Jackiecinemas

Sakalakala Vallavan Appatakkar-2015 Movie Review |சகலகலாவல்லவன் அப்பாடக்கர் திரை விமர்சனம்

Tamil Cinema

Jayam-Ravi-Sakalakala-Vallavan-Movie-Posters-2

ரோமியோ ஜூலியட் இப்போதுதான் வந்தது போல இருக்கு…. அதற்குள் ஜெயம் ரவியின் அடுத்த படம் அப்பாடக்கர். கமர்ஷியல் இயக்குனர் சுராஜ் இந்த திரைப்படத்தை இயக்கி இருக்கின்றார். அஞ்சலி, திரிஷா,சூரி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

===
சகலகலாவல்லவன் அப்பாடக்கர் படத்தின் கதை என்ன?,
கதை தேடினாலும் கிடைக்காது… இது போல தமிழ் சினிமாவில் இருபதாயிரம் கதைகள் பார்த்து இருப்போம்.

=======
=
தெலுங்கு படம் பார்க்கும் வழக்கம் உண்டா.. மாஸ் மகாராஜா என்று கொண்டாடப்படும்… ரவிதேஜாவின் 100க்கு 99 படங்கள் இந்த படம் போலத்தான் இருக்கும்..

கவர்ச்சி , ஆக்ஷ்ன்.. படம் நெடுக பிரம்மானந்தம் போல ஒரு காமெடி கேரக்டரின் சிரிப்பு அட்டகாசம்… அங்க அங்க பேமிலி செண்டிமென்ட் தூவினால்…. அதுதான் அக்மார்க் தெலுங்கு சினிமா…

இதே பார்மெட்டி 800 படம்எடுத்தாலும் தெலுங்கு ரசிகர்கள் கொண்டாடுவார்கள்..அவர்கள் நாயகி என்றால் கவர்ச்சியை விரும்புவார்கள்…. அதனால்தான்.. இங்கே இழுத்து போர்த்தி நடிக்கும் நடிகைகள் அங்கே தாராளம் காட்டுவார்கள்..அதே போல பேமான்டும்.. இழுத்து அடிக்கும் பேச்சுக்கே இடம்இல்லை… பணத்தால் அடித்துதான் பேசுவார்கள்..

அதனால்தான் நடிகைகள் அங்கே தாராளம் காட்டுவார்கள்…. அதே போல இரண்டு செட் சாங்… மற்றும் இரண்டு பாடல் வெளி நாட்டில் ஷுட் செய்வார்கள்.. அதில் ஒரு பாடல் தீவும் கடலுமான இடம்.. சர்வ நிச்சயமாக வெள்ளை உடையில் நாயகியை நனைய விடுவார்கள்.. இந்த பேக்கேஜில் படம் எடுக்கும் இயக்குனர்கள் தமிழில் வெகு குறைவு.. சுந்தர் சி.. ரவிக்குமார்.. சுராஜ் போன்றவர்கள் இந்த வகைதான்..
அப்படியான தெலுங்கு பார்முலாவில் வந்து இருக்கும் திரைப்படம்தான்… அப்பாடக்கர்…

ஜெயம் ரவியின் உடைகளே சொல்லி விட்டன.. முன்னைக்கு நிறைய தேறி இருக்கின்றார் உடம்பு மற்றும் குரல்களில்…
அஞ்சலி சற்றே ஊதி பெரிதாய் இருக்கின்றார்.. ஆனாலும் முதல் பாதியில் ரசிகர்களை சூடு ஏற்றுகின்றார்…அஞ்சலி ரசிகர்கள் தவறாமல் பார்த்து விடுங்கள்.. மிஸ் பண்ணாதிங்க அப்புறம் வருத்தபடுவிங்க..

திரிஷா.. இரண்டாம்பாதி முழுக்க வருகின்றார்.. இந்த படத்துக்கு அவர் கொஞ்சமும் செட் ஆகவில்லை. இடைவேளைக்கு பிறகான செட் சாங்கில் ஆட சொன்னால் ஜிம்மில் ஒர்க் அவுட் செய்வது போல ஆடுகின்றார்..

