Orange Mittai-2015 Movie Review – ஆரஞ்சு மிட்டாய் திரைவிமர்சனம்.

orange-mittai-movie-review

விஜய் சேதுபதியின் உழைப்பு பிரம்மிக்க வைக்கின்றது… சினிமாவில் என்னவாகப்போகின்றோம் என்று எந்த திட்டமிடலும் இல்லாமல் சினிமாவில் என்ட்ரியாகி… சினிமாவில் ஒரு சில திரைப்படங்களிலேயே முன்னனி நடிகராக வலம் வருவது சாதாரண விஷயம் இல்லை.. அதை விட… கமலை போல சினிமாவில் சம்பாதித்து சினிமாவிலே முதலீடு செய்வது போல விஜய் சேதுபதி தனது சொந்த பேனரில் தயாரித்து இருக்கும் திரைப்படம்தான் ஆரஞ்சு மிட்டாய்..

டீசரும் டிரைலரும் ஏகத்துக்கு எதிர்பார்க்கை எகிற விட்டு இருந்தன என்றால் அது மிகையில்லை.. முக்கியமாக விஜய் சேதுபதி வயதான கதாபாத்திரத்தில் நடித்ததோடு ஒரு சின்ன சிக்வென்சுக்கு போடும் ஆட்டத்திற்காக .. அந்த படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆவல் அதிகமானது நிஜம்…
=====
ஆரஞ்சு மிட்டாய் படத்தின் கதை என்ன?,

108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கும்…. வயதான அதரவற்ற நெஞ்சுவலி பேஷன்ட் கைலாசம் என்கின்ற விஜய்சேதுபதிக்கும் இடையே நடக்கும் மோதலும் அதன் பின்னான நேசமும்தான் படத்தின் ஒன்லைன்..
==

ஆரஞ்சு மிட்டாய் திரைப்படத்தில் விஜய் சேதுபதி வயதான கேரக்டரில் செட் ஆகவேயில்லை…
வேட்டியை தூக்கி மடித்து கட்டிக்கொண்டு நடக்கும் போதே அந்த வயதான கேரக்டர் செத்து விடுகின்றது.. அதன் மேல் பாவம் வர வேண்டும்..
அந்த ஈகோ கேரக்டரை நம் அப்பாவோடு பொருத்தி பார்க்க வேண்டும்.. அப்படி பொருத்தி பார்த்து இருந்தால் கைலாசம் கேரக்டர் எங்கேயோ போய் இருக்கும்….ஆனால் விஜய் சேதுபதிதான் கைலாசம் என்று படம் முழுக்க தெரிவதுதான் படத்தின் பெரிய மைனஸ்…

ரமேஷ் திலக் பாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்து .. வயதான கைலாசம் கேரக்டரில் விஎஸ் ராகவன் போன்ற வயதான கேரக்டரை நடிக்க வைத்து இருந்தால் இந்த ஆரஞ்சு மிட்டாய் திரைப்படத்தை காக்கா முட்டை படம் போல கொண்டாடி இருப்பார்கள்…

அப்படி பார்த்தால் மணிரத்னம் வேலுநாயக்கருக்கு வயதான கேரக்டருக்கு கமலை நடிக்க ‘ வைத்து இருக்கின்றாரே என்று கேள்வி எழுப்பலாம்… வேலுநாயக்கரை பார்த்தால் வயதானவர் என்று உடல் மொழியில் இருந்து உடம்பில் இருந்து அவர் வேறுபடுத்தி காட்டி இருப்பார்… ஆனால் இதில் அப்படி இல்லை என்பதாலேயே ‘ பிரச்சனை.

=====
படத்தின் டிரைலர்.

========
படக்குழுவினர் விபரம்.

Directed by Biju Viswanath
Produced by Vijay Sethupathi
B. Ganesh
Written by Biju Viswanath
Vijay Sethupathi
Starring Vijay Sethupathi
Ramesh Thilak
Aashritha
Music by Justin Prabhakaran
Cinematography Biju Viswanath
Edited by Biju Viswanath
Production
company
Vijay Sethupathi Productions
Distributed by Common Man Productions
Release dates
July 31, 2015
Country India
Language Tamil

=========

பைனல் கிக்.

இருந்தாலும்.. கவர்ச்சி ,குத்தாட்டம், அரைத்த மாவையே அரைக்கும் சில தமிழ்சினிமாக்களுக்கு மத்தியில் ஆரஞ்சு மிட்டாய் போன்ற புதிய முயற்சிகளை கண்டிப்பாக நாம் வரவேற்க வேண்டும் ….

அந்த ‘வகையில் பார்த்தால் பிஜு விஸ்நாத்தின் உழைப்புக்கு ஒரு சல்யூட்.. அதே போல ரமேஷ் திலக் மற்றும் அவரது நண்பராக வரும் பாலாவும் பின்னி இருக்கின்றார்கள்…. ரமேஷ் திலக்கின் காதல் கியூட் கவிதை.

ஹார்ட் அட்டாக் போல இல்லாமல் வேறு ஏதாவது உடல் உபாதையை பயண்படுத்தி ரசிகனிடம் சிம்பத்தி கிரியேட் செய்து இருக்கலாம்…

ஆரஞ்சு மிட்டாய் பார்த்து விட்டு வெளியே வரும் போது ஈகோ மோதலில் சண்டை போட்டுக்கொள்ளும் நம்மை பெற்ற அப்பனை கண்டிப்பாக நினைவுபடுத்தும் என்பது உண்மை.

கவித்துவமான சிறுவயது நியாபகங்களை நியாபகப்டுத்தும் டைட்டில் ஆனாலும் களம் வேறு…

நிச்சயம் ஆரஞ்சு மிட்டாய் உலக சினிமா ரசிகர்களை கவரும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை… இருந்தாலும் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டு இருக்கலாம் என்பதே நம் கருத்து,..

=======

வீடியோ விமர்சனம்.