Jackiecinemas

How Old Are You-2014-malayalam|உலகசினிமா|வாழ்ந்து காட்டுதலே பழி தீர்த்தல்

Indian Movies Malayalam Cinema

how-old-are-you-malayalam

பொதுவாக இந்தியாவில் எல்லாவற்றிர்க்கும் புனித பிம்பம்கள் கொடுத்த விட்டு பின்னால் எல்லா களவானி தனங்களும் அனுதினமும் நடக்கும் தேசம்.

இங்கு எல்லாம புனிதம்தான்…

ரோஜா படத்தில் தேசிய கொடியை எறித்தால் உணர்ச்சி வசப்பட்டு அதனை நாயகன் அணைப்பான் படம் பார்க்கும் நமக்கு ஜிவ் என்று இருக்கும்…

ஆனால் அமெரிக்காவில் கொடியை எரிப்பார்கள்…. அவர்கள் நாட்டு கொடியில் ஜட்டி செய்துக்கூட போட்டுக்கொள்ளுவார்கள்… ஆனால் நகரம் தூய்மையாக இருக்கும்…

எதற்கு புனித பிம்பம் கொடுக்க வேண்டுமோ…? அதற்கு கொடுப்பார்கள்… எல்லாத்தையும் புனிதமான பார்க்கமாட்டார்கள்…

எர்போர்ஸ் ஒன் திரைப்படத்தில் அமெரிக்க அதிபரை அசிங்கமாக திட்டுவார்கள்… எச்சி துப்புவார்கள்… அடிப்பார்கள் துவைப்பார்கள்… வில்லன் சரிக்கு சரியாக பேசுவான்… எல்லாம் இருக்கும் ஆனாலும் அவர்கள் சொல்ல வந்த விஷயத்தை வாழை பழத்தில் ஊசி ஏற்றுவது போல ஏற்றி விட்டு சென்று விடுவார்கள்..

ஆனால் நம்ம ஊரில் அப்படியாக கதைக்களம் சாத்தியம் இல்லை… முதல்வரை காண்பிக்க வேண்டும் என்றால் கூட வெறும் முதல்வர் சேரை பார்த்துதான் நாயகனோ நாயகியோ பேச வேண்டும்…

மர்டர் அட் 1600 என்பது வெள்ளை மாளிகை போஸ்டன் எண்… அதையே படத்துக்கு தலைப்பாக வைத்து விட்டு வெள்ளைமாளிகையில் கொலை நடந்தது என்று கதை செய்ய முடியும்… அப்சலூட் பவர் படத்தில் அமெரிக்க அதிபரே கொலை செய்வார் என்று காட்ட முடியும்…ஒலம்பஸ் பாலின் டவுன் படத்தில் அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை கட்டிடம் தரை மட்டமாகி இருக்கும்….

ஆனால் நம் ஊரில் பாரளுமன்றத்தையோ.. ராஷ்ட்ரபதி பவனையோ அப்படி கற்பனைக்கு கூட காட்சிபடுத்த முடியாது.. காரணம் நம்ம ஊர் சென்சார் போர்டு…

ரிவைசிங் கமிட்டிக்கு அனுப்பினால் புரொட்யூசர் அவ்வளவுதான் தூக்கு கயிற்றில் தொங்கத்தான் வேண்டும்..

இந்த படம் எனக்கு முதலில் பிடிக்க முக்கியகாரணம்…ஒரு இந்திய ஜனாதிபதி கேரளாவில் அரசு ஊழியராக பணியாற்றும் 35 வயது கடந்த பெண்ணை சந்திக்க வேண்டும் என்று ஏன் சொல்ல வேண்டும்…??? என்பதுதான் படத்தின் ஹூக்…

இந்த கதை கான்செப்ட் கூட அப்துல் கலாம் மட்டும் இந்திய ஜனாதிபதியாக வரவில்லை என்றால் யோசித்து பாருங்கள்.. இன்னும் புனித பிம்பங்களை நாம் தொடாமல் தான் வைத்து இருப்போம்….
முதல் விஷயம்… இந்த ராஷ்ட்ரபதி பவன், ஜனாதிபதி போன்ற பாத்திரங்களை திரைக்கதையில் சேர்த்து… அடுத்த அட்ராக்ஷ்ன் மஞ்சு வாரியார்…

மஞ்சவாரியார் பத்தி 18 வயசுல இருக்கும் இப்போதைய இளசுகளுக்கு தெரிய நியாயமில்லை….

1978 இல் நாகர்கோவில் பெற்றெடுத்த அழகு சிலை…

1995 இல் மலையாள சினிமாவில் என்ட்ரி…

நாலே வருஷம் இங்க எப்படி குஷ்பு குஷ்புன்னு சொல்லிக்கிட்டு திரிஞ்சதோட மட்டுமல்லாமல்… உணர்ச்சி வசப்பட்டு கோவிலும் கட்டினான்களோ..?? அது போல… மலையாள மண்ணில் என்டே மஞ்சு என்று தீயாய் ரசிகர்கள் மஞ்சு வாரியாரை கொண்டாடி தீர்த்தனர்..

