Expectation More For Inji iduppazhagi movie | Size Zero | arya |anuska

 

‘இஞ்சி இடுப்பழகி’ திரைப்படத்துக்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நான் கூடிக்கொண்டே செல்கிறது.. காரணம்… அந்த திரைப்படத்தில் சேர்க்கப்பட்டு வரும் சமாச்சாரங்கள்தான் எதிர்பார்ப்பை ஏகத்துக்கு எகிற வைக்கின்றது…  உதாரணத்துக்கு இந்தப் படத்துக்காக கதாநாயகி அனுஷ்கா  சுமார் 20 கிலோவுக்கு மேலாக எடைக் கூடினார் … பொதுவான ஆண் நடிகர்கள்தான் ஒரு திரைப்படத்தின் கதைக்கு ஏற்றது போல எடையை கூட்டுவார்கள் குறைப்பார்கள்…. ஆனால்  பிரபல  நடிகை உடையை ஏற்றியது  படத்துக்காக எதிர்பார்ப்பை கூட்டி விட்டது  என்றே சொல்ல வேண்டும்…

 

அனுஷ்காவை  போலவே ‘இஞ்சி இடுப்பழகி’ திரைப்படமும்  தன்னுடைய  எடையைக் கூட்டிக் கொண்டே இருக்கிறது.ஆர்யா, அனுஷ்கா , ஊர்வசி , பிரகாஷ் ராஜ் என பெரிய நட்சத்திர பட்டாளம்  நடித்து இருந்தாலும்… இப்போது கௌரவ வேடத்தில்  தெலுங்கு சூப்பர் ஸ்டடார்…நாகார்ஜுன், ஜீவா, பாபி சிம்மா, ரானா ஆகியோருடன் ஹன்சிகா,தமன்னா,ஸ்ரீ திவ்யா, ரேவதி ஆகியோர் நடித்து உள்ளனர்.ஜீவாவும் , ஹன்சிகாவும் ஆர்யாவின் நெருங்கிய நண்பர்கள் என்பதாலும், பாபி  சிம்மாவும், ஸ்ரீ திவ்யாவும் ஆர்யாவுடன் பெங்களூரு days remake படத்தில் இணைந்து நடித்து இருப்பவர்கள் என்பதாலும் மறுப்பேதும் இல்லாமல் உடனே ஒப்புக் கொண்டனர்.

பொதுவாக  கெஸ்ட் ரோல்களில்  பிரபல நடிகர் நடிகைகள்ஒன்று இரண்டு பேர் நட்புக்காக நடிப்பார்கள்… ஆனால் ஏழு பேருக்கு  மேல்  கெஸ்ட்டாக  நடிப்பதால் இஞ்சி இடுப்பழகி படத்துக்கு எதிர்பார்ப்பு எகிறி கிடக்கின்றது என்பதே உண்மை.

 

‘இஞ்சி இடுப்பழகி’  படத்தின் மையக் கருத்து அழகு என்பது  உடல் அமைப்பிலோ, தோற்ற பொலிவிலோ இருப்பது அல்ல. நம்முள் இருக்கும் நல்ல எண்ணம் தான் உண்மையான் அழகு  என்பதுதான். இந்தக் கருத்தை  ஆமோதிக்கும் காஜல்  அகர்வாலும் , தமன்னாவும் நடிக்க கேட்டவுடன் உடனே  நடிக்க ஒப்புக் கொண்டனர் . அழகாக இருப்பதற்கு, இயற்கையான முறைகளே போதும் , செயற்கை சாதனங்கள்  வேண்டாம் என்றக்  காரணத்தை வலியுறுத்தும் ரேவதியும் இந்தப் படத்தில் நடிக்கிறார்.பி வி பி நிறுவனத்தாருக்கு நட்சத்திரங்கள் இடையே நல்ல தொடர்ப்பு இருந்து வருகிறது என்பதற்கு இதுவே சான்று.

 

பெண்கள் இடையே என்றும் பிரபலமாக இருக்கும் ஆர்யாவும்  சமீபத்திய பிரம்மாண்ட வெற்றிகளால் தென்னிந்திய லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்க படும் அனுஷ்காவும் ஜோடியாக நடிக்கும் இந்தப் படத்தை இயக்கி இருப்பவர் பழம் பெரும் இயக்குனர் ராகவேந்திர ராவ் அவர்களின் மகன் கே எஸ் பிரகாஷ் ராவ். மரகத மணியின்  இசையில் , மதன் கார்க்கியின்  வரிகளில் வெளி வந்த ‘இஞ்சி இடுப்பழகி’ பாடல்களும் , முன்னோட்டமும் ரசிகர்களை பெரும் அளவில் கவர்ந்து உள்ளது.

 

பல்வேறு தரப்பினரை கவரும் ‘இஞ்சி இடுப்பழகி’ இந்த மாதம் 27 தமிழ் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் வெளி ஆகிறது.

 

 

 

 

https://youtu.be/jlLazwzlfco

 

 

 

 

follows on

http://www.jackiecinemas.com/

http://www.jackiesekar.com

https://www.facebook.com/JackieCinemas

https://twitter.com/JackieCinemas

https://plus.google.com/+JackieCinemas

https://www.youtube.com/JackieCinemas