ரொம்ப நாளைக்கு அப்புறம் பூர்னாவை முதல் பாடலுக்கு கவர்ச்சி ஆட்டம் ஆட விட்டு இருக்கின்றார்கள்.

சூரி படம் நெடுக… இவர் ஆவர்தனம்தான்.. நிறைய இடங்களில் சிரிக்க வைக்கின்றார்… விவேக் இடைவேளைக்கு பிறகு வந்தாலும் டபுள் மீனிங்கில் ஊரில் கூத்து பார்க்கும் பிலிங்கை கொடுக்கின்றார்… உதாரணம் பைப்பு துரு புடிச்சி பல வருஷம் ஆச்சி..

படத்தின் பலம் யுகே செந்தில் குமார்.. கலர் புல்லாக பதிவு செய்து இருக்கின்றார்..

தமன் தெலுங்கில் செமையாக ஹீட் அடித்த பாடல்களை தமிழ் கூறும் நல் உலகத்துக்கு கொடுத்து இருக்கின்றார்.

=====
படத்தின் டிரைலர்.

=====
படக்குழுவினர் விபரம்.

Directed by Suraj
Produced by K. Muralidharan
V. Swaminathan
G. Venugopal
Written by Suraj
Starring Jayam Ravi
Trisha
Anjali
Music by S. Thaman
Cinematography U. K. Senthil Kumar
Edited by R.K Selva
Production
company
Lakshmi Movie Makers
Release dates
July 31, 2015
Country India
Language Tamil
===

பைனல் கிக்.

இந்த படம் மொக்க… இதெல்லாம் ஒரு படம் என்ற ரீதியில் விமர்சனங்கள் வருகின்றன.. வாரா வாரம் காக்கா மூட்டை போன்ற படங்களையே எதிர்பார்க்க முடியாது… இது போன்ற திரைப்படங்கள்தான் மூட இருக்கும் தியேட்டர்களை காப்பாற்றும் கமர்ஷியல் திரைப்படங்கள்… சகலகலாவல்லவன் அக்மார்க் கமர்ஷியல் திரைப்படம்… ஒரு டைம்பாஸ் திரைப்படம் அவ்வளவுதான்.. பிடிக்கவில்லை என்றால் புறக்கணிக்கலாம்.. ஆனால் பி அண்டு சி தியேட்டர்களில் கூட்டம் குவிகின்றது.
==

படத்தோட ரேட்டிங்
பத்துக்கு ஐந்து.
=======

படத்தின் வீடியோ விமர்சனம்.

Related posts

കൊലമാസ്സ് – Kammara Sambhavam Malayalam Movie Review

admin

ஹைதராபாத் கிக் உடன் இணைந்து அமேசான் ப்ரைம் ம்யூசிக் தெலுங்கு இசை ரசிகர்களுக்காக புதிய வகை தெலுங்கு பாப் பாடல்களை அறிமுகப்படுத்துகிறது

admin

ஹைடெக் கார் திருடும் நட்டி – ருஹி சிங் போங்கு

admin

ஹீரோவானார் ‘உச்சத்துல சிவா’ ஆண்ட்டி ஹீரோ

admin

ஹீரோயின் அம்மாவுக்கு ரூட் விடும் ரவிமரியா- ’பகிரி’ படத்தில் ரகளை

admin

ஹிரோ சினிமாஸ் கதிர் நடிக்கும் ஒன்பதிலிருந்து பத்துவரை (9 டு 10

admin

ஹிப்ஹாப் ஆதியின் இசையில் “கோமாளி”

admin

ஹிப்பி பட நாயகி டிகங்கான சூர்யவன்ஷிக்கு 2018 ம் ஆண்டிற்கான தாதாசாகெப் பால்கே விருது

admin

ஹிந்தியில் காஞ்சனா 1 படம் Laaxmi Bomb என்ற பெயரில் ரீமேக்

admin

ஹிந்தியிலும் கலக்கும் இருமுகன்

admin

ஹிந்திக்கு போகும் ராகவா லாரன்ஸ் காஞ்சனா 1 படத்தில் அக்‌ஷய் குமார் நடிக்கிறார்

admin

ஹிந்திக்கு போகும் “பியார் பிரேமா காதல்”

admin

Leave a Comment