Jackiecinemas

Grey (2011) movie review | Liam Neeson

Hollywood

The-Grey-2012-movie-poster

வாழ்க்கை சில நேரத்துல  வாழனும்ன்னு நினைக்கறவனுக்கு இறக்கம் காட்டுவதில்லை.. சாகனும்ன்னுநினைக்கறவனுக்கு…இரக்கத்தை  அள்ளித்தெளிக்கும்….

தற்கொலை செய்துக்கொள்வது  கோழைத்தனம்தான் என்றாலும்   முடிவு எடுக்கும்  அந்த ஒரு  சில வினாடி தைரியம் என்பது கடைசி  வரைக்கும்  உயிரோடு இருக்கும் எந்த மனிதனும் அறிய  நியாயம் இல்லை என்றாலும்…..

தற்கொலை செய்துக்கொள்ள போகும் பெண்ணை… நான்கு பேர் சுற்றி நின்று கற்பழக்க தயாரானால் அவள் ஒத்துக்கொள்வாளா?? அல்லது தற்கொலைதானே      செய்துக்கொள்ள  போகின்றாய்… என்  கையில் உள்ள கத்தியால் உன்னை குத்தி… கொஞ்சம் கொஞ்சமாக சாகடிக்க அனுமதிக்க வேண்டும் என்று  சொன்னால்…  அவள் ஒத்துக்கொள்ளுவாளா???

அப்படியான ஒரு விஷயத்தை வைத்துக்கொண்டுதான் திரைக்கதை  பின்னி இருக்கின்றார்கள்… Joe Carnahan, Ian MacKenzie Jeffers

ஒரு ஒன்லைன்… ஆனா  அதை செலவே இல்லாமல்..ச்சே ச்சே செலவே இல்லை என்று சொல்ல முடியாது…  ஆனால் சின்ன ஒன்லைனை வச்சிக்கிட்டு மிரட்டி இருக்காங்கன்னே சொல்ல  முடியும்..

====

கிரே படத்தின் கதை என்ன?

இயற்கைக்கும்  மனிதனுக்கும் நடக்கும் போராட்டத்தில் மனிதன்  ஜெயித்தானா…. அல்லது  இயற்கை வென்றாதா என்பதுதான் ஒருவரிக்கதை.

==

ஜான்  ( லியாம் நீசன்) ஆல்ப்ஸ்  மலையில் இருக்கும் ஆயில் கம்பெனியில் வேலை… வேலை என்றால்  என்ன வேலை தெரியுமா???   சுட்டு   சாகடிக்கும் வேலை… அவரசப்பட்டு எந்த  முடிவுக்கும் வந்துவிடக்கூடாது…இயற்கை அமைதியாக தூங்கும் இடத்தில் மனிதர்களின் தேவைக்காக ஆயில் எடுக்க  ஆல்ப்ஸ் மலையில் குழி தோண்டினால்… அங்கே இருக்கும்  சாம்பல்  ஓநாய்கள்   சும்மா விடுமா…??? வேலைக்கு வரும் ஆட்களை ஏமாந்த நேரத்தில் போட்டுதாக்கி கொன்று விடும்.. அப்படி  ஆயில் கம்பெனியில்  வேலை செய்யும் ஆட்களை   சாம்பல்  ஓநாய்களிடம் இருந்து  காப்பாற்றும் வேலை…

ஆயில் கம்பெனி  ஊழியர்களோடு நம்ம ஹீரோ லியாம் நீசன்   பயணம் செய்யும்… விமானம் நடு பனி மலையில் விபத்துக்குள்ளாகின்றது.

உயிர் பிழைப்பவர்கள்…ஒரு சிலர்தான்… அவர்களோடு நம்ம ஹீரோ அவர்களை காப்பாற்றி தானும் உயிரோடு ஆல்ப்ஸ் மலையில் இருந்து திரும்பி வந்தாரா? இல்லையா  என்பதுதான்  கிரே படத்தின் கதை…

===========

படத்தின் சுவாரஸ்யங்கள் மற்றும்  ஸ்பாய்ல்ர்ஸ்… படம் பார்க்க  போறவங்க.. இத்தோடு அப்பிட் ஆகிக்கோங்க…

 

அருமையான திரில்லர்….

