Enakkul Oruvan (2015)Movie review

Enakkul-Oruvan_B
லுசியா… ((எனக்குள் ஒருவன்))
கன்னட சினிமாவுக்கு சமீபத்தில் மரியாதை என்ற அரிதாரம் பூசிய திரைப்படம் என்றால் அது மிகையில்லை.. கன்னட சினிமாவை யாரும் கவனிக்கமால் இருந்த வேளையில் , தியேட்டர் இருட்டில் டார்ச் அடித்து வழிகாட்டுப்வனை போல லுசியா திரைப்படம் கவனிப்பினால் கன்னட சினிமாவுக்கு புது ரத்தம் பாய்ச்சியது போல இருந்தது….
அது மட்டுமல்ல 2013 ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியாக சைக்கிலாஜிக்கல் திரில்லர் திரைப்படம் லுசியா வெளியானது.. படத்தை பவன்குமார் இயக்கி இருந்தார்………….
2011 ஆம் ஆண்டு சோசியல் மீடியாவில் பவன்குமார் படம் இயக்க பணம் வேண்டும் என்று அறிவித்து பொதுமக்களிடம் பணம் திரட்டி கிரவுட் பண்டிங்கில் எடுத்த திரைப்படம் லுசியா…… நிறைய சிரமத்துக்கு இடையே அந்த படத்தை இயக்குனர் பவன் ரிலிஸ் செய்தார்.

 

லுசியா கவனிக்கப்படாமல் பத்தோடு பதினொன்றாக காணாமல் போய் இருக்க வேண்டிய திரைபடம்.. ஆனால் படத்தை பார்த்த இந்தி இயக்குனர் அனுராக் கஷ்யாப் டுவிட்டரில்.. அட்டாகசமான திரைப்படம் மட்டுமல்ல..இது எனது பிறந்தநாள் கிப்ட் என்று டுவிட்செய்ய… நான் பார்க்கின்றேன் நீ பார்க்கின்றேன் என்று எல்லோரும் பார்த்து படத்தை பெரிய அளவுக்கு கொண்டாடினார்கள்.. அந்த திரைப்படம் கொண்டாட வேண்டிய திரைப்படம்தான்…. வெறும் 75 லட்சத்தில் எடுக்கப்பட்ட திரைப்படம் அது…..
மூன்று கோடி ஒரு படத்துக்கு செலவு செய்தாலும் மொக்கையான திரைப்படம் எடுக்கும் இயக்குனர்கள் தமிழ் சினிமாவில் அதிகம்.
அப்படி 2013 ஆம் ஆண்டு சூறாவளியாக சற்று சுழன்ற லுசியா திரைப்படம்தான் தற்போது சித்தார்த் நடிப்பில் எனக்குள் ஓருவன் என தமிழ் பேசி இருக்கிறது….

=========
நான் லினியர் டைப் திரைக்கதையான எனக்குள் ஒருவன் திரைப்படத்தின் கதை என்ன?
சினிமாவில் டார்ச் அடித்து சரியான சீட்டில் அமரவைக்கும் டார்ச் லைட் பாய் சித்தார்த்துக்கு தூக்கம் வரவில்லை… அவரது கையில் லுசியா என்ற மாத்திரை கிடைக்கின்றது… அதன் பின் அந்த டார்ச் பாய் என்னவானான் என்பதுதான் எனக்குள் ஒருவன் திரைப்படத்தின் சுவாரஸ்ய மீதிக்கதை.
======
ஸ்பாய்லர்ஸ்* அலர்ட்.
படத்தின் சுவாரஸ்யங்கள்.
சித்தார்த்… முதல் பாதியில் லுசியா படத்தின் கேரக்டரை பிரதிபலிப்பதா அல்லது நாமே நம்ம சொந்த சரக்கை அவிழ்த்து விடுவாதா என்ற குழப்பம் இரண்டுமூன்று சீன்களில் வருகின்றது… அதே போல மேக்கப்பும் படுத்தி எடுக்கின்றது……ஆனால் சித்தார்த் பொண்ணு பார்க்கும் காட்சியில் இருந்துதான் கருப்பாய் இருந்த மூஞ்சியை கொஞ்சமே மாநிறத்துக்கு மாற்றி படத்தையும் சித்தார்த்தையும் காப்பாற்றி இருக்கின்றார்கள்….
இரண்டாம் பாதியில் சித்தார்த் காதல் காட்சிகளாகட்டும் நரேன்இறந்த உடன் கதறும் இடங்களாகட்டும்… சித்தார்த் நடிப்பில் நிற்கின்றார் நடக்கின்றார் உட்காருகின்றார், விழுந்து புரள்கின்றார்….. அது மட்டுமல்ல.. நடிகர் சித்தார்த் கேரக்டர் அலட்டலாக பேசும் காட்சிகள் அத்தனையும் அருமையான நடிப்பு…
தீபா சன்னதி…. அசத்துகின்றார்… ஆனால் கவர்ச்சி உடையில் வரும் போது அகன்ற இடுப்புடன் வெயிட் போட்டது போல தெரிகின்றார்.. ஆனால் பிட்சா பெண்ணாக மற்றும் விளம்பரமாடலாக வரும் போது ரொம்பவே இளைத்து இருக்கின்றார்…. என்ன காரணம் என்று ஒளிப்பதிவாளர் கோபி அமர்நாத்தைதான் கேட்க வேண்டும்..
பட்… புடவையில் வரும் காட்சிகளில் கோவில் சன்னதி பிகர் போல கலக்குகின்றார்.
மேகா படத்தி பாவாடை தாவணி போட்டு புத்தம் புதுகாலை பாடலுக்கு ஆடிய சிருஷ்ட்டி டாங்கே… அரைக்கால் சட்டை போட்டு லூஸ் டீஷர்ட் மற்றும் லோ நெக்குகளில் வந்து மனதில் கலவரைத்தை உண்டு செய்கின்றார்…
ரொம்ப நாட்களுக்கு பிறகு ஆடுகளம் நரேனுக்கு தியேட்டர் ஓனராக நல்ல ரோல்… அதே போல ஜென்டில்மேன் படத்துக்கு பிறகு மீண்டும் காக்கிசட்டையில் பிட்டாக இருக்கின்றார் அஜய் ரத்னம்.
சந்தோஷ் நாரயணன் இசையில் அசத்துகின்றார்…தியேட்டர் சித்தார் வரும் காட்சிகளில் வரும் பின்னனி இசை அசத்தல்…
எடிட்டி லியோ சிறப்பாக அவருக்கு கொடுத்த பணியை செய்துள்ளார்…
படத்தோட மைனஸ் அண்டு மிஸ்டேக்..
இண்டர்வெல்பிளாக்கில் சித்தார்த்தை கொல்ல நாயகி சன்னதி டாக்டர் வேடம் போட்டு வருகின்றார்…..அவர் ஒரு மாடல் மற்றும் நடிகையும் கூட… சின்னதாக ஒரு கோர்ட் ஸ்டெத் மாட்டிக்கொண்டு கொல்ல வருகின்றார் என்று காட்சி அமைத்த விதம் சிரிப்பை வரவழைகின்றது.
பத்திரிக்கையாளர் சந்திப்பு காட்சியில் சித்தார்த் மனதில் நினைத்து இருப்பதை காட்சிகளாக வைத்து வெற்றிபெற்றுவிட்டார்கள் என்றே சொல்ல வேண்டும். படத்தை பிரசாத் ராமர் … கன்னட லுசியாவுக்கு பங்கம் வராத அளவுக்கு இயக்கி இருக்கின்றார்.

