Bale Bale Magadivoy (2015) telugu movie review

bale-bale-magadivoy-audio-release-wallpapers-(1)

 

பலே பலே மகாதீவோய்…

நான் ஈ  நானி காட்டில் மழைபெய்துக்கொண்டு இருக்கிறது… பின்னே அவரின் எவ்டே சுப்ரமணியும் பெரிய அளவில் பெயரை பெற்றுக்கொடுத்த திரைப்படம்  என்றால்  பலே பலே மகாதேவோய் திரைப்படம் கலெக்ஷனில் பின்னி பெடல்எடுக்கிறது…

சைக்கலாஜிக்கல் ரொமான்ஸ் காமெடி ஜானரில் இந்த திரைப்படத்தை மாருதி தசரி  இயக்கி இருக்கின்றார்..

=

பலே பலே மகாதேவோய் திரைப்படத்தின் கதை  என்ன?

நானிக்கு  எளிதில் மறந்து விடும் வியாதி.. அதாவது ஒரு வேலையை செய்துக்கொண்டு இருக்கும் போதே அடுத்து யாராவது பேச்சுக்கொடுத்தால்   செய்த வேலையை சுத்தமாக மறந்து விட்டு  பேச்சுக்கொடுத்தவரோடு சினிமாவுக்கு கிளம்பி செல்லும் ரகம்.. படத்தின் இடைவேளையின் போது செய்துக்கொண்டு இருந்த வேலை நியாபகத்துக்கு வந்தால்…. பாதி படத்திலேயே பிடறியில் கால் பதிக்க எழுந்து  ஓடிவரும் ரகம்..

இவருக்கு காதல்… நியாபக மறதியால்  நிறைய பிரச்சனைகள் காதல் கை கூடியதா இல்லையா..?? வெண்திரையில் பாருங்கள்.

Bale-Bale-Magadivoy-Movie-New-Poster

=======

பிரேமுக்கு பிரேம்  நானி தன் மேனாரிசங்களால் ரசிக்க வைக்கிறார்…அதே போல  லாவன்யா திருப்பதியும் அசத்தினாலும் ஏதோ ஒரு குறை இருப்பதை மறுப்பதற்கில்லை..

முக்கியமாக எந்தரோ மகானு பாவலு பாடலில் அந்த பெண்ணின் காஸ்ட்யூம் மற்றும் அந்த பாடலின் இசையும் படம் முடிந்தும் மனதில்  ரீங்காரமிடுகிறது..

காதலிக்கு விஷயம் தெரிந்து  அவள் நானியை புறக்கணித்து விட, நேராக  வீட்டுக்கு வந்து கோவத்தில் அழுதுக்கொண்டே சாப்பிட்டு பேசும் இரண்டு நிமிட சீன்  கட் ஷாட் இல்லாத லென்தி ஷாட்… சிறப்பான நடிப்புக்கு எடுத்துக்காட்டாக சொல்லாம்.

எல்லா படத்திலும் வில்லனாக வந்து மிரட்டும் முரளி ஷர்மா இந்த படத்தில் குணச்சித்திர வேடத்தில் அசத்துகிறார்.

===

படத்தின் டிரைலர்,

 

https://youtu.be/fX4C4GieQoQ

====

படக்குழுவினர் விபரம்.

 

Directed by Maruthi Dasari
Produced by Bunny Vas
Written by Maruthi Dasari
Screenplay by Maruthi Dasari
Story by Maruthi Dasari
Starring Nani
Lavanya Tripathi
Music by Gopi Sunder
Cinematography Nizar Shafi
Edited by Uddhav SB
Production
company
Geetha Arts
UV Creations
Release dates
04 September 2015
Running time
145 minutes
Country India
Language Telugu

==

பைனல் கிக்.

கண்டிப்பாக பார்க்க  ‘ வேண்டிய திரைப்படம்.. நியாகமறதி கஜினி திரைப்படம் போல சீரியஸ் கிரைம் திரில்லராக இல்லாமல் நகைச்சுவையில் இந்த  திரைப்படம் கட்டு போடுவதோடு  நெகிழ்ச்சிபடுத்துகிறது. என்பதால் தெலுங்கு வாலாக்கள் கொண்டாடுகின்றார்கள்..

=====

படத்தோட ரேட்டிங்

பத்துக்கு ஏழு.

=====

வீடியோ  விமர்சனம்.

 

https://youtu.be/T8RuhGcwCt4

 

======