Papanasam (2015)movie review |அசத்தும் தகப்பன் கமல்.

papanasam-movie

தினம் தினம் பாத்ருமில் குளிக்கும் ஸ்கான்டல் வீடியோக்கள் வெளிவந்துக்ககொண்டு இருக்கின்றன… காதலன் கெஞ்சி கேட்டான் என்பதற்காகா தான் குளிப்பதை தானே செல்போனில் வீடியோவாக எடுத்து வீடியோ முடியும் போது பிளையிங் கிஸ் கொடுத்து கேமரா அனைக்கு பெண்கள் ஒருவகை….

அவர்கள் குளிப்பதை அவர்களுக்கே தெரியாமல் வீடியோ எடுத்து இன்டர்நெட்டுகளில் வெளிவருவது ஒருவகை… அப்படியான வீடியோ ஸ்கேன்டலையும்…அதனால் பாதிக்கபடும் குடும்பமும்…. அந்த வீடியோவால் நடைபெறும் ஒரு அசாதாரண செயல் ஒரு மகிழ்ச்சியான குடும்பத்தை எப்படி அலைகழிக்கின்றது என்பதே திரிஷ்யம் படத்தின் கதை..

அதே தமிழில் பாபநாசம்

பேமிலி திரில்லர்….

தரணியெங்கும் ரசிக்கபடும் ஒரு கதை…. அதற்கு அற்புதமான திரைக்கதை மூலம் பூசினார் இயக்குர் ஜீத்து ஜோசப்… படம் மலையாளத்தில் கண்ணா பின்னா என வெற்றி பெற்றது… மோகன்லாலின் நடிப்பு மிக முக்கியகாரணம் என்றால் அது மிகையில்லை..

அதன்பின்… தெலுங்கில் வெங்கடேஷ் செய்தார் படம் வெற்றி.. கன்னடத்தில் ரவிச்சந்திரன் செய்தார் படம் வெற்றி… இந்தியில் அஜய்தேவ்கன், தமிழில் கமல்..

தமிழ் பாபநாசம் வெற்றி உறுதிசெய்யப்பட்டு விட்டது…

பாபநாசம் படம் வெளிவரும் முன் அதில் கமல் நடிக்கின்றார் என்ற செய்தி வந்ததுமே… கமல் கண்டிப்பாக சொதப்புவார்…
தேவையில்லாமல் கதையில் மூக்கை நுழைத்து.. ஒரிஜினல் திரைப்படமாக திரிஷ்யத்தை ஏன்டா தமிழில் எடுத்தார்கள் என்று நினைக்கும் அளவுக்கு அவரது அட்ராசிட்டி தாங்காது என்பதாய் செய்திகள் வெளிவந்துக்கொண்டு இருந்தன…

திரிஷ்யம் படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப்பே பாபநாசம் திரைப்படத்தையும் இயக்க போகின்றார் என்றதும்.. இந்த படம் கண்டிப்பாக வெற்றி பெறும் என்று நினைத்தேன்… காரணம்.. அதன் ஆன்மா கெட்டுவிடக்கூடாது என்று அதன் இயக்குனர் கண்டிப்பாக போராடுவார் என்ற நப்பாசைதான்…
அதே போல கவுதமி இந்த படத்தில் நடிக்கின்றார் என்றதுமே சப்பென்று போய் விட்டது…மீனா சான்சே இல்லை… கழக்கு மோழுக்கு என்று இருப்பார்… அவர் ஒல்லியாக இருப்பார்.. எப்படி நன்றாக இருக்கும்.. கண்டிப்பாக பாபநாசம் படத்தோட பெரிய மைனஸ்.. நிச்சயமாக…. கவுதமியாகத்தான் இருக்கும் என்று நினைத்தேன்..ஆனால் பாபநாசத்தில் தன் இயல்பான நடிப்பால் கலக்கி இருக்கின்றார் கவுதமி.

மோகன்லாலை வைத்துஅருமையான திரில்லர் கொடுத்தவரை நம்பி எதிலும் தலையிடாமல் நடிப்பில் மட்டும் கவனம் செலுத்தி அசத்தி இருக்கின்றார் கமல்.. அதை விட ஒரு திருநெல்வேலி குடும்பமோ… அல்லது நாகர்கோவில் குடும்பமோ கண் முன் இருப்பது போன்ற உணர்வை இந்த திரைப்படம் கொடுக்க முக்கிய காரணம் சுகாவும் ஜெயமோகனும்தான்…

அதிலும் அந்த கிளைமாக்ஸ் காட்சி இருக்கின்றதே…. சிங்கள்ஷாட்… மகனை பறிகொடுத்த தந்தை பேசும் உணர்ச்சி மிகு பேச்சு… சிங்களில் ஷாட்டில்… அதில் கமல் சஜஷனில் முதுகு காண்பித்து இருப்பார்….

மகளை பறிகொடுக்க கூடாது என்று நினைக்கும் தந்தையாக கமல்… டூ ஷாட்டில் இருந்த கமல் கதற கதற கமலை நோக்கி கேமரா சார்ஜ் ஆகும் அந்த காட்சியில் கமல் அசத்தலோ அசத்தல்…

மயிர்கூச்செரியும் நடிப்பு அது…

உடம்பு எல்லா ஒரு சேர சிலிர்த்து போன இடம்…

அப்படியான நடிப்பை உடைக்க இனி ஒருவன் பிறந்ததுதான் வரவேண்டும்.

