Bangalore 2 Mini Theatres in 2400 Sq. ft at Galaxy Paradise | Bommanahalli | hongasandra

2014-05-25

2400 சதுர அடி நிலத்தில் என்ன கட்டிடம் கட்டலாம்??

தொட்டுக்கோ துடைச்சிக்கோன்னு ஒரு அடுக்குமாடி குடியிருப்பு கட்டலாம்… ஆனால் பெங்ளூருவில் உள்ள பொம்மன ஹள்ளியில் இரண்டு மினிதியேட்டர் பார்க்கிங்கோடு கட்டி இருக்கின்றார்…

தமிழ் சினிமாவின் எதிர்காலம் இது போன்ற மினி தியேட்டர்கள் மூலம் வளம் பெறும் என்பது என் எண்ணம்…
இரண்டு ஒன்றரை டன் ஏசி, ஆறு பேன், எட்டு டிடிஎஸ் ஸ்பிக்கர்… ஒரு யூஎப்ஓ புரஜெக்ஷன், இரண்டு தியேட்டருக்கும் சேர்த்து ஐந்தே ஐந்து ஊழியர்கள் மட்டுமே…. பராமரிப்பு மிக மிக குறைவு…

தமிழ் தயாரிப்பாளர்கள்… ஊருக்கு நான்கு தியேட்டர் கட்டி விட்டு அவர்கள் படத்தையும் ஓட்டிக்கொண்டு சிறு முதலீட்டு திரைப்படங்களுக்கு வாய்ப்புகள் அளிக்கலாம்…

500 சீட் திரையரங்கிற்கு நான்கு ரசிகர்கள் மற்றும் இரண்டு ரசிகர்கள் வந்தால் காட்சிகளை ரத்து செய்ய வேண்டியதில்லை..
நான் கேலக்சி பேரடைஸ் தியேட்டரை ஷூட் செய்த போது காலை காட்சி பிரேமம் படத்துக்கு இரண்டு பேர் மட்டுமே படம் பார்க்க வந்தனர்.. அவர்களுக்காக படம் ஓடியது என்பது குறிப்பிடதக்கது..

அது மட்டுமல்ல.. வெள்ளி சனி ஞாயிறு மூன்று தினங்களும், கூட்டம் அதிகம் வருவதால் மூன்று நாட்களுக்கு மட்டும் ஐந்து காட்சிகள்திரையிடுவதாக தெரிவிக்கின்றார்.. தியேட்டர் ஓனர் வெங்கடேஷ் பாபு…

கேலக்சி தியேட்டர் எதிரில் ஒரு பெரிய தியேட்டர் வைத்து இருந்தார்… கலெக்ஷ்ன் குறைவாகவும் பராமரிப்பு அதிகமாக இருந்த காரணத்தாலும் அந்த தியேட்டரை கொடவுனாக மாற்றி விட்டு இந்த மினி தியேட்டர் இரண்டை மட்டும் வைத்து இருப்பதாக இந்த தொழிலில் 30 வருடங்களாக இருந்து வரும் வெங்கடேஷ்..

எதிர்கால தமிழ் சினிமா தழைக்க இது போன்ற தியேட்டர்கள் பல்கி பெருக வேண்டும் என்பது என் கருத்து…

வழக்கம் போல வீடியோ பிடித்து இருந்தார் ஷேர் செய்யுங்கள்… ஜாக்கி சினிமாஸ் யூ டியூப் தளத்தை சப்ஸ் கிரைப் செய்யுங்கள்….
=============
A nice theatre experience with all amenities in a Mini Theatre at Bangalore Bommanahalli with build up area of 2400 sq.ft only also with parking facilities.

Address: 12th Cross, Begur Road, MICO Layout, Bommanahalli Cross, Bengaluru, Karnataka 560068
Phone:080501 50676

Music courtesy : you tube free music track Sandbox
Voice over artist: Sureka Hemachandran

Cinemotography/Editing/Script/Direction: Jackie Sekar for Jackie cinemas

பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.


‪#‎bangalore‬
‪#‎bangalorminiteater‬
‪#‎bommamahalli‬
‪#‎begur‬

Related posts