ரசிகர்களின் எல்லோருடைய கனவிலும் மஞ்சு ஒரே நேரத்தில் வந்து எல்லோரையும் கிறங்கடித்தார்…
மஞ்சுவின் ரசிகர்களுக்கு அந்த சந்தோஷம் நீண்ட காலம் நிலைக்கவில்லை…

ஆம். மஞ்சுவை நடிகர் திலிப் 1998 ஆம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டு மஞ்சுவோடு நன்றாக உரசி போஸ்கொடுத்துக்கொண்டு திருமண கோலத்தில் போட்டோவில் சிரித்தார்…. ரசிகர்கள் அந்த போட்டோவை பார்த்த வினாடி கள்ளுக்கடைகளுக்கும் பட்டை சாராயம் அடிக்கவும் படையெடுத்தனர்.

மஞ்சுவாரியார்… கணவருக்காக திரைப்பட துறையை தலை மூழ்கினார்.

ஒரு பெண் குழந்தைக்கு தாய் ஆனார்…

மகிழ்ச்சியான வாழ்க்கை … இதோ அதோ என்று பதினைந்து வருடம் ஓடி விட்டது… பெண் பெரியவள் ஆகி விட்டாள்… யார் கண் பட்டதோ?? இரண்டு பேரும் தற்போது பிரிந்து விட்டார்கள்….

மல்லுவுட்டில் சமந்தா மாதிரி பரபரப்பா நடிச்சிக்கிட்டு இருக்க சொல்லோ… கல்யாணம் செய்துக்கொண்டு செட்டிலானவர் மஞ்சு… பதினைந்து வருடம் குடும்பம் கணவன் பிள்ளை என்று வாழ்ந்தாகி.. திடிர் என்று பிரிந்தால் மஞ்சு என்னசெய்வார்…???

கண்ணைக்கட்டி காட்டில் விட்டது போல தவிக்க திரும்பவும் கை கொடுத்தது மலையாள திரையுலகம்..

இதோ மஞ்சுவாரியார் கையில் ஒரு டஜன் படங்கள்.. 15 வருட வனவாசத்துக்கு பின் திரும்பவும் சினிமா..

15 வருடத்துக்கு பின் பெற்ற பெண்ணும் கணவனும் அம்மாவை கிள்ளுக்கீரையாக நடத்துவது நிறைய குடும்பங்களில் நடப்பதுதான் என்றாலும் மிக அழகான திரைக்கதை அமைத்து இந்த திரைப்பட்த்தை ரசிக்க வைத்து இருக்கின்றார் இயக்குனர்…

35 வயதுக்கு மேல் உங்கள் வயது என்ன? என்று கேட்டால் சொல்ல நிறைய யோசிக்க வேண்டி இருக்கும்… முக்கியமாக பெண்கள் சொல்ல நிறையயே யோசிப்பார்கள்….

இந்த கான்செப்ட்டை வைத்துக்கொண்டு முதல் பாதியில் சுவாரஸ்யபடுத்துகின்றார்கள்.. இந்திய ஜனாதிபதி ஏன் மஞ்சுவாரியாரை சந்திக்க வேண்டும்..??? இதுதான் ஒற்ரை லைன்… இதை வைத்துக்கொண்டு மனித உணர்வுகளை துணைக்கழைத்துக்கொண்டு அதகளம் செய்து இருக்கின்றார்கள..
இண்டர்வெல்லில்… கணவனும் ,மகளும் அயர்லாந்து செல்ல… நடு காட்டில் விட்டது போன்ற உணர்வை மஞ்-சு மிக அழகாக வெளிப்படுத்தி இருக்கின்றார்… அதில் உண்மையான வாழ்வின் பிரதிபலிப்பும் நிறைய இருப்பதாக நான் நினைக்கின்றேன்…

அதே போல பேஸ்புக் எந்த அளவுக்கு மக்களிடம் கண் முடித்தனமாக கேலிக்கு உள்ளாகி இருக்கின்றது என்பதையும் மஞ்சு அதற்கு தக்க வீடியோ பதிலடி கொடுப்பதும் செமையான சுவாரஸ்யம்.
இன்டர்வல்லிம் அம்மா அது என்ன கேள்வி தெரியுமா? என்று ஊருக்கு போகும் ஜோரில் மகள் சொல்ல வரும் போது அது அவசியமில்லை என்று மறுக்கும் காட்சியில் நிரூபமா ராஜிவ் அவசியமில்லை என்று அந்த கதாபாத்திரம் மறுக்கும் போது தட்ட வைக்கின்றார்….