கிளைமாக்ஸ் காட்சியில் சிங்கிள் டேக்.. அசத்தலோ.. அசத்தல்……

அதே போல டயலாக்குகள் அசத்தலோ அசத்தல்…. ஜெயமோகனும் சுகாவும் நன்றாக அவர்களுக்கு இட்டபணியை மிக சிறப்பாக செய்து இருக்கின்றார்கள்…

எம்எஸ் பாஸ்கர் பாய் வேடத்தில் நடித்து இருக்கின்றார் நாமஸ் செய்த தழுப்பு நெற்றியில் இருப்பது போல நிறைய விஷயங்களில் மெனக்கெட்டு இருக்கின்றார்கள்..

அதே போல என் அப்பா சட்டை காலர் பகுதியில் கர்ச்சிப் வைத்துதான் சட்டை போடுவார்… அதே போல கமல் படம் நெடுக சட்டை காலர் பின் பக்கம் கர்சிப் அணிந்து வருகின்றார்..அதே போல அந்த காலத்து ஆண்கள் போல குட்டிக்குறா பவுடரை உடம்பு எங்கும் கொட்டிக்கொண்டு அவர் செய்யும் அனத்தம் ரசனை..

கலாபவன் மணி… சான்சே இல்லை நடிப்பில் விளையாடுகின்றார்…

கமல் கேபிள் டிவி ஆபிசில் உட்கார்ந்து இருப்பதும்…ஒரே பக்கம் வந்து கேபிள் பையன் வந்து பேசும் காட்சிகளில் கவனம் செலுத்தி ஆங்கிள் மாத்தி இருக்கலாம்… அது போன்ற குறையை தவிர்த்து நிறைய காட்சிகளில் அசத்தி இருக்கின்றார் ஒளிப்பதிவாளர் சுஜித்வாசுதேவ்.
ஜிப்ரானின் இரண்டு பாடல்களும்..அந்த இண்டர்வெல் பிளாக்கும் அதற்கு பின்னனி இசையும் அசத்தல்…

சன் டிவியில் மிட் நைட் மசாலாவுக்கு மாற்றி விட்டு கமல் வேட்டியை சரி செய்துக்கொள்ளும் காட்சி அசத்தல் …தியேட்டரில் சிரிப்பலை…
கமலுக்கும் கவுதமிக்கும் நடக்கும் ரோமான்ஸ் ரசிக்கவைக்கின்றது…அபூர்வசகோதரர்கள் கமல் கவுதமி, தேவர் மகன் கமல் கவுதமி, நம்மவர் கமல் கவுதமி ரோமான்ஸ் காட்சிகளை பார்த்து ரசித்து இருக்கின்றோம்…. அது போல இந்த படத்திலும் ஒரு மெச்சூர்ட் ரொமான்ஸ்… இப்ப மட்டும் எல்லாம் தெரிஞ்சிடுச்சா..? என்ற கேள்வியோடு காமத்தோடு கவுதமி கமலை பார்க்க எனக்கு தெரியாது…? என்று காமத்தோடு கவுதமியை கமல் நோக்க… சான்சே இல்லை அந்த காட்சி…

சார்லி, இளவரசு போன்றவர்கள் அவர்களுக்கான பணியை திறம்பட செய்து இருக்கின்றார்கள்.

அதே போல பையனின் அம்மாவாக ஐஜி கேரக்டரில் நடித்து இருக்கும் மலையாள பெண்மணி… திரிஷ்யம் போலஇந்த படத்திலும் அசத்தி இருக்கின்றார்.

படத்தின் டிரைலர்..

=====
படக்குழுவினர் விபரம்.

Directed by Jeethu Joseph
Produced by Suresh Balaje
George Pius
Rajkumar Sethupathi
Sripriya
Written by Jeyamohan
(Dialogue)
Screenplay by Jeethu Joseph
Story by Jeethu Joseph
Starring Kamal Haasan
Gauthami
Music by M. Ghibran
Cinematography Sujith Vaassudev
Edited by Ayoob Khan
Production
company
Wide Angle Creations
Raj Kumar Theatres
Release dates
3 July 2015
Running time
181 minutes
Country India
Language Tamil

======
பைனல்கிக்.
உத்தமவில்லன், விஸ்வரூபம் இரண்டு போன்ற படங்களில் கவனம் செலுத்தியதால் இந்த படத்தில் எந்த இடத்திலும் கமல் தலையிடவில்லையா? அல்லது இந்த படத்தின் ஜீவன் எந்த இடத்திலும் கெடக்கூடாது என்று தலையிடவில்லையா? என்று தெரியவில்லை… எது எப்படி இருந்தாலும் கமல் நடிப்பில் இந்த படத்தையும் இனி வருங்காலங்களில் சேர்த்து விட வேண்டியதுதான்… என்ன உடல் மொழி என்ன ரசனை… சான்சே இல்லை.
அதே போல கிளைமாக்ஸ் சிங்கிள் ஷாட்…
பாபநாசம் அவசியம் குடும்பத்தோடு பார்த்தே தீரவேண்டிய திரைப்படம். முக்கியமாக பெண் பிள்ளை பெற்ற தகப்பன்கள்..

வீடியோ விமர்சனம்…