத்துக்கான ரேட்டிங்.
பத்துக்கு எட்டு.

எனது வீடியோ விமர்சனம்

 

ஜாக்கிசேகர்

ஜாக்கிசினிமாஸ்

23/02/2016

Related posts

யாழினியின் கதை நேரம் – ஓநாயும் 7 ஆட்டுகுட்டிகளும்

admin

நோ கண்ட்ரி பார் ஒல்ட் மேன் கதை என்ன ? பாகம் 2

admin

நோ கண்ட்ரி பார் ஒல்ட் மேன் கதை என்ன ? பாகம் 1

admin

நான்கு வயது யாழினியின் முதல் சினிமா விமர்சனம் ஜங்கிள் புக்

admin

செய்தி வாசிப்பாளரின் காதல் கதை – பார்த்தே தீர வேண்டிய படம்

admin

கேம் ஆப் த்ரோன்ஸ் விமர்சனம் ஒரு அறிவிப்பு

admin

Zodiac (2007) Hollywood Movie Review

admin

Woman at War 2018 Iceland Movie Review

admin

Wind River (2017) Hollywood Movie Review

admin

When You No Longer Love Me 2018 Spain Movie Review

admin

What Happened to Monday (2017) Movie Review

admin

watch Tomorrowland Official Trailer (2015) – George Clooney, Britt Robertson

admin

Leave a Comment