chennai international film festival 2016 |சென்னை 13 வது உலக திரைப்பட விழா

 

 

13 வருடத்துக்கு முன்   பாண்டியை சேர்ந்த அன்பு என்ற உதவி இயக்குனர் உலக படவிழாவுக்கு செல்வதாக இருந்தார் வேலை பளுகாரணமாக அவர் செல்லவில்லை…அந்த டிக்கெட்டை என்னிடம் கொடுத்து படங்களை பார்க்க சொன்னார்.. அதுதான் ஆயிரக்கணக்கான உலக திரைப்படங்கள் பார்க்கவும் அதை பற்றியும் எழுதுவும் விழுந்த முதல் விதை அதுதான்.

 

அதுவரை ஆடிக்கொரு அம்மாவாசைக்குகொரு உலக திரைப்படங்களை பார்த்த   நான்…ஆனந்த விகடனில் கோவா திரைப்பட விழா பற்றிய கட்டுரைகள் படித்து ஏக்கம் கொண்ட நான்… சென்னையில் உலக திரைப்பட விழா அதுவும் .. ஒரு நாளைக்கு ஐந்து திரைப்படம்… அது மட்டுமல்ல…300 ரூபாய்க்கு   பத்து நாளைக்கு திரைப்படங்கள் சென்று பார்க்கலாம் என்று சொன்ன போது மகிழ்ச்சியின் உச்சத்துக்கு சென்று இருந்தேன்…

பைலட் தியேட்டரில்தான் சொன்னையின் முதல் உலக திரைப்பட விழா ஆரம்பம் ஆனது… அதற்கு ஸ்பான்சர் ஹூண்டாய் கம்பெனி…

ஒவ்வோரு படம் ஆரம்பிக்கும் போது ஷாருக்கான் சான்ட்ரோ கார் வாங்க சொல்லி விளம்பர படத்தில் நிர்பந்தித்துக்கொண்டு இருந்தார்….

முதன் முதலாக போலி இல்லாத திரைப்படங்களை பார்த்தேன்…. எந்த பயமில்லாமல் வசனமாக , வார்த்தையாக வைத்தார்கள்… எந்த காட்சியையும் கவலை இல்லாமல்  எடுத்தார்கள்… அப்படி   வசனங்கள்   மற்றும் காட்சிகள் வைத்தாலும் மனித உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட திரைப்படங்கள் நெஞ்சை கவர்ந்தன..

மெட்டுக்குடி மக்களுக்கு வேண்டுமானால் டிசம்பர் மாதத்தில் கர்நாடக சங்கீதம் போதையாக இருந்த நேரத்தில் என்னை போன்ற   சாதாரண ரசிகர்களுக்கு சென்னை உலக திரைப்பட விழா குதுகலத்தை கொடுத்தது என்றால் அது மிகையில்லை.

DSC_0004

மழை காலத்தில் மழையில் நனைந்த படி டீயும் பட்டை சாதமும் சாப்பிட்டு விட்டு படம் பார்த்த கணங்களை எப்படி மறக்க முடியும்.. வெளியில் சாப்பிட்டால்   வயிறு ஒத்துக்காத பெரிசுகள் சாப்பாடு கட்டி வந்து பள்ளி பிள்ளைகள் போல தியேட்டர் ஒதுக்குபுறத்தில் சாப்பிட்ட காட்சிகளை எப்படி எளிதில் மறக்க முடியும்..

ஆனந் தியேட்டரில் என் பக்கத்து சீட்டில் சியான் விக்ரம் இன்று   அவர் அவர் வளர்ச்சி பிரமிக்க   தக்கது….

ஒரு நாளைக்கு ஐந்து படம் …பத்து   நாட்களுக்கு ஐம்பது படம் பார்ப்பது செம போதையானது….

இப்போது சொல்வது   போல எல்லாம் உலக திரைப்பட விழா மேடையில் இதய தெய்வம் புரட்சிதலைவி அம்மா அவர்கள் ஆசியுடன் என்று எல்லாம் சொல்லவில்லை. தனியார் கம்பெனி ஸ்பான்சரில்   நடைபெற்றது…. கலைஞர் ஆட்சியில்தான் உலக திரைப்பட விழாவுக்கு அரசு சார்பில் தொகைகள் ஒதுக்கப்பட்டன…

ஆனால்இன்டோ சினி அப்ரிசேஷன்தான் சென்னையில் உலக திரைப்பட விழா நடக்க சாத்தியமாக்கியது என்பேன்.

பெருமழை காரமாக 13 வது உலக திரைப்பட விழா ஒரு மாதம் தள்ளி நடக்கின்றது. நேற்று உலக திரைப்பட விழா 6/01/2016 அன்று மிகவும் எளிமையாக தொடங்கியது..

படம்முடிந்து மயிலைக்கு போகும் போது 13 வருடங்களுக்கு முன்   சென்னை உலக திரைப்படவிழாவில் பரபரப்பாக இயங்கிய பைலட் தியேட்டர் பொலிவிழந்து தேமே என்று நிற்பதை பார்க்கையில்…

ஒரு சினிமா ரசிகனாக விமர்சகராக வருத்தம் மேலுடுகின்றது…

அந்த பைலட் கட்டிடம் வேண்டுமானால் யாரோ ஒருவருடைய சொத்தாக இருக்கலாம்.. ஆனால் என் மன உளைச்சலை குறைத்து உற்சாகம் கொள்ள வைத்த புண்ணிய பூமி பைலட் திரையரங்க வளாகம் என்றால் அது மிகையில்லை.

மிக அருமையாக தியேட்டர்.. சினிமா பாரடைசோவில் தியேட்டர் இடி படும் போது மனது கிடந்து அடித்துக்கொள்ளுமே… அது போல அந்த தியேட்டர் இடிக்கபடாமல் பரபரபற்று இருப்பதும் நெஞ்சை ரணமாக்குகின்றது..

ஏதாவது செய்யுங்கப்பு….

 

ஜாக்கிசேகர்

07/01/2016

 

 

 

 

 

 

 

 

 

நினைப்பது அல்ல நீ

நிரூபிப்பதே நீ…..

EVER YOURS…