கல்லூரி காலங்களில் புயல் என இருந்தவர் நிரூபமா என்று கல்லூரிக்கு அழைத்து போய் கனிகா கதை சொல்லும் காட்சிகளை தவிர்த்து இருக்கலாம்.. ஆனை விட இக்கட்டான சூழலில் சரியான முடிவெடுத்த வளர்ச்சி காணும் சக்தி பெண்களுக்கு இயற்கையிலே உண்டு என்பது என் தழ்மையான கருத்து.

படத்தின் பெரிய பலம்…. இசை… இந்த படத்தின் பின்னனி இசையை கேட்டுக்கொண்டே இருக்கலாம்… மனித உணர்வுகளை மைய சரடாக வைத்து படம் இயக்க இருக்கும் இயக்குனர்கள் கண்டிப்பாக இசையமைப்பாளர் கோபி சுத்தரை பயண்படுத்திக்கொள்ள வேண்டுமாய் கேட்டுக்கொள்கின்றேன்..

====
படத்தின் டிரைலர்

====
படக்குழுவினர்விபரம்
Directed by Rosshan Andrrews
Produced by Listin Stephen
Written by Bobby Sanjay
Screenplay by Bobby Sanjay
Starring Manju Warrier
Kunchako Boban
Kanika
Lalu Alex
Amritha Anil
Music by Gopi Sunder
Cinematography R. Diwakaran
Edited by Mahesh Narayanan
Production
company
Magic Frames
Distributed by Central Pictures, Tricolor Entertainment Australia & Bunkers Ent NZ, Indian Movies (UK)
Release dates
17 May 2014 (Kerala)
Running time 141 minutes
Country India
Language Malayalam
======
பைனல்கிக்.
இந்தபடம் ஸ்ரீதேவிக்கு எப்படி ஒஐ இங்கிலிஷ் விங்கிலிஷ் திரைப்படம் ஒரு பெரிய டெர்னிங் பாயிண்ட்டை கொடுத்ததோ? அதே போல மஞ்சு வாரியாருக்கு ஹவ் ஓல்டு ஆர் யூ திரைப்படம் பெரிய ஒப்பனிங்கை கொடுத்து இருக்கின்றது என்றே சொல்ல வேண்டும்…

30 வயதை கடந்த பெண்கள் அவசியம் பார்த்தே தீரவேண்டிய திரைப்படம் இது என்பது என் கருத்து..

அவர்களுக்கு ஒன்றே ஒன்று சொல்லிக்கொள்கின்றேன்.. கல்யாணம் புள்ளை புருசன் அயிட்டப்பறம் எனக்குன்னு என்ன இருக்குன்னு யாரும் யோசிக்காதிங்க… உங்கள் கனவுகள்தான்…. உங்கள் தனித்தன்மை என்பதை

“Your dream is the Signature of your life….

” Achieve it…

It is the identity of your life…

என்ன அழகான வரி பாருங்கள்… சான்சே இல்லை…… இதற்காகவே இந்த படத்தை பார்க்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கின்றேன்.

அதே போல மஞ்ச வாரியார் படம் நெடுக கட்டிக்கொண்டு வரும் சேலைகள் சேலைகள் போல அதே டிசைனில் சேலைகளை வாங்குங்கள்…. ஒவ்வொன்றும் அட்டகாசம் போங்கள்…

படம் பார்த்து முடிக்கும் போது தன்னம்பிக்கை டானிக் ரெண்டு கிளாஸ் குடித்தது போல இருக்கும்…

டோன்ட் மிஸ் இட்.

Related posts

பார்வையற்ற முதல் பெண் துணை ஆட்சியர் – #Couple’sTalk | #JackieCinemas #News360 #Episode #8 | 14-10-2019

admin

நிவின் பாலியின் ‘ஜேகப்ன்டே சுவர்க்க ராஜ்ஜியம்’ மலையாள படத்தின் சிறப்பு காட்சி, பிரபலங்களுகாக திரையிடப்பட்டது

admin

நடிகையர் திலகம் திரை விமர்சனம்

admin

Why did the PREMAM boys reunite!

admin

Virus Malayalam Movie Review By Jackie Sekar

admin

Varathan Malayalam Movie Review

admin

Valiyavan movie review | Jai, Andrea Jeremiah | M.Saravanan | D.Imman

admin

Uru Movie Press Meet Photos

admin

Unda 2019 Malayalam Movie Review In Tamil By Jackie Sekar

admin

Top 10 Best Tamil Movie Bus Songs Part 1 – #Jackiesekar | தமிழ் திரைப்பட பேருந்து பாடல்கள்

admin

Tamil Nadu Malayalee Association Event Photos

admin

Sudani From Nigeria Malayalam Movie Review

admin

Leave a Comment