Uppu Karuvadu Press Meet

 

 

 

பொதுவாக வளர்ந்த இயக்குனர்கள் இரண்டு படம் முடிந்தவுடன் அஜித்துக்கும் விஜய்க்கு கதை சொல்ல அலைந்துக்கொண்டு இருப்பார்கள்…ஆனால் நான்குக்கு மேல் உணர்வுபுர்வமான வெற்றிப்படங்களை கொடுத்தும் இன்னமும் தன் இயல்பில் இருந்து மாறாமல் இருக்கும் ஒரே இயக்குனர் தமிழ் சினிமாவில் இயக்குனர் ராதாமோகன் மட்டுமே… ராதாமோகனின் கெத்து என்றே சொல்ல வேண்டும்… காரணம்.. எனது கதைக்கு எவர் தேவையோ… அவரே நாயகன் என்பதில் தெளிவாக இருக்கிறார்.

கிரிக்கெட் யாருக்கு  நன்கு  விளையா  தெரியுமோ..…  அவரே  பெருமைக்கு  புட்பால் விளையாட முடியாது  இல்லையா..?? அது போல இயக்குனர் ராதாமோகன் தன்னுடைய அடுகளம் குறித்து மிக கவனமாக இருக்கின்றார்… அதனாலே தமிழ் சினிமாவின் மதிப்புக்குறியவர்களின்  பட்டியலில் ராதாமோகனும் இருக்கின்றார்…

உப்புக்கருவாடு திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா  சமீபத்தில் நடைபெற்றது… விழா  நெகிழ்ச்சியும் மகிழ்ச்சியுமாக நடந்தேறியது.. விழாவில் பேசிய  நடிகை நந்திதா தன்னை இந்த படத்தில் ஏன்  தேர்ந்து எடுத்தீர்கள் என்ற காரணத்தை சொல்ல வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்… அதற்கு  பதில்  அளித்த  பேசிய ராதாமோகன்…

தன்னுடைய திருமணம் காதல் திருமணம் என்றும் தன் மனைவி கிருஸ்த்துவர் என்றும்… பாதர் ஒருவர் ஏன் இந்த பெண்ணை  தேர்ந்து எடுத்தீர்கள் என்று திரும்ப திரும்ப  கேட்டதற்கு எனக்கு வேறயாரும் கிடைக்கலை… அதனால இவளை கல்யாணம்  பண்ணிக்க போறேன்என்று சொன்னேன். … அதே போல  நந்திதாவும் அப்படித்தான் தேர்வானார் என்று சொல்ல அரங்கம் சிரிப்பலையில்  ஆழ்ந்தது..

ஆழகிய தீயேயின் செகன்ட் பார்ட்தான்  இந்த  உப்புக்கருவாடு…ராதாமோகன்முதல் முறையாக டுயட் மூவிஸ்சில் இருந்து வெளியே வந்து முதல்  முறையாக  வேறு பேனரில் செய்யும் முதல் படம்…

அதே போல  அவருடைய பெரும்பாலான படங்களுக்கு வசனம் எழுதிய விஜி இல்லாமல்   புதியவராக பொன் பார்த்தீபனை களம் இறக்கி இருக்கின்றார்… படத்தின் ஒளிப்பதிவை மிஷ்கினின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர் மகேஷ் முத்துசாமி  செய்து இருக்கிறார்…

காமெடிக்கு குறைவில்லாமல் சமுக நோக்கத்தை  ஆங்காகங்கே  சாடும் இந்த திரைப்படம் இந்த  மாத  இறுதியில் வெளியாகும் என தெரிகிறது.