Chandi Veeran-2015 Movie Review | சண்டி வீரன் திரை விமர்சனம்.

maxresdefault

களவானி, வாகை சூடவா திரைப்படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குனர் சற்குனம் இயக்கத்தில் வெளி வந்து இருக்கும் திரைப்படம் சண்டி வீரன்… அதர்வா நாயகனாகவும். கயல் ஆனந்தி நாயகியாக நடித்து வெளி வந்து இருக்கும் இப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்தது… காரணம் இந்த படத்தினை தயாரித்து இருப்பவர்.. இயக்குனர் பாலா..

நையாண்டியில் சருக்கிய சற்குனம் இழந்த இடத்தை போராடி சண்டி வீரன் திரைப்படத்தின் மூலம் வெற்றிக்கோட்டை தொட்டாரா இல்லையா என்பதை இப்போது பார்ப்போம்..

சண்டி வீரன் படத்தின் கதை என்ன??

அதர்வாவின் அப்பா போஸ்… இரண்டு கிராமத்து தண்ணீர் பிரச்சனைக்கா உயிர் துறக்கின்றார்… அதர்வா வளர்ந்து சிங்கபூர் சென்று ஓவர் ஸ்டேயில் புட்டத்தில் அடி வாங்கி சொந்த ஊர் திரும்புகிறார்.. பள்ளி படிக்கும் போதே காதலித்த ஆனந்தியை காதலிக்கின்றார்…..அவர் அப்பா லாலுக்கு காதல் தெரிந்து விட , திரும்பவும் தண்ணீர் பிரச்சனைக்கு இரண்டு கிராமங்களும் அடித்துக்கொள்ள.. அதர்வா தன் சொந்த வாழ்க்கை பிரச்சனையும் கிராமத்து பிரச்சனையையும் எப்படி தீர்க்கிறார் என்பதே சண்டி வீரன் திரைப்படத்தின் கதை..
=========
அதர்வா மிளிர்கிறார்… பரதேசிக்கு அப்புறம் பெரிய ஹீட் இன்னும் கொடுக்கவில்லை… முதல் 30நிமிடங்கள் அதர்வா ஆனந்தி காதலை நாம் உணர முடியாமல் ஏப்பை சோப்பையாக செல்கிறது…
புட்டத்துல அடிவாங்கினவங்களுக்கு புள்ள பொறக்காதாமே என்று சொல்லும் இடத்தில் நாம் அந்த காதலர்களோடு பயணிக்கும் போது படம் இன்டர்வெல்.. அதன் பின்.. பரபரப்பான கிராமத்து தண்ணீர் பிரச்சனை…

ஹீரோ ஏதாவது டுவிஸ்ட் செய்வார் என்று பார்த்தால்…. நமுத்து போன பட்டாசு எபெக்ட்
பிஜி முத்தையாவின் ஒளிப்பதிவு… படத்துக்கு பெரிய பலம்.
அருண கிரி இசையில் இரண்டு பாடல்கள் கேட்கும் ரகம்.

எதோ ஒரு ஸ்கிரிப்ட் செய்து வேறொன்றை ஸ்பாட்டில் போய் எடுத்தது போன்று பல காட்சிகள் இருப்பதை மறுப்பதற்கில்லை.

ஆனால் கவர்ச்சியை நம்பாமல் தண்ணீர் பிரச்சனையை கையில் எடுத்துக்கொண்டு களம் இறங்கிய சற்குனம் குழுவினரை நாம் பாராட்டினாலும்… சுவாரஸ்யமான கதை ச சொல்லலில் நிறைய கோட்டை விட்டு விட்டார் என்பதை சொல்லியே ஆக வேண்டும்.

விலக்கி வைக்கவும் முடியாமல் தூக்கி வச்சி கொஞ்சவும் முடியாமல் இருக்கும் திரைப்படம் சண்டி வீரன்… என்னை பொருத்தவரை டைம் பாஸ் மூவி… தண்ணீர் என்ற வாழ்வாதார பிரச்சனையை கையில் எடுத்து அதனை இன்னும் விவேகத்தோடு கொடுத்து இருக்கலாம்… விழலுக்கு இரைத்த நீராக போய் விட்டது.

படத்துக்கான ரேட்டிங்..
பத்துக்கு ஆறு.

சண்டி வீரன் படத்தின் வீடியோ விமர்சனம்.