========
படத்தின் டிரைலர்..

 

==========

படக்குழுவினர் விபரம்.

 

Directed by Prasad Ramar
Produced by C. V. Kumar
Written by Pawan Kumar
Starring Siddharth
Deepa Sannidhi
Srushti Dange
Music by Santhosh Narayanan
Cinematography Gopi Amarnath
Edited by Leo John Paul
Production
company
Thirukumaran Entertainment
Distributed by Dream Factory, Radiance Media
Release dates
March 6, 2015
Country India
Language Tamil

=======

பைனல்கிக்.
மிக மிக அற்புதமான ஸ்கிரிப்ட்… இதையே நோலன் செய்து இருந்தால் ஆகா ஓகோ என்று புகழ்ந்து இருப்பார்கள்…
அதே போல படம் ஏ கிளாஸ் ஆடியன்சுக்குதான் செட் ஆகும்… படத்தின் ஸ்கிரிப்ட் அது போல… ஆனால் முடிந்தவரை எளிமையாக புரியும் படி மேங்கிங்கில் கொடுக்க முயன்று இருக்கின்றார்கள்…
படம் பிளான் அண்டு ஒயிட் அண்டு கலர் என்று டிராவல் ஆகின்ற காரணத்தால் சாதாரண ரசிகர்கள் குழம்பி போக வாய்புண்டு… அது போன்ற கதை…
படத்தின் ஆரம்பத்தில் இருந்து படத்தை பார்த்து மிக நுனுக்கமாய் பார்த்து வந்தால் தான் உங்களை குழப்பும் கேள்விகளுக்கு படத்தில் விடை கிடைக்கும்..
‘ நடிகர் சித்தார்த்துக்கு முக்கியமாக இன்சோமேனியா ஏன் வருது…?? பிளாக் அண்டு ஒயிட் எதுக்கு…? கனவுன்னா கலர்லேயே சொல்லி இருக்கலாமே என்று கெட்பவர்கள் அத்தனை பேரின் கேள்விகளுக்கும் பதில் இருக்கின்றது…
பிளாக் அண்டு ஒயிட் காட்சிகள் படம் நெடுகிலும் டிராவல் செய்வது வித்தியாசமான அனுபவம்.
படத்தை கன்னட லுசியா பார்க்காதவர்கள்…. சினிமா திரைக்கதை விரும்பிகள், உலக சினிமா ரசிகர்கள்… அனைவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய திரைப்படம்…. ஏகிளாஸ் பிகிளாஸ்.. ஓகே.. சிகிளாசில் படத்தை குழப்பி எடுத்து இருக்கானுங்க என்று சொல்லுவார்கள்..
என்னை பொருத்தவரை பார்த்தே தீர வேண்டிய திரைப்படம் எனக்குள் ஒருவன்.

===
படத்தோட ரேட்டிங்
படத்துக்கு பத்துக்கு ஏழு.

=======

பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.

 

எனக்குள் ஒருவன் விடியோ விமர்சனம்….

http://youtu.be/2iYoGyxi318