Yatchan ( 2015) Movie Review

34993-a

 

யட்சன்…

எழுத்தாளர்கள் சுபா கைவண்ணத்தில் ஆனந்த விகடனில்   யட்சன் தொடர்கதை திரைக்கதை மூலம் பூசிக்கொண்டு வெண்திரையை இன்று முத்தமிட்டள்ளது.. அதே நாளில் யட்சன் நாவலை புத்தகமாகவும் வெளியீடுகின்றார்கள் என்பது குறிப்பிடதக்கது..

அஜித் நடித்த ஆரம்பம் படத்திற்கு பிறகு விஷ்ணுவர்தன் இயக்கி வெளிவந்து இருக்கும் திரைப்படம் யட்சன்.

முதன் முறையாக ஆர்யாவும்  விஷ்ணுவர்தன் தம்பி  கிருஷ்ணாவும் இணைந்து நடித்துள்ளார்கள்…

யூடிவி பேனரில் வரும் கடைசி படம் என்ற பேச்சும் கோடம்பாக்க டீக்கடைகளில் சுற்றி வருகின்றது..

========

யட்சன் திரைப்படத்தின் கதை என்ன?

சினிமாவில் நடிக்க  சென்னை வரும் கிருஷ்ணா… கொலை செய்து விட்டு வெளிநாட்டுக்கு தப்பி செல்ல   துடிக்கும் ஆர்யா… ஒரு கட்டத்தில் ஆர்யா நடிகனாக  கிருஷ்ணா கொலைகாரனாக  மாறி விடுகின்றார்.. ஏன் எதற்கு எப்படி என்பதை வெண்திரையில் காணுங்கள்..

=====

வெளிநாடுகளில்   சக்கை போடு  போட்ட நாவலை திரைப்படமாக எடுத்தாலும் வசூலை வாரிக்குவிக்கும்… ஆனால் தமிழில் ஒரு நாவலை திரைப்படமாக எடுத்து வெற்றிபெற வைத்தோம் என்று பெரிய லிஸ்ட் எதுவும் இல்லை..

கிருஷ்ணா மற்றும் சுவாதி லவ்போர்ஷன் ஓகே.,.. ஆனால் முழு படத்தையும் ரசிக்க அது மட்டுமே போதுமானதாக இருக்காது  அல்லவா??

ஆர்யா நடிப்பு விழலுக்க இரைத்த நீர்தான்,.. தீபா சன்னதி…காஸ்ட்யூம்கள் அருமை. சில இடங்களில் நடிக்கவும் செய்கிறார்.

நிறைய இடங்களில் திரைக்கதை சொதப்புகிறது… அதை விட கதாபாத்திரங்களின் பிரச்சனையை நம் பிரச்சனையாக யோசிக்க வைக்க மேக்கிங்கில் தவறிவிட்டார்கள் என்றே சொல்ல வேண்டும்…

மற்றவர் மனதில் இருக்கும்  மற்றும் எதிர்காலத்தை அறியும் கேரக்டரை வைத்துக்கொண்டு இன்னும்  நிறைய  யோசித்து இருக்கலாம்..

யுவனின்  இசையில் இரண்டு பாடல்கள் கேட்கலாம்… ஓம்பிரகாஷ்   ஒளிப்பதிவு படத்துக்கு கூடுதல் பலம்…

யட்சன்…டைம்பாஸ் முவிதான்… வேறு எதையும் குறிப்பிட்டு சொல்ல முடியவில்லை..

இது எனது அபிப்பராயம் திரைப்படம் ஒரு சிலருக்கு பிடிக்க வாய்புள்ளது.

 

https://youtu.be/yCrsVmOrmrw