இந்த திரைப்படம் 2011 ஆண்டில்  வெளியான திரைப்படம் .. எப்படி இது  என் கண்ணில் சிக்காமால் போனது என்று யோசித்துக் கொண்டு இருக்கின்றேன்….

Ghost Walker  என்ற  நாவலை  Ian MacKenzie Jeffers எழுதினார்… அந்த நாவலை மையமாக வைத்து திரைக்கதை எழுதி  இருக்கின்றார்கள்…

இந்த படத்தை  தயாரித்துஇருப்பவர்களுள்- ஒருவர் ஆதி சங்கர்… இவர் இந்தியர்… நிறைய  ஆர் ரேட் திரைப்படங்கள்  எடுப்பதுதான் இவர் வேலை  என்று விக்கிபீடியா கதறுகின்றது.

விமான விபத்தை விட  சாம்பல்நிற ஓநாய்கள்   செய்யும் அலப்பறைகளில் பயந்து சாகவேண்டியதாக இருக்கின்றது…

இந்த படத்தில் எனக்கு மிகவும் பிடித்த  விஷயம் படத்தோட கிளைமாக்ஸ்… சான்சே இல்லை… இப்படி படத்தை முடிக்கசெமை தில்லு வேணும்…

 

====

படத்தின்  டிரைலர்..

 

========

படக்குழுவினர் விபரம்.

Cast: Liam Neeson, Dermot Mulroney, Frank Grillo, Dallas Roberts, James Badge Dale, Joe Anderson, Nonso Anozie
Director: Joe Carnahan
Screenwriters: Joe Carnahan, Ian Mackenzie Jeffers
Producers: Joe Carnahan, Jules Daly, Mickey Liddell, Ridley Scott, Tony Scott
Executive producers: Marc Butan, Ross Fanger, Jennifer Hilton Monroe, Bill Johnson, Adi Shankar, Spencer Silna
Director of photography: Masanobu Takayanagi
Production designer: John Willett
Music: Marc Streitenfeld
Costume designer: Courtney Daniel
Editors: Roger Barton, Jason Hellmann, Joseph Jett Sally

====

பைனல்கிக்..

நொடிக்கு நொடி பயத்தை நெஞ்சில்  சுமந்துக்கொண்டு பார்க்கும் அளவுக்கு அருமையான காட்சி அமைப்பு என்றே சொல்ல வேண்டும்… படத்துக்கு பெரும் பலம் மசனோபு டக்கயாங்கி… இவர் ஜப்பான் சினிமாட்டோகிராபர்… ஆல்பஸ் மலையில் பயணிப்பது போல இருக்கின்றது இவருடைய  ஒளிப்பதிவு.

கண்டிப்பா இந்த படம் பார்த்தே தீர வேண்டிய திரைப்படம்.

===

படத்தோட ரேட்டிங்.

பத்துக்கு ஏழு.

======

வீடியோ விமர்சனம்.

Related posts

யாழினியின் கதை நேரம் – ஓநாயும் 7 ஆட்டுகுட்டிகளும்

admin

நோ கண்ட்ரி பார் ஒல்ட் மேன் கதை என்ன ? பாகம் 2

admin

நோ கண்ட்ரி பார் ஒல்ட் மேன் கதை என்ன ? பாகம் 1

admin

நான்கு வயது யாழினியின் முதல் சினிமா விமர்சனம் ஜங்கிள் புக்

admin

செய்தி வாசிப்பாளரின் காதல் கதை – பார்த்தே தீர வேண்டிய படம்

admin

கேம் ஆப் த்ரோன்ஸ் விமர்சனம் ஒரு அறிவிப்பு

admin

Zodiac (2007) Hollywood Movie Review

admin

Woman at War 2018 Iceland Movie Review

admin

Wind River (2017) Hollywood Movie Review

admin

When You No Longer Love Me 2018 Spain Movie Review

admin

What Happened to Monday (2017) Movie Review

admin

watch Tomorrowland Official Trailer (2015) – George Clooney, Britt Robertson

admin

Leave a Comment