Puli movie Teaser controversy & review |புலிதிரைப்படத்தின் டீசர் பிரச்சனை…நம்பகத்தன்மை இனி குறையும்…

Puli_vijay

ஆறு ஏழரை முகூர்த்த கல்யாண மண்டபத்தில்… சரியாக எழுமணிக்கே சாப்பாட்டு பந்தியை ரெடி செய்து பூட்டி வைத்து விடுவார்கள்.. ஆனால் எழு மணிக்கே ஒரு ஐம்பது பேர் பின் பக்க வாசல் வழியாக வந்து விருந்தை சுவைத்துக்கொண்டு இருந்தால்.. மற்றவர்கள் நாங்க ஆபிசுக்கு போவனும் என்று மல்லுக்கட்டும் பொது வேறு வழியில்லாமல் மணமகன் தாலிகட்டும் முன்பே பந்தியை திறந்து விடுவார்கள் அல்லவா?? அது போலத்தான் புலி திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் டீசருக்கு ஆகி இருகின்றது…

சரியாக ஜூன் 22 ஆம் தேதி விஜய் பிறந்ததினத்தை முன்னிட்டு அதிகாலை 12 மணிக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டு இருக்க 21 ஆம் தேதி காலையிலேயே யூடியூபில் புலி படத்தின் டீசர்வெளியாக படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்ததோடு வேறு வழியில்லாமல் அதிகாரபூர்வமாக 21 ஆம் தேதியே பர்ஸ்ட் லுக் டீசரை வெளியிட்டார்கள்…

போர் பிரேம்ஸ் தியேட்டரில் இன்டன்ஷிப்புக்கு வந்த நபர் ஆர்வக்கோளாறாக செய்ய தற்போது அவர் கைது செய்யப்பட்டு இருக்கின்றார்…
ஒரு நபர் செய்த தவறரால் இனி விஸ்காம் , எலெக்ட்ரானிக் மீடியா பசங்கள் யார் இன்டர்ன்ஷிப்புக்கு சென்றாலும் நம்பகத்தன்மை இல்லாமல் சந்தேகத்தோடு பார்க்கும் சூழல்தான் இனி உருவாகும்..

ஒரு டிரைலரை பார்க்க கூட இனி அவர்களுக்கு அனுமதி மறுக்கப்படும் என்பதே உண்மை.. யாரோ ஒருவர் செய்த தவறு.. இனி எவ்வளவு நெருங்கிய நண்பர்களாக இருந்தாலும் மிகவும் கவனமாகவே இருப்பார்கள் என்பதுதான் புலி டீசர் பிரச்சனை உணர்த்தும் செய்தி..

நம்ம என்ன வேலையை செய்கின்றோம் அது என்னமாதிரியான பின் விளைவுகளை அது உருவாக்கும் என்பதை அறிந்து செய்ய வேண்டும் என்பதை கண்டிப்பாக இளையதலைமுறையினர் உணரவேண்டும்.