Slow Video-2014 Korean Movie review I காட்சிப்பிழை காதல்

fullsizephoto482240

ஒரு கிலோ தோசை மாவை வைத்துக்கொண்டு ஆப்பம் சுடலாம், ஒரு ஈடு இட்லி கூட வேக வைக்கலாம் முக்கியமாக தோசை மாவைவைத்துக்கொண்டு தோசை கூட சுடலாம்.. ஆனால் மாவு ஒன்றுதான்…

ஆது போலத்தான்… ஒரு சூப்பர் பவர் ஒருவனுக்கு கிடைக்கின்றது.. அது என்ன மாதிரியான பவர்…??? கிரிக்கெட் பார்க்கும் போது ஆவுட்டா இல்லையா என்பதை அறிய வீடியோவை ரீப்ளே செய்வார்கள் இல்லையா???

ரொம்ப ஸ்லோவாக வீடியோ ஓடும்… அதாவது 48 பிரேம் மற்றும் 96 பிரேமில் ஒரு காட்சியை ஓடவிட்டால் ஸ்லோ மோஷனில் ஓடம் அல்லவா??? அது போலத்தான் கதையின் நாயகனுக்கு காட்சிகள் தெரிகின்றது…,,இந்த பிரச்சனை இருக்கும் காரணத்தால் அவனால் வேகமாக ஓட முடியாது…

fullsizephoto475511
எவ்வளவு வேகமாக நீங்கள் அவனிடம் ஒரு பந்தை வீசினாலும்… அந்த பந்தினை ரொம்ப ஸ்டைலா பிடிச்சிடுவான்… உங்கள் பார்வை 24 பிரேம்ஸ் என்றால் … அவனுக்கு தெரியும் காட்சிகள் எல்லாமே 96 பிரேம்ஸ்.,… இதுதான் அவனுக்கு இருக்கும் பெரிய பிரச்சனை..

இன்னும் ஒரு உதாரணம் சொல்கின்றேன்…

மெரினா பீச்சில் நடந்து செல்கின்றீர்கள்… ஒருபெண் சட்டையும்…. ஸ்கர்ட்டும் அணிந்து நடந்து செல்கின்றாள்….. கடல் காற்று திடும் என்று அதிகம் வீச… அவளுடைய ஸ்கர்ட் அப்படியே காற்றில் மேலே தூக்கிக்கொள்ள…. அந்த பெண் அலறி அடித்து… காற்றில் பறந்த ஸ்கர்ட்டை தன் கால் இடுக்கில் அடக்கிக்கொள்வாள் இல்லையா.?? உங்கள் பார்வைக்கு ஒரு வினாடியில் ஸ்கார்ட் பறந்து அவள் பதறி கால் இடுக்கில் அடக்கிகொண்டது மட்டும்தான் தெரியும்…

ஆனால் நம்ம ஹீரோவுக்கு ஸகர்ட் ஸ்லோமோஷனில் பறக்கும்… அந்த பெண் அணிந்து இருக்கும் ஐட்டியின் கலர் அதில் இருக்கும் பூப்போட்ட டிசைன்… ஜட்டியின் வார் கலர் …. தொடையில் இருக்கும் வடு அனைத்தும் அவனுக்கு தெரியும்….

இப்படியான கதையம்சம் கொண்டதுதான்.. ஸ்லோ வீடியோ.. 2014 ஆம் ஆண்டு தென் கொரியாவில் வெளியான இப்படம் ரசிகர்களின் பாராட்டை பெற்றது.

இந்த படத்தின் முக்கியமான விஷயம்… இந்த படத்தை ஹாலிவுட் நிறுவனம் 20த் சென்சுரி பாக்ஸ் நிறுவனம் கொரியாவில் தயாரித்த இரண்டாவது படம் இது….

கலெக்ஷனலும் பிச்சி உதறிய திரைப்படம்….

======
படத்தின் டிரைலர்…

====

படத்தின் மேக்கிங்..

====
படக்குழுவினர் விபரம்

Directed by Kim Young-tak
Produced by Yu Jae-hyeok
Written by Kim Young-tak
Starring Cha Tae-hyun
Nam Sang-mi
Music by Min Chan-hong
Cinematography Kim Gi-tae
Edited by Kim Sun-min
Production
company
Fox International Pictures
Our Joyful Young Days Film Co.
Distributed by 20th Century Fox Korea
Release dates
October 2, 2014
Running time
106 minutes
Country South Korea
Language Korean

=======
1355-M5Yz5-slow-video-2014

சரி இப்படியான சூப்பர் பவரை வைத்துக்கொண்டு என்னவெல்லாம் யோசிக்கலாம்…. எப்படி எல்லாம் பூந்து விளையாடலாம்… அதுக்குதான் முன்பே சொன்னது போல தோசை மாவு கதை சொன்னேன்.
அவர்கள் மென்மையான காதல் கதை பக்கம் சென்று விட்டார்கள்…மிக மென்மையாக கதை சொல்லி நம்மை கட்டி போட்டு விட்டார்கள்.. கவித்துவமான காட்சிகளுக்கு மெனக்கெட்டு இருக்கின்றார்கள்… சூப்பர் பவரை வைத்துக்கொண்டு காதல் மொழி பேசி இருக்கின்றார்கள்…
கண்டிப்பாக பார்க்க வேண்டிய திரைப்படம் கொரிய திரைப்படமான ஸ்லோ வீடியோ….
=========