Jackiecinemas

Maari (2015) Movie Review |மாரி திரைவிமர்சனம்

Tamil Cinema

Maari_poster

மாரி…..
புதுப்பேட்டை படத்திற்கு பிறகு ரவுடி கேரக்டர் மாரி படத்தில் தனுஷ் செய்து இருக்கின்றார்… அவர் கேரியரில் மறக்க முடியாத படம் புதுப்பேட்டை என்றால் அது மிகையில்லை… தனுஷ் என்ற நடிகனை வெளிக்கொண்டு வந்த படம்… ஆனால் மாரி அந்த அளவுக்கு ராவான ரவுடி சப்ஜெக்ட் இல்லை.. காமெடி என்டர்டெய்னர் என்று முன்பே சொல்லிவிட்டார்கள்…
====
மாரி படத்தின் கதை என்ன?

சாதாரணமாக புறா பந்தயத்தில் கலந்துக்கொண்ட மாரி எப்படி பின்னாளில் ரவுடியாக பரிணமிளிக்கின்றான் என்பதும் அவன் வாழ்வில் காதேலோடு குறிக்கிடும் பெண்ணை அவன் காதலித்தானா? அல்லது அந்த காதலுக்காக இரண்டு மணி நேரத்தில் ரவுடி தொழிலை தூக்கி கடாசி விட்டு உத்தமனாக மாறினானா? இல்லையா என்பதே மாரி படத்தின் கதை.
=
பாலாஜி மோகனின் முந்தைய இரண்டு படங்கள் மென்மையான காதல் படங்கள்… அப்படியான இயக்குனர் ரவுடிசப்ஜெக்ட் எப்படி எடுப்பார் ???என்ற ஆர்வம் இண்டஸ்ட்ரி முழுக்க எல்லோருக்கும் இருந்தது… ஆனால் நன்றாகவே பக்கா கமர்ஷியல் படத்தை எடுத்து இருக்கின்றார். ஆனால் கதை சுவாரஸ்யமில்லாத வழக்கமான கதை. ஆனால் இதில் புதுமை என்வென்றால் புறா ரேசை பின்புலமாக வைத்துக்கொண்டு களம் இறங்கி இருக்கின்றார்..

பிரேமுக்கு பிரேம் ரஜினி சாயல் தெரிகின்றது… படத்தின் கதையே பாட்ஷா படத்தை நினைவு படுத்தி தொலைக்கின்றது. ஆனால் ரஜினி போல ஒரு கமர்ஷியல் ரூட்டுக்கு வர வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கின்றார்.

தனுஷ் ஒரே ஷாட்டில் நடனம் ஆடுகின்றார்..

ரோபோ சங்கர் பின்னி இருக்கின்றார்… படத்தின் மிகப்பெரிய பலம். வீட்டின் கதவை திறந்துக்கொண்டு வெளியே ஆடிக்கொண்டு வருவதில் இருந்து அதே போல காரின் மேல் ஏறி ஆடிக்கொண்டு வரும் காட்சிகள் சிங்கிள் டேக்..
காஜல் அகர்வால் வீணடிக்கப்பட்டு இருக்கின்றார்…ஒரு பாடலில் தொப்புள் தெரிய ஆப் சாரியில் நடனம் ஆடுகின்றார்…. ரவுடி ஏரியாவில் அப்படி எல்லாம் நிஜ வாழ்வில் ஆடமுடியாது. அவ்வளவு ஏன் தெருவில் நடக்க கூட முடியாது.
விஜய் யேசுதாஸ் முதல் படத்தில் நன்றாக நடித்து இருந்தாலும் இன்னும் விரைப்பு இருக்க வேண்டும்… கொஞ்சம் அமுல் பேபி தனமாக இருக்கின்றார்….. அவர்தான்..
கட்டை கவிதா எனக்கு நீதான் பணம் கட்டினியா ? என்று பேசும் காட்சியும்… டேபிள் மேல் பணத்தை எடுத்து வைத்து விட்டு பேசாமல் டீ குடித்துகொண்டு இருக்கும் காட்சியும் நான் ரசித்த காட்சிகள்.
ரவுடி படம் என்றால் சண்டை காட்சிகள் அதிகம் இருக்க வேண்டும் அல்லவா?? இந்த படத்தில்இன்டர்வெல்லுக்கு பிறகு இரண்டு சண்டைகாட்சிகள் அவ்வளவே.. அதுவும் முதல் பாதியில் மாரி யார் என்று பில்டப்பிலேயே கதையை ஓட்டிவிட்டார்… அதுவும் ஒரு திறமைதான்…
படத்தின் மைனல்…
காஜல் தனுஷ் பார்னர் போர்ஷன் சலிப்பை ஏற்ப்படுத்தியது என்பதை விட அந்த சீன் பாட்ஷா படத்தை பார்பபது போல இருந்தது..
அதே போல விஜய் யேசதாசுக்கு பணம் தேவை என்றால்??ஏன் அவருக்கு தேவை அதுவும் இந்த சின்ன வயதில்…???? என்று ஒரு காட்சியிலாவது விலக்கி இருக்க வேண்டும்… அதுதான் மெயின் கேரக்டர்…
ஓம் பிரகாஷ் கேமரா ஓகே.. லோ பட்ஜெட் நிறைய இடங்களில் தெரிகின்றது.. அனிருத் வழக்கம் போல…ஒரு பாடல் கேட்கும் படி இருக்கிறது.
==
படத்தின் டிரைலர்.

=
படக்குழுவினர் விபரம்.

Directed by Balaji Mohan
Produced by Listin Stephen
R. Sarathkumar
Raadhika Sarathkumar
Written by Balaji Mohan
Starring Dhanush
Kajal Aggarwal
Vijay Yesudas
Robo Shankar
Anirudh Ravichander
Cinematography Om Prakash
Edited by Prasana GK
Production
company
Wunderbar Films
Magic Frames
Distributed by Magic Frames
Escape Artists Motion Pictures
Release dates
17 July 2015
Running time
131 minutes
Country India
Language Tamil
Budget ₹25 crore
==
பைனல் கிக்..
மாரி படம் எப்படி?
அரைத்த மாவையே அரைத்த கதை… புறா ரேசில் ஏதாவது புதுமை இருக்கும் என்று பார்த்தால் எதுவும் இல்லை.. பத்தோடு பதினொன்றாக இருக்கின்றது… மொக்கை படம் என்று சொல்ல முடியாது… ஆனால் கொஞ்சம் முயற்சித்து இருந்தால் நல்ல படம் என்று பெயர் பெற்று இருக்கலாம்.. பி ஆண்டு சி ரசிகர்களை திருப்தி படுத்தும் அத்தனையும் இந்த படத்தில் இருக்கின்றது.. அவர்கள் நிச்சயம் கொண்டாடுவார்கள்.. சிகரேட் படத்தில் நிறைய காட்சிகளில் வருகின்றது… அதனால் தனுஷுக்கு எதிர்ப்பும் வலுக்கின்றது…ரஜினி இப்படி சிகரேட்பிடித்துதான் தமிழ் நாட்டின் சூப்பர் ஸ்டாராக மாறினார் என்பது வரலாறு..
வீட்டில் ரொம்ப போர் அடித்தால் தனுஷுக்காக ஒரு முறை பார்க்கலாம்…

நமது வீடியோ விமர்சனம்.

Related posts

𝑲𝑨𝑳𝑨𝑴 𝑺𝑨𝑳𝑨𝑨𝑴 – 𝑽𝑰𝑹𝑻𝑼𝑨𝑳 𝑻𝑹𝑰𝑩𝑼𝑻𝑬 𝑻𝑶 𝑻𝑯𝑬 𝑷𝑬𝑶𝑷𝑳𝑬’𝑺 𝑷𝑹𝑬𝑺𝑰𝑫𝑬𝑵𝑻 𝑶𝑵 𝑯𝑰𝑺 5𝑻𝑯 𝑹𝑬𝑴𝑬𝑴𝑩𝑹𝑨𝑵𝑪𝑬 𝑫𝑨𝒀 𝑭𝑹𝑶𝑴 7.00𝑷𝑴 𝑶𝑵𝑾𝑨𝑹𝑫𝑺

admin

കൊലമാസ്സ് – Kammara Sambhavam Malayalam Movie Review

admin

ஹைதராபாத் கிக் உடன் இணைந்து அமேசான் ப்ரைம் ம்யூசிக் தெலுங்கு இசை ரசிகர்களுக்காக புதிய வகை தெலுங்கு பாப் பாடல்களை அறிமுகப்படுத்துகிறது

admin

ஹைடெக் கார் திருடும் நட்டி – ருஹி சிங் போங்கு

admin

ஹீரோவானார் ‘உச்சத்துல சிவா’ ஆண்ட்டி ஹீரோ

admin

ஹீரோயின் அம்மாவுக்கு ரூட் விடும் ரவிமரியா- ’பகிரி’ படத்தில் ரகளை

admin

ஹிரோ சினிமாஸ் கதிர் நடிக்கும் ஒன்பதிலிருந்து பத்துவரை (9 டு 10

admin

ஹிப்ஹாப் தமிழாவின் நான் ஒரு ஏலியன்

admin

ஹிப்ஹாப் ஆதியின் இசையில் “கோமாளி”

admin

ஹிப்பி பட நாயகி டிகங்கான சூர்யவன்ஷிக்கு 2018 ம் ஆண்டிற்கான தாதாசாகெப் பால்கே விருது

admin

ஹிந்தியில் காஞ்சனா 1 படம் Laaxmi Bomb என்ற பெயரில் ரீமேக்

admin

ஹிந்தியிலும் கலக்கும் இருமுகன்

admin

Leave a Comment