Jackiecinemas

UNAKKENNA VENUM SOLLU MOVIE REVIEW

Tamil Cinema

unnamed (2)

 

உனக்கென்ன வேணும் சொல்லு….

பேய் ஜூரம் தமிழ் சினிமாவை ஆட்டிப்படைக்கின்றது… வரிசையாக பேய்படங்களாக வந்து திரையரங்கின்  டிடிஎஸ்  ஸ்பீக்கர்களை அதிர வைத்துக்கொண்டுள்ளன… அந்த வரிசையில்  இரண்டு வாரத்துக்கு முன் ஸ்டாராபெரி…

கடந்த வாரம் மாயா..

இந்த வாரம்  உனக்கென்ன வேணும் சொல்லு… இந்த திரைப்படத்தை ஸ்ரீநாத் ராமலிங்கம் இயக்கியுள்ளார்… இவர் குறுப்படங்களைஇயக்கியதோடு  சூர்யாவில் மாஸ் திரைப்டத்தில்  பேய்  சூர்யாவுக்கு ஈழத்தமிழர் உடல் மொழியை கற்றுக்கொடுத்தவர் இவர்தான்..

இந்த திரைப்படத்தின் கதை என்னவென்றால்…

தன் வாழ்வின் சிதைவுக்கு காரணமாக இருந்த சுயநலமிக்க   பெற்றோர்களை பழிவாங்க ஆவியாக அலையும் ஒரு குழந்தையின் கதையே.. உனக்கு என்ன வேணும் சொல்லு திரைப்படத்தின் ஒன்லைன்..

தீபக்பரமேஷ் மற்றும் ஜாக்குலின் மிக சிறப்பாக  நடித்துள்ளார்கள்…. அதே போல அவர்கள் இரண்டு  பேருக்கும் நடக்கும் மோதலும்  காதலும்  மிக முக்கியமாக அந்த ரொமான்ஸ் பாடலின் கெமிஸ்ட்ரி… நன்றாக உள்ளது..

இயலாமையின் காரணமாக ஜாக்குலின் வெடித்து  கத்துவது சிறப்பு…

மைம் கோபி  பேய்  ஓட்டுபவராக வந்து தனது இயல்பான நடிப்பால் மனதை கவர்கின்றார்..

அதே போல அந்த காபிடே  பாடல் நன்றாக இருந்தது.. ஆனால்திரையில் அந்த  படத்தை ரிலிசின் போது கட் செய்து விட்டார்கள்..

பின்பகுதியில் விவரித்த கதையை சற்றே கொஞ்சம் பட்டி டிங்கரிங் பார்த்து  முதல் பகுதியில்  கொஞ்சம் ரிவில் செய்து இருந்தால்  இன்னும் நன்றாக இருந்து இருக்கும் முதல் பாதியில் வெறுமனே நிழல்களும் சவுண்ட் எபெக்ட்டுமாக செல்வது போர் அடிப்பது போல  இருக்கின்றது.. ஒருவேளை  தொடர்நது பேய்  படங்களை பார்ப்பதால் கூட  அப்படி இருக்கலாம்.

இருப்பினும் லிவிங்டூகெதர்  கப்பிள்ஸ், அவர்களுடைய சுயநலம், ஹிப்னோ தெரபி என்று முதல் படத்தில் நிறைய விஷயங்களை  தொட்டு சென்றதற்கு இயக்குனர் ஸ்ரீநாத்துக்கு பாராட்டுக்கள்..

இசையமைப்பாளர் சிவசரவணன் இசையில்இரண்டு பாடல்கள் ரசிக்கும் ரகம்…

நிறைய லாஜிக் ஓட்டைகள் படத்தில் இருக்கின்றன.. குறிப்பாக வெளிநாடு போய் தாயகம் திரும்பும் ஒருவன் தன் மனைவியிடம் குழந்தை எங்கே என்று கேட்டதும்.. குழந்தை செத்து பொறந்தது என்று சொன்னதும் அப்படியே நம்பி அடுத்த வேலையை பார்க்க போய்விடுகிறான்  என்பது நம்பும் படி இல்லை.. ஆனால்‘ அந்த கிளைமாக்ஸ் அருமை…

பேய் பட விரும்பிகள்  டைம்பாஸ் முவியாக இந்த  திரைப்படத்தை பார்க்கலாம்..

வீடியோ விமர்சனம்.

 

 

Related posts

𝑲𝑨𝑳𝑨𝑴 𝑺𝑨𝑳𝑨𝑨𝑴 – 𝑽𝑰𝑹𝑻𝑼𝑨𝑳 𝑻𝑹𝑰𝑩𝑼𝑻𝑬 𝑻𝑶 𝑻𝑯𝑬 𝑷𝑬𝑶𝑷𝑳𝑬’𝑺 𝑷𝑹𝑬𝑺𝑰𝑫𝑬𝑵𝑻 𝑶𝑵 𝑯𝑰𝑺 5𝑻𝑯 𝑹𝑬𝑴𝑬𝑴𝑩𝑹𝑨𝑵𝑪𝑬 𝑫𝑨𝒀 𝑭𝑹𝑶𝑴 7.00𝑷𝑴 𝑶𝑵𝑾𝑨𝑹𝑫𝑺

admin

കൊലമാസ്സ് – Kammara Sambhavam Malayalam Movie Review

admin

ஹைதராபாத் கிக் உடன் இணைந்து அமேசான் ப்ரைம் ம்யூசிக் தெலுங்கு இசை ரசிகர்களுக்காக புதிய வகை தெலுங்கு பாப் பாடல்களை அறிமுகப்படுத்துகிறது

admin

ஹைடெக் கார் திருடும் நட்டி – ருஹி சிங் போங்கு

admin

ஹீரோவானார் ‘உச்சத்துல சிவா’ ஆண்ட்டி ஹீரோ

admin

ஹீரோயின் அம்மாவுக்கு ரூட் விடும் ரவிமரியா- ’பகிரி’ படத்தில் ரகளை

admin

ஹிரோ சினிமாஸ் கதிர் நடிக்கும் ஒன்பதிலிருந்து பத்துவரை (9 டு 10

admin

ஹிப்ஹாப் தமிழாவின் நான் ஒரு ஏலியன்

admin

ஹிப்ஹாப் ஆதியின் இசையில் “கோமாளி”

admin

ஹிப்பி பட நாயகி டிகங்கான சூர்யவன்ஷிக்கு 2018 ம் ஆண்டிற்கான தாதாசாகெப் பால்கே விருது

admin

ஹிந்தியில் காஞ்சனா 1 படம் Laaxmi Bomb என்ற பெயரில் ரீமேக்

admin

ஹிந்தியிலும் கலக்கும் இருமுகன்

admin

Leave a Comment