“The Connection” (aka “La French”)-2014 franch movie review|பிரான்ஸ் தேசத்து ஹெராயின் சாம்ராஜ்யம்.

images

பிரெஞ் கனெக்ஷன் சிறு குறிப்பு வரைக..

துருக்கியில் இருந்து ஹெராயின் போதைப்பொருள் பிரான்சுக்கு எடுத்து வரப்பட்டு,,,, அப்படியே அங்க இருக்கும் போலிஸ்காரர்களின் கண்களில் மண்ணை தூவிவிட்டு, கனடா வழியாக அமெரிக்காவுக்கு ஹெராயின் எடுத்து செல்லப்படுவதே பிரேச்சு கனெக்ஷன் என்று அழைக்கப்படும்…
அமெரிக்காகாரன் லபோ திபோன்னு காது கிழிய கத்தறான்.. பிரர்ன்ஸ் பொறம் போக்குகளா?? நீங்க திறமையாஇருந்தா ஏன்டா உங்கள் நாட்டை தாண்டி எங்க நாட்டுக்கு அந்த ஹெராயின் சனியன் எங்ககிட்ட வருது…சின்ன சின்ன பசங்க எல்லாம் போதை பழக்கத்துக்கு அடிமையாகி எங்க நாட்டு சின்ன பசங்க எல்லாம் உருப்படியா வெட்டியா மாறிக்கிட்டு இருக்காங்க… அது மட்டுமல்ல… எங்க நாட்டுலா ஒரு தலைமுறையே அழிஞ்சி போயிடும் போல இருக்கு…
உங்க நார்க்காட்டிக் டிப்பார்ட்மென்ட் என்ன நாக்கு வழிச்சிக்கிட்டு இருக்கா??? அல்லை ஆசிப்பிரியாணி சாப்பிட்டு விட்டு பல் குத்திக்கிட்டு கெடக்கா…
பொறம்போக்குகளா??? உங்க நாட்டு வழியாதான்டா வருது… அதனால நீங்க சரியா இருந்தா ஹெராயின் எங்க நாட்டுக்கு வர வாய்ப்பே இல்லை என்று காட்டுக்கத்தல் கத்த…

2-la-french-film-2015-habituallychic

ஒரு நிமிஷம் பாஸ்… இந்த காட்டுக்கத்தல் இன்னைக்கு ஒன்னும் கத்தலை.. இப்படி கத்தனது .. 1970 ஆம் ஆண்டு கத்த
பிரான்ஸ் தேசம் நார்க்ட்டிக் டிப்பார்ட்மென்டுக்கு பெரி மைக்கல் என்ற நீதிபதியை நியமிக்கின்றது…உன்னுடைய ஒரே குறிக்கோள்… இங்க இருக்கும் ஹெராயின் தயாரிப்பு சோதனை சாலைகளை அழித்து அமெரிக்காவுக்கு சரக்கு போகாமல் தடுப்பதோடு… இங்க இருக்கும் இளைஞர்களை காக்கும் பொறுப்பு உன்னிடத்தில் உள்ளது என்று கிர் ஏற்றி விட… மைக்கேல்.. எப்படி ஹெராயின் கோஷ்ட்டியை பிரான்ஸ் தேசத்தில் ஒழித்தார் என்பதுதான் பிரன்ச் லா.. அல்லது தி கனெக்ஷன் திரைப்படத்தின் கதை..
====
படத்தின் டிரைலர்.


===

படக்குழுவினர் விபரம்.

Directed by Cédric Jimenez
Produced by Alain Goldman
Starring Jean Dujardin
Gilles Lellouche
Cinematography Laurent Tangy
Edited by Sophie Reine
Production
company
Gaumont
Légende Films
Distributed by Gaumont (France)
Drafthouse Films (United States)
Release dates
10 September 2014 (TIFF)
3 December 2014 (France)
Running time
135 minutes[1]
Country France
Belgium
Language French
Budget $26 million

=
பைனல்கிக்.

2014 ஆம் வெளியான இந்த திரைப்படம் உலக திரைப்பட விழாக்களில் கலந்துக்கொண்டு பெரும் வரவேற்ப்பை பெற்றது.. 1970 ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் நடந்த கதை என்பதால் வெளிப்புறபடபிடிப்புகளுக்கு நிறைய மெனக்கெட்டுஇருப்பார்கள்.. 1970களில் போதை பொருள் சாம்ராட்சியம் எந்த அளவுக்கு பிரான்ஸ் தேசத்தில் வேர் ஊன்று இருந்ததை நம்மால் உணர முடிகின்றது… அதே வேளையில் நேர்மைக்கு என்ன பரிசு கிடைக்கும் என்பதையும் படத்தை பார்த்து அறிந்துக்கொள்ளவும்.. உண்மை சம்பவம் என்பதால் அவசியம் இந்த படத்தை பார்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன்.

ஜாக்கிசேகர்.
ஜாக்கிசினிமாஸ்
06